சன் ஸ்க்ரீன் லோஷன் போடும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

எந்த ஒரு பியூட்டீசனும் சன் ஸ்கிரீன் முக்கியத்துவம் பற்றி உங்களிடம் அழுத்தம் கொடுத்திருக்க  மாட்டார்கள். உங்கள் சருமத்தை நேரடியாக  சூரிய ஒளிக்கதிர்களிடம் வெளியில் காட்டுவதால் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் சருமத்தை பாதிப்படையச் செய்கிறது. நீங்கள் வெளியில் வரும் போது சன் ஸ்கிரீன் இல்லாமல் வருவது உங்கள் சருமத்தை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கும். 

இந்த கதிர்களால் ஏற்படும் சரும நிற மாற்றம், சீக்கிரம் வயதாகுதல், முகக் கரும் புள்ளிகள் போன்ற பிரச்சினை யோடு இந்த புற ஊதாக் கதிர்கள் உங்கள் சரும உள்ளடுக்குகளில் ஊடுருவி DNA வடிவமைப்பையே மாற்றி சரும புற்று நோயை ஏற்படுத்தி விடுகிறது. 

கண்டிப்பாக இதை படித்த பிறகு சன் ஸ்கிரீன் வாங்க நினைப்பீர்கள். கொஞ்சம் பொறுங்கள் அதுக்கு முன்னாடி உங்களுக்கு தகுந்த சன் ஸ்கிரீன்யை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லவா. 

Ever Wondered What SPF On Your Sunscreen Implies?

இங்கே இந்த கட்டுரையில் ஒரு நல்ல சன் ஸ்கிரீன்யை எப்படி வாங்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 

முதலில் இந்த சன் ஸ்கிரீன்யை வாங்க SPF மிகவும் முக்கியம். நீங்கள் கேட்பீங்க அப்படினா என்ன என்று. வாங்க அதை பற்றி கீழே பார்க்கலாம். 

SPF என்றால் என்ன? /Sun Protection Factor? 

SPF என்பது எந்த அளவு சன் ஸ்கிரீன் உங்களை சூரியனின் புற ஊதாக் கதிர்களான UVA மற்றும் சரும பாதிப்பை ஏற்படுத்தும்  UVB லிருந்து காக்கிறது என்பதாகும். நிறைய அளவிலான SPF உடைய சன் ஸ்கிரீன் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. SPF 15 தான் முதல் தொடக்கம் ஆகும். இந்த SPF 15 உங்களை சூரியனின் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து 150 நிமிடங்கள் எந்த வித பாதிப்பும் இல்லாமல் காக்கிறது. இது 93% UVB கதிர்களை தடுக்கிறது. உங்களது சருமம் எந்த ஒரு தடுப்பும் இல்லாமல் இருந்தால் 15 நிமிடங்களில் உங்கள் சருமம் எரிய ஆரம்பித்து விடும். 

SPF 30 உடன் ஒப்பிடும் போது இது 97% UVB கதிர்களை தடுக்கிறது. மேலும் இது அதிகமான பாதுகாப்பையும் தருகிறது. எனவே இதிலிருந்து தெரியும் விஷயம் என்னவென்றால் SPF 15 யை ஒப்பிடும் போது SPF 30 இரண்டு மடங்கு வேலை செய்ய வேண்டும். ஆனால் அவை அவ்வாறு செய்வதில்லை என்பது நன்றாக புரிகிறது. 

Ever Wondered What SPF On Your Sunscreen Implies?

சரும நிபுணர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால் அதிகமான SPF பயன்படுத்துவது எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. இதில் SPF 15 அல்லது 30 எதை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் 2 மணி நேரத்திற்கு முன்னதாக மறுபடியும் சன் ஸ்கிரீன் தடவக் கூடாது. இதனால் எந்த ஒரு பயனும் ஏற்படாது என்கின்றனர். 

சன் ஸ்கிரீன்யை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியவை

அடுத்து சன் ஸ்கிரீன்யை தேர்ந்தெடுக்கும் போது அதன் ஆயுட்காலத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். இது தண்ணீர் மற்றும் வியர்த்தல் போன்றவற்றால் அழியாமல் 2 மணி நேரம் மறுபடியும்  சன் ஸ்கிரீன் பயன்படுத்தும் வரை இருக்குமா என்பதையும் பார்க்க வேண்டும். 

Ever Wondered What SPF On Your Sunscreen Implies?

அடுத்து எந்த அளவு சன் ஸ்கிரீன்யை எடுத்து பயன்படுத்த வேண்டும் என்பதையும் பார்க்க வேண்டும். சில பேர் 1/4 அல்லது 1/2 அளவு மட்டுமே பயன்படுத்துவதால் சூரியக்கதிர்களிடம் இருந்து அரை குறையான பாதுகாப்பு மட்டுமே கிடைக்கிறது. நீங்கள் 1/2 அளவு SPF 30 சன் ஸ்கிரீன்யை பயன்படுத்தினால் அது உங்களுக்கு SPF 15 சன் ஸ்கிரீன் பயனை மட்டுமே தரும். சரும நிபுணர்கள் 2மில்லி கிராம் அளவு  சன் ஸ்கிரீன்யை ஒரு சதுர சென்டி மீட்டர் சருமத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்கின்றனர். எனவே தகுந்த போதுமான அளவை பயன்படுத்துவதும் முக்கியம். 

எந்த பொருளை வாங்கினாலும் அது வாட்டர் ரெசிஸ்டண்ட் ஆக இருப்பது முக்கியம். நீங்கள் வெளியில் செல்வதற்கு அரைமணி நேரம் முன்னதாகவே சன் ஸ்கிரீன்யை தடவிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அது உங்கள் சருமத்துவாரங்களில் ஊடுருவி சிறந்த பாதுகாப்பை தரும். 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சன் ஸ்கிரீன்யை மறுபடியும் தடவ மறந்து விடாதீர்கள். 

இந்த கருத்துகளை மனதில் கொண்டு சன் ஸ்கிரீன்யை  பயன்படுத்தி உங்கள் சருமத்தை சூரியக்கதிர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். 

English summary

Ever Wondered What SPF On Your Sunscreen Implies?

Ever Wondered What SPF On Your Sunscreen Implies?
Story first published: Thursday, July 6, 2017, 8:00 [IST]