Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
அழகான கொழுக்கொழு கன்னங்களை பெற சூப்பரான டிப்ஸ்!
கொழுக்கொழு கன்னங்களை பெற சூப்பரான டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது
முகத்திற்கு பொலிவு தருபவை கன்னங்கள். கன்னங்கள் கொஞ்சம் கொழுக்கொழு என்று இருந்தாலே உங்கள் அழகை அதிகரித்துக் காட்டும். அதேசமயம் என்னதான் உடல் என்ன தான் குண்டாக இருந்தாலும் ஒட்டிய கன்னங்கள் முகத் தோற்றத்தையே கெடுத்துவிடும். எனவே ஒட்டிய கன்னங்களை மெருகேற்ற ஆரோக்கிய உணவு முறை அவசியம். கன்னங்களை மெருகேற்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம். அதோடு சில மசாஜ் முறைகளையும் செய்ய வேண்டியது அவசியம்.

உணவு முறைகள்
அன்றாட உணவில் புரதம், மாவுச் சத்து, கொழுப்பு சத்து, நிறைந்த உணவுகளை நிறைய சேர்க்க வேண்டும். காலையில் எழுந்து சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து கலவை செய்து முகத்திற்கு பேசியல் போட கன்னம் பளபளப்பாக மாறுவதோடு குண்டாகும்.

உப்பு நீர்
மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து அதை வாயில் ஊற்றி வைத்திருந்து பின் கொப்பளிக்க வேண்டும். இதனால் கன்னத்தின் அழகு கூடும். சில ஆப்பிள் துண்டுகள், சில கேரட் துண்டுகள், அரை கப் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கன்னம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில் கன்னத்தில் தேய்த்து வர பளபளப்புகூடும். பார்ப்பவர்களை பிடித்து கிள்ளத் தூண்டும். கற்றாழையால் செய்யப்பட்ட கிரீம் முகத்திற்கு ஆரோக்கியம் தருவதோடு பளபளப்பையும் தரும். ஒரு கப் பாலில் ஒரு தேக்கரண்டி தேன், கொஞ்சம் சீஸ் ஒரு மேஜைக் கரண்டி ஓட்ஸ் கலந்து குடிக்க வேண்டும்.

ஆரஞ்ச்
தினமும் ஆரஞ்ச் ஜூஸ் குடித்து வர கொழுக்கொழு கன்னம் கிடைக்கும். ஒரு டீ ஸ்பூன் தேன், ஒரு டீ ஸ்பூன் பப்பாளி சேர்த்து பேஸ்டாக்கி முகத்தில் அப்ளை செய்யவும். பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் பொலிவு தரும்.

உறக்கம்
பால்,முட்டை, மீன், இறைச்சி, வெண்ணெய், நெய், வாழைப்பழம், வேர்க்கடலை, சுண்டல் ஆகியவற்றை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு, கீரைகள், ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.தினமும் எட்டு மணி நேரம் கண்டிப்பாக உறங்க வேண்டும்.

கவலை
கவலை ஏற்பட்டாலே முகத்தின் பொலிவு குன்றி கன்னங்கள் ஒட்டிவிடும். எனவே நடப்பது நன்மைக்கே என்று நினைத்து கவலையை விரட்டுங்கள் அப்புறம் பாருங்கள் ஒட்டிய உங்களது கன்னம் புஷ்டியாக மாறி அழகு அதிகரிக்கும்.

சிரிப்பு
முகத்தில் உள்ள தசைகளுக்கான சிறந்த பயிற்சி தான் சிரிப்பு. வாய் விட்டு நன்கு சிரிக்கும் போது, முகத்தில் உள்ள தசைகள் நீட்சியடைவதால், அது கன்னங்கள் அழகாக வைத்துக் கொள்ள உதவும். எனவே எப்போதும் நன்கு சிரித்துக் கொண்டே இருங்கள்.

சூயிங்கம்
பொதுவாக சூயிங் கம் போட்டால், வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆனால் இந்த சூயிங்கம் மெல்லுவது என்பது முகத்திற்கான ஒரு சூப்பரான பயிற்சியாகும். இதனால் இரட்டை தாடைகளை தவிர்க்கலாம்.

பலூன் ஊதுதல்
பலூன் ஊதும் பயிற்சியானது மிகவும் சிறந்த பயிற்சியாகும். பலூன் ஊதும் பயிற்சியினால் கன்னங்கள் புத்துணர்ச்சியடைகிறது. கன்னங்கள் கொழுக்கொழுவென ஆவதற்கும் இந்த பயிற்சி உதவுகிறது.



Click it and Unblock the Notifications
