Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
பிரசவ தழும்புகள் என்ன செய்தாலும் போகவில்லையா? கண்டிப்பாக இவை பலன் தரும்!! ட்ரை பண்ணுங்க!!
உடலில் மெல்லிய கோடுகள் போல ஏற்படுவது தான் ஸ்ட்ரேட்ச் மார்க். இது உடல் எடை அதிகரிப்பு, உடல் எடை குறைப்பு அல்லது பேறு காலங்களில் ஏற்படக்கூடியது. இது உடலில் எந்த இடங்களில் வேண்டுமானாலும் ஏற்படக்கூடியவை. ஆனால், பெரும்பாலும் இடுப்பு, வயிறு மற்றும் தொடை பகுதிகளில் தான் ஏற்படும்.
ஸ்டரேட்ச் மார்க்கை போக்குவதற்கு எத்தனையோ சிகிச்சை முறைகள் உள்ளன. ஆனால், அந்த சிகிச்சை முறைகள் பக்க விளைவுகள் இல்லாமல் இருப்பதில்லை. வேறு எதாவது அழகு சாதன முறைகளை உபயோகித்தால் பணம் அதிகமாக செலவிட நேரிடும். எனவே, இது போன்ற பிரச்சனை ஏற்படுத்தக்கூடிய வழிமுறைகள் கையாளுவதற்கு பதிலாக இயற்கை நமக்கு அளித்த பொருட்களை வைத்து நாமே இவற்றை எளிமையாக சரிசெய்து விடலாம்.

அந்த மாதிரியான இயற்கை அளித்த அற்புத பொருள் தான் தேங்காய். தேங்காயை எண்ணெயை பயன்படுத்தி உடலில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்களை கண்ணுக்கு எளிதில் தெரியாத மாதிரி குறைத்துவிடும். உடலில் எளிதில் உறிஞ்சிக் கொள்ளக்கூடிய எண்ணெய் தேங்காய் எண்ணெய்.
இத்துடன் பிற இயற்கை பொருட்களை சேர்த்து உபயோகித்தால் சீக்கிரம் கோடுகள் மறைவதை நீங்களே பார்க்கலாம். இங்கே, தேங்காய் எண்ணெயை எப்படி எல்லாம் சருமத்திற்கு பயன்படுத்தி ஸ்ட்ரெட்ச் மார்க்களை போக்கலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் இப்போது அவற்றை பார்க்கலாம்...

பாதிக்கப்பட்ட பகுதியில் நேரடியாக தடவவும் :
தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். இதனால் விரைவில் சருமத்தில் உள்ள அசிங்கமான ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மறைய ஆரம்பிக்கும். நல்ல பலனைப் பெற இந்த முறையை தினமும் குறைந்தது 2 தடவை செய்யுங்கள்.

தேங்காய் எண்ணெயுடன் ஆலிவ் ஆயில் :
1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அதனை ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள பகுதியில் தடவி வட்ட சுழற்சியில் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள்.

தேங்காய் எண்ணெயுடன் கொக்கோ வெண்ணெய் :
1 டீஸ்பூன் கொக்கோ வெண்ணெயுடன், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி குறைந்தது 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த பழங்கால சிகிச்சை முறையை வாரத்திற்கு குறைந்தது 3 முறை பின்பற்றி வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

தேங்காய் எண்ணெயுடன் கற்றாழை ஜெல் :
2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள பகுதியில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 1 மணிநேரம் நன்கு ஊற வைத்து, நீரில் நனைத்த துணியால் துடைக்க வேண்டும். இந்த முறையை தினமும் பின்பற்றினால், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மறைய ஆரம்பிப்பதைக் காணலாம்.

தேங்காய் எண்ணெயுடன் விளக்கெண்ணெய் :
1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்ட்ரெட்ச் மார்க் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்து, 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

தேங்காய் எண்ணெயுடன் காபி :
1 டீஸ்பூன் காபி தூளுடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 5-10 நிமிடம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூள்:
1 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

தேங்காய் எண்ணெயுடன் வைட்டமின் ஈ ஆயில்
3-4 வைட்டமின் ஈ கேப்ஸ்யூலை எடுத்து அதில் உள்ள எண்ணெயை ஊசி பயன்படுத்தி துளையிட்டு ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்ட்ரெட்ச் மார்க் பகுதியில் தடவி குறைந்தது 10 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் கழித்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

தேங்காய் எண்ணெயுடன் பாதாம் எண்ணெய்
இது தான் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் போக்குவதற்கான கடைசி வழி. அதற்கு 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அந்த எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 4 முறை செய்து வந்தால், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வேகமாக மறைவதைக் காணலாம்.



Click it and Unblock the Notifications











