Just In
- 3 min ago
டெய்லி இந்த விஷயத்தை பண்ணுறவங்க... கண்டிப்பா இந்த 8 உணவுகளை சாப்பிடவே கூடாதாம் தெரியுமா?
- 51 min ago
மாரடைப்பிற்கும், இதய செயலிழப்புக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எது மிகவும் ஆபத்தானது தெரியுமா?
- 2 hrs ago
சைக்கிளிங் Vs வாக்கிங் - இவற்றில் எது சிறந்தது?
- 7 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பணப்பற்றாக்குறையால் சில சிக்கல்கள் உண்டாகலாம்...
Don't Miss
- News
"அதை" மறக்க முடியுமா?.. துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ்.. நமது அம்மாவிலிருந்து நீக்கம் ஏன்? ஜெயக்குமார்
- Finance
பெட்ரோல் வேணுமா, டோக்கன் வாங்குங்க முதல்ல.. அளந்து அளந்து ஊற்றும் நிலை..!
- Automobiles
கீல்கீயை ஆக்டிவேட் செய்த ரோல்ஸ்ராய்ஸ் ஓனர், காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு தப்பிய திருடர்கள் நடந்தது என்ன?
- Movies
கதிர் -முல்லை சீக்கிரமா வீட்டுக்கு வந்துடுங்க.. ஓபனாக விருப்பத்தை சொன்ன ரசிகர்கள்!
- Sports
இந்திய அணியில் ஒதுக்கப்பட்ட உம்ரான் மாலிக்.. வெளிப்படையாக உண்மையை கூறிய ஹர்திக் பாண்ட்யா.. விவரம்!
- Technology
என்னா மனுஷன்யா? சின்ன டுவிஸ்ட் உடன் மிக மலிவு விலை பிளான்: இன்பதிர்ச்சி கொடுத்த Netflix CEO
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஆண்களின் அழகை அதிகரிக்கும் சில எளிய ஃபேஸ் பேக்குகள்!
பெண்கள் மட்டும் தான் அழகாக இருக்க ஃபேஸ் பேக்குகள், ஃபேஸ் மாஸ்க்குகளை பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆண்களும் தங்கள் அழகை அதிகரிப்பதற்கும், இளமையாக காட்சியளிக்கவும் ஃபேஸ் பேக்குகளைக் கட்டாயம் பயன்படுத்தலாம். சொல்லப்போனால் பெண்களை விட ஆண்கள் சரும பிரச்சனையால் அதிகம் கஷ்டப்படுவார்கள். ஆனால் என்ன அவர்கள் அதை வெளிப்படையாக மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்.
பெண்களின் சருமத்தை விட ஆண்களின் சருமம் சற்று கடினமாக இருக்கும். அதேப் போல் ஆண்கள் அதிகம் சுற்றுவதால், அவர்களின் சருமத்தில் இறந்த செல்களின் தேக்கம் மற்றும் அழுக்குகள் அதிகம் இருக்கும். இதை ஆண்கள் ஆரம்பத்திலேயே சரியான பராமரிப்பு கொடுத்து சருமத்தை சுத்தம் செய்து வந்தால், சருமம் கருமையாக காணப்படுவதைத் தவிர்க்கலாம்.
ஆண்களுக்கு எந்த சருமத்தினர் எம்மாதிரியான ஃபேஸ் பேக்குகளைப் போட வேண்டும் என தெரியாது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை எந்த வகை சருமத்தினர் எந்த மாதிரியான ஃபேஸ் பேக்கைப் போட வேண்டுமென தெளிவாக கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றினால், ஆண்கள் நிச்சயம் தாங்கள் சந்திக்கும் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

கருமையைப் போக்கும் தயிர் மற்றும் மஞ்சள்
ஆண்கள் அதிகம் சன் ஸ்கிரீன் பயன்படுத்தமாட்டார்கள். எனவே அவர்களது சருமம் எளிதில் கருமையாகிவிடும். ஆனால் இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கும். அதற்கு ஒரு டீஸ்பூன் தயிருடன் 3 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கருமையாக இருக்கும் கை, கால்களிலும் தடவவும். பின் 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, நீரில் கழுவ வேண்டும்.

வறட்சியைப் போக்கும் ஓட்ஸ் மற்றும் மில்க் க்ரீம்
நிறைய ஆண்கள் சரும வறட்சியால் அவஸ்தைப்படுவார்கள். சருமம் அதிகம் வறட்சியடையும் போது, அசிங்கமா தோல் உரிந்து காணப்படும். அதனைப் போக்க ஓட்ஸ் மற்றும் மில்க் க்ரீம் கொண்டு ஃபேஸ் பேக் போடுங்கள். அதுவும் சிறிது மில்க் க்ரீம் உடன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

பருக்களைப் போக்கும் வேப்பிலை
பெண்களைப் போன்றே ஆண்களும் முகப்பருவால் அதிகம் கஷ்டப்படுவார்கள். இதற்கு வேப்பிலை நல்ல பலனைத் தரும். வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், பருக்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, பருக்களைப் போக்கும். அதற்கு 1 டீஸ்பூன் வேப்பிலை பொடியுடன், சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்தால் பருக்கள் காணாமல் போகும்.

முகப் பொலிவை அதிகரிக்கும் துளசி மற்றும் புதினா
இந்த புதினா ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள பருக்களைப் போக்குவதோடு, பொலிவிழந்து காணப்படும் முகத்தை பொலிவோடும் பிரகாசமாகவும் மாற்றும். இது ஆண்களுக்கான மிகச்சிறந்த ஃபேஸ் பேக். அதற்கு சிறிது துளசி மற்றும் புதினா பவுரை எடுத்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளலாம் அல்லது சிறிது துளசி மற்றும் புதினா இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளலாம். பின் அதை முபத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

சென்சிடிவ் சருமத்தினருக்கு தேன் மற்றும் ஆரஞ்சு
ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் உடன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றது. இதனால் சரும நிறம் அதிகரித்துக் காணப்படும்.

கடலை மாவு பேக்
பெண்கள் மட்டும் தான் கடலை மாவைப் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆண்களும் கட்டாயம் பயன்படுத்தலாம். இது அனைவருக்கு முகப் பொலிவை அதிகரிக்க உதவும். முக்கியமாக இது கரும்புள்ளிகளைப் போக்கும். அதற்கு 1 டீஸ்பூன் கடவை மாவுடன், 3 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு 20 நிமிடம் காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

தயிர் மற்றும் அரிசி மாவு பேக்
இந்த ஃபேஸ் பேக் சருமத்தின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களின் தேக்கத்தை வெளியேற்ற உதவும். இது அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றது. அதற்கு அரிசி மாவை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீர் பயன்படுத்தி தேய்த்துக் கழுவ வேண்டும். இதனால் சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.