For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்றும் இளமையாய் இருக்கனுமா? உங்களுக்கு சில சின்ன சின்ன ட்ரிக்ஸ்!!

உங்களுக்கு வயதாகிவிட்டது என்பதை முகத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். முகச்சுருக்கம் சீக்கிரம் வராமல் தடுக்க சில யோசனைகள்

|

ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்கு வயதாவதை நினைத்து எல்லாருக்கும் வருத்தமுண்டு இந்த இளமை இன்னும் நீடிக்காதா? நாம் இப்படியே இருந்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் பலருக்கும் இருக்கும். உங்களுக்கு வயதாகிவிட்டது என்பதை முகத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம்.

Tips To Reverse Ageing And Reduce Wrinkles

முகச்சுருக்கம் சீக்கிரம் இளவயதிலேயே வராமல் தடுக்க சில மெனக்கெடல்கள் அவசியம். வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே சுருக்கங்களை எப்படி போக்கலாம், எளிதாக செய்யக்கூடிய பயிற்சிகள் என்னென்ன வென்று தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எளிய பயிற்சி :

எளிய பயிற்சி :

சிரிப்பு :

கண்ணாடி முன்பாக நின்று ஒரு முறை மூச்சை இழுத்துவிடுங்கள். ஆங்கிலத்தில் உள்ள உயிர் எழுத்துக்களான a,e,i,o,u இதன் ஓசைகளுடன் சிரியுங்கள்...ஐந்து முறை திரும்ப திரும்ப செய்யுங்கள். கழுத்துக்கும் வாயில் உள்ள தசை நார்களுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கும்.

கன்னம் :

கன்னத்தில் உள்ள தசைகளை பிடித்து பிஷ் பவுட் போல வாயை வைத்துக் கொள்ளுங்கள். (செல்ஃபி எடுக்கும் போது கொடுக்கும் போஸ்!) பத்து நொடிக்கு இப்டி இருக்கவேண்டும். பின்னர் ஒரு இரண்டு நொடி இடைவேளி பின்னர் மீண்டும் அதே பிஷ் பவுட் இப்படி இருபது முறைசெய்ய வேண்டும்.

உதடு :

உங்களது ஆட்காட்டி விரலை வைத்து உதடுகளுக்கும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளுக்கும் லேசாக பிரசர் கொடுங்கள் உங்களால் முடிந்த வரை லேசாக கொடுத்தாலே போதுமானது ரொம்பவும் அழுத்த வேண்டாம்.

கிஸ்ஸிங் :

இது நாம் ஏற்கனவே செய்த பிஷ் பவுட்டின் அடுத்த ஸ்டேஜ்.கிஸ்ஸிங் போஸ். இதே போஸில் 30நொடிகள் வரை இருக்க வேண்டும் பின்னர் இரண்டு நிமிட ஓய்வு மீண்டும் இதே போஸ் இப்படி 10 முறை செய்ய வேண்டும்.

ஆலிவ் ஆயில் :

ஆலிவ் ஆயில் :

ஆலிவ் ஆயிலைக் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்யுங்கள். இதில் ஆன்ட்டிஆக்ஸிடண்ட் , விட்டமின் ஏ போன்ற சத்துக்கள் இருக்கின்றன. சருமத்தில் உள்ள செல்களை எல்லாம் புதுப்பிக்கும் ஆற்றல் உடையது. நீண்ட நேரம் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவிடும்.

ஆலிவ் ஆயிலுடன் இரண்டு சொட்டு தேன் மற்றும் க்ளிசரின் கலந்து தினமும் முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள டெட் செல்களை நீக்குவதுடன் ஸ்கினை டைட்டாக்கிடும்.

இஞ்சி :

இஞ்சி :

இஞ்சியில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் முகச்சுருக்கங்களை போக்கும் பொருட்களில் முக்கிய இடம் வகிக்கிறது. முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும் எலாஸ்டின் சுரப்பை குறைகிறது.

ஒரு டம்பளர் தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள். அத்துடன் ஒரு டீஸ்ப்பூன் அளவு இஞ்சியை சேர்த்து இரண்டு நிமிடம் கொதித்ததும் இறக்கிவிடுங்கள் அதில் சிறிதளவு தேன் கலந்து தினமும் குடிக்கலாம்.

வாழைப்பழம் :

வாழைப்பழம் :

வாழைப்பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள் உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நல்லது. வாழைப்பழத்தை நன்றாக மசித்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை இப்படிச் செய்வதால் நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க முடியும்.

எலுமிச்சம் பழச்சாறு :

எலுமிச்சம் பழச்சாறு :

இயற்கையாகவே சிட்ரஸ் ஆசிட் நிறைந்த இது ஸ்கின் டேன் போக்குவதில் முக்கிய இடம் வகிக்கிறது. இது டெட் ஸ்கின் செல்களை நீக்கி முகத்தில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ளும். அதோடு முகத்தசைகளுக்கு எலாஸ்ட்டிசிட்டி கொடுத்திடும்.

அன்னாசிப்பழம் :

அன்னாசிப்பழம் :

ஜீரணத்தை எளிதாக்கும் பழங்களில் அன்னாசிப்பழமும் ஒன்று. இதில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் மற்றும் விட்டமின் சி போன்றவை சருமத்திற்கு போஷாக்கு தருபவை. சருமத்தை பொலிவாக்குவதுடன் என்றும் இளமையாக வைத்திருக்க உதவிடும். அன்னாசிப்பழத்துண்டை அரைத்து அப்படியே முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்தி லேசான வெதுவெதுப்பான நீரில் கழுவினால் போதும்.

வெள்ளரித் தயிர் :

வெள்ளரித் தயிர் :

கருவளையத்தை போக்குவதற்கு துணை புரியும் வெள்ளரிக்காய் சருமத்தையும் பாதுகாக்கிறது. அதோடு இதில் சேர்க்கப்படும் தயிரில் இருக்கும் லேக்டிக் ஆசிட்டுக்கு சருமத்தில் உள்ள டெட் செல்களை நீக்கும் ஆற்றல் உண்டு.

இரண்டு தேக்கரண்டி தயிர் அத்துடன் அரைத்த வெள்ளிரி பேஸ்ட் கலந்து முகத்தில் பூசி கழுவுங்கள் வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் போதும்.

மிக முக்கியமானது :

மிக முக்கியமானது :

இவை எல்லாவற்றையும் விட தினமும் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. தினமும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். 8 முதல் 10 டம்பளர் வரை தண்ணீர் அருந்த வேண்டும்.

டென்சன், கோபம்,விரக்தி இவற்றையெல்லாம் முடிந்த அளவிற்கு விரட்டிவிடுங்கள். இறுதியாக ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Reverse Ageing And Reduce Wrinkles

Ageing is Natural. Here the things you should know how to avoid wrinkles due to ageing.
Story first published: Saturday, July 15, 2017, 11:49 [IST]
Desktop Bottom Promotion