Latest Updates
-
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
சூரியகாந்தி எண்ணெய் முகத்தை பளிச்சென மாற்றுமா?
இங்கே சூரியகாந்தி எண்ணெய்யை சருமத்திற்கு பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது
சூரியகாந்தி எண்ணெயை சமைப்பதற்காக பயன்படுத்தி இருப்போம் ஆனால் இது சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது என தெரியுமா? இது என்னென்ன சரும பிரச்சனைகளை போக்குகிறது என பார்க்கலாம்..

1. முகப்பரு
முகப்பருவை உண்டாக்கும் கிருமிகளை சூரியகாந்தி எண்ணெய் எதிர்த்து போராடுகிறது.
யோகார்ட், இரண்டு டிஸ்பூன் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் ஒரு டிஸ்பூன் விளக்கெண்ணையை முகத்தில் 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

2. முக சுருக்கம் நீங்க
இரண்டு டிஸ்பூன் சூரியகாந்தி எண்ணெய்யை ஒரு டிஸ்பூன் கற்றாளை ஜெல் மற்றும் இலவங்க பட்டையை சேர்ந்து முகத்தில் மாஸ்க் போட்டு 15 நிமிடங்கள் கழித்து அதை கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.

3. வெயிலால் உண்டான கருமை
அதிகமாக வெயிலில் செல்வதால் முகத்தில் கருமை உண்டாகும். இதற்கு ஒரு கப் ஆப்பிள் சீடர் வினிகரில் இரண்டு டிஸ்பூன் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் ஒரு டிஸ்பூன் கற்றாளை ஜெல் ஆகியவற்றை கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.

4. சருமத்தை மென்மையாக்க
சூரியகாந்தி எண்ணெய் முகத்தை மென்மையாக மாற்றுகிறது. சிறிதளவு சூரியகாந்தி எண்ணெய்யை மிதமான சூட்டில் காய்ச்சி முகத்தில் மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் முகம் மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும்.

5. கண் வீக்கம்
கண்களில் உள்ள வீக்கத்தை போக்கவும் சுருக்கங்களை நீக்கவும், உங்கள் கண்களை சூரியகாந்தி எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்து இரவு முழுவதும் விட்டுவிட்டு காலையில் குளிர்ந்த நீரில் கழுவினால் கண்கள் சுருக்கங்கள் இன்றி பளிச்சிடும்.



Click it and Unblock the Notifications
