Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
வயதான தோற்றத்தை மாற்றியமைக்க, இந்த பேஸ்டை முகத்தில் தடவுங்க!
முகத்தில் உள்ள சுருக்கங்களை எளிதான முறையில் போக்குவது எப்படி என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது
முகத்தில் உள்ள சுருக்கங்கள் உங்களது வயதினை அதிகரித்து காட்டும். இதனால் நீங்கள் இளம் வயதாக இருந்தாலும் கூட உங்களது முகத்தில் உள்ள சுருக்கங்கள் உங்களை வயதானவர்களாக காட்டும். மேலும் உங்களது தோற்றத்தையே அது வேறுபடுத்திக் காட்டும்.
உங்களது அழகை குறைத்துக் காட்டும் இந்த முக சுருக்கங்களை நீங்கள் எளிமையாக இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தி போக்கலாம். சில இயற்கை பொருட்களை ஒன்றாக கலந்து முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலமாக, அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்களது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கும். இந்த பகுதியில் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்தி நல்ல பலனை பெறுங்கள்..!

நல்லெண்ணெய்
நல்லெண்ணை, பாதாம் எண்ணை இரண்டையும் சமமாக எடுத்து உடல் முழுவதும் தடவி, 3 மணி நேரம் ஊறவையுங்கள். பின்னர் கோதுமைத் தவிடால் ஒத்தடம் கொடுத்து கடலை மாவினால் தேய்த்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முகச் சுருக்கம் மாறும்.

ஜூஸ் குடியுங்கள்
வாரம் ஒன்று அல்லது 2 முறை ஆரஞ்சு ஜூஸ் அல்லது கேரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம், ஈரப்பதத்துடன் பளபளப்பாக இருக்கும். உங்களது ஆரோக்கியமும் இதனால் மேம்படும். இளமையான தோற்றம் கிடைக்கும்.

வெந்தயக்கீரை
வெந்தயக் கீரை நமது சருமத்தில் சுருக்கம் விழாதபடி எப்போதும் ஈரப்பசையுடன் வைக்கும். எனவே தோல் சுருக்கத்தை விரட்ட வெந்தயக் கீரையை நீங்கள் மறக்காமல் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ‘ஏ' இளமையான சருமத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

சந்தனம்
சந்தனப்பொடியுடன், பன்னீர், கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்துவர முகச் சுருக்கம் நீங்கும்.

கடலை மாவு
சிறிதளவு கடலை மாவுடன், கேரட் ஜூசை கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவவும். இப்படி செய்தால், நாளடைவில் முகச்சுருக்கம் நீங்கும்.

பப்பாளி பழம்
பப்பாளிப் பழத்தை நன்றாக அரைத்து அத்துடன் சில துளிகள் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசலாம். இதனால் சரும நிறம் கூடுவதோடு, சருமம் ஈர்ப்பதமாகவும் சுருக்கங்கள் இன்றியும் இருக்கும்.

தக்காளி
அடிக்கடி தக்காளி சாறு அல்லது பாதாம் எண்ணெய் அல்லது நன்றாக பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தால், விரைவில் சுருக்கம் உண்டாவது தாமதமாகும். உங்களது சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

பாலேடு
பாலேட்டுடன் பன்னீர் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். பதினைந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ சருமம் இறுக்கமாகி மென்மையாகி விடும். இவ்வாறு வாரத்திற்கு மூன்று தடவை செய்வது நல்ல பலன் தரும்.

எலுமிச்சை தோல்
எலுமிச்சையின் தோலை காய வைத்து பொடித்து பன்னீரில் கலந்து தயிர், முள்ளங்கி சாறு கலந்து முகத்தில் தேய்த்து ஊறியதும் கழுவினால் முகம் பளபளப்பாகும். இது உங்களது இளமையை கெடுக்கும் சுருக்கங்களை போக்கும்.

பாதாம்
தக்காளி விழுது, பாதாம் விழுது தலா அரை தேக்கரண்டி எடுத்து கலந்து முகத்தில் தடவுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.

தேங்காய் எண்ணெய்
முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பாசிப்பயறு மாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

தயிர்
சருமம் மிருதுத்தன்மையை இழந்து விட்டால், தக்காளி விழுதுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் பூசுங்கள். இதனை தொடர்ந்து வாரம் இருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

புதினா
இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.

ஃபேஸ் பேக்
ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும்.

பேஷியல் தோற்றத்திற்கு..
ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications











