Latest Updates
-
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்..
இந்த சருமக்குழிகளை செலவே இல்லாம ஈஸியா எப்படி சரி பண்ணலாம்?
சருமத் துளைகள் மற்றும் பருக்களைப் போக்கும் இயற்கை வீட்டு வைத்திய முறைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
முகப்பருக்கள் மாசுக்கள். தூசி, எண்ணெய் சருமம், எண்ணெய் உணவுகள். ஸ்நாக்ஸ் ஆகியவற்றினால் அவ்வப்போது சருமத்தில் பருக்கள் உண்டாகும்.
அது அவ்வப்போது வரும்.

பின் மறைந்து போய்விடும் என்று நாம் சாதாரணமாக விட்டுவிடுகிறபொழுது தான் அது வடுக்களாக முகத்தில் அப்படியே தங்கிவிடுகிநது. காலப்போக்கில் அந்த வடுக்கள் சருமத்தில் குழிகளாக மாறிப்போகின்றன.

சருமக்குழிகள்
சருமக் குழிகளை எப்படி சரி செய்வது என்று யோசிப்பதற்கு முன்னால், அது பருவாக இருக்கும்பொழுதே, சரி செய்து விடுங்கள். அதுதான் மிகச்சிறந்த வழி. அப்படியே சருமக் குழிகள் வந்துவிட்டாலும் தை போக்குவதற்காக கண்ட கெமிக்கல்கள் கொண்ட கிரீம்கள் போடுவதை நிறுத்தி விட்டு, இயற்கையாக வீட்டில் உள்ள சில பொருள்களைப் பயன்படுத்தினாலே போதும். சருமக்குழிகளை சரி செய்து கொண்டுவிட முடியும்.

முகப்பருக்கள்
முகப்பருக்கள் தோன்றி வந்து மறைந்தாலும், அந்த பரு வந்து போனதற்கான தடங்கள் மட்டும் அப்படியே இருக்கும். பொதுவாக பருக்கள் வந்து மறைந்த இடங்களில், அவை வந்ததற்கான தடங்கள் அப்படியே இருக்கும். பருக்கள் வந்து நீங்கிய இடத்தில், சருமம் பாதிக்கப்பட்ட அந்த இறந்த செல்களை நீக்கினால் தான் தோலில் உயிரணுக்கள் புதிதாகத் தோன்றும். சருமம் பளிச்சிடும். அதற்கு முதலில் சருமம் வறட்சியடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு மிக முக்கியமாகப் பயன்படுதவது கற்றாழை தான். அந்த கற்றாழையைக் கொண்டு, எவ்வாறு சருமத் துளைகள் மற்றும் திட்டுக்களைப் போக்க முடியும்.

கற்றாழை
சோற்றுக் கற்றாழையில், கிருமிகளை அழிக்கின்ற தன்மை மிக அதிகம். அதோடு சருமத்துக்குத் தேவையான உயிர்ச் சத்துக்களும் அதில் நிறைய உண்டு. கற்றாழையில் கிருமிகளை அழிக்கும் தன்மை அதிகமாக இருக்கும். கற்றாழையில் உள்ள என்சைம் நம்முடைய சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும். சருமத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கள் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளும்.

சரும வீக்கம்
கற்றாழையின் தோலில் உள்ள கசப்புத் தன்மையானது, முகத்தில் தோன்றும் சருமத் திட்டுக்கள், வெண் புள்ளிகள் ஆகியவற்றை நீக்கும். சருமம் வறட்சி அடையாமல் இருக்கும். சில சமயம் பருக்களால் உண்டாகும் சரும வீக்கத்தையும் சரிசெய்யும்.

ஆலிவேரா எப்படி பயன்படுத்தலாம்?
சோற்றுக் கற்றாழையின் மேல் பகுதியில் இருக்கின்ற தோலை நீக்கிவிட்டு, உள்ளிருக்கும் ஜெல்லை தண்ணீரில் நன்றாக இரண்டு மூன்று முறை சுத்தம் செய்தால், அதிலுள்ள கசப்புத் தன்மை ஓரளவுக்குக் குறைந்து விடும். அந்த சுத்தம் செய்யப்பட்ட ஜெல்லுடன் தரமான மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து, மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
பருக்கள் மற்றும் சரு கருந்திட்டுக்கள் உள்ள இடத்தில் இந்த ஜெல்லை தடவி, இருபது நிமிடங்கள் வரையில் அப்படியே வைத்திருக்கவும். வாரத்துக்கு இரண்டு முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்திருக்கும். இதன் மூலம் உடல் உஷ்ணமும் குறையும். பருக்கள் வந்த இடத்தில் வடுக்கள் ஏதும் இல்லாமல் சுத்தமாக நீங்கி விடும்.

ஆலிவ் ஆயில்
இயற்கையாகவே முகப்பருக்களை தழும்புகள் தெரியாமல் மறையச் செய்யும் தன்மை கொண்டது டீ ட்ரி எண்ணெய், ஆலிவ் ஆயில் போன்றவை. குறிப்பாக, நல்லெண்ணெயுடன் சிறிது டீ ட்ரி எண்ணெயைக் கலந்து, பருக்கள் உள்ள இடத்தில் இரவு நேரத்தில் தடவிக் கொண்டு படுத்துக் கொள்ளலாம். காலையில் வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தைக் கழுவிக் கொள்ளலாம். இது தோலிற்கு மிகுந்த மென்மையைத் தரும். இதை தொடர்ந்து செய்து வந்தால் பரு வருவதே நின்றுவிடும். முகம் பளிச்சென மிக மென்மையாக மாறிவிடும்.

ஜாதிக்காய்
ஜாதிக்காய் சருமுத்தில் உரைத்து தடவுகிற பொழுது லேசாக எரிச்சல் இருக்கும். சிலர் ஜாதிக்காயை தடவினால் சருமம் வெந்துவிடும் என்று பயமுறுத்துவார்கள். ஆனால் எதையுமே அளவோடு பயன்படுத்தினால் அதன் நன்மைகள் முழுதாகக் கிடைக்கும்.
ஜாதிக்காய் பவுடரை பச்சையான காய்ச்சாத பால் சேர்த்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் மெலிதாக அப்ளை செய்து பத்து நிமிடம் வைத்திருந்தால் போதும். பின் நன்கு காய்ந்ததும் பருக்களும் சருமக் குழிகளும் சரியாகிவிடும்.



Click it and Unblock the Notifications