Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
தினமும் காலையில் இதை செய்தால் நீண்ட நாள் இளமையோடு காட்சியளிக்கலாம் தெரியுமா?
இங்கு நீண்ட நாட்கள் இளமையோடு காட்சியளிக்கவும் உதவும் ஓர் நேச்சுரல் ஆன்டி-ஏஜிங் மாஸ்க் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவருக்குமே நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக பலர் தங்கள் இளமையைப் பாதுகாக்க பல சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் கெமிக்கல் கலந்த அழகு பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தினால், சரும ஆரோக்கியம் தான் பாழாகும்.
ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை சருமத்தின் ஆரோக்கியம் பாழாகாமலும், அதே சமயம் சருமத்தில் சுருக்கங்கள் விழாமல் நீண்ட நாட்கள் இளமையோடு காட்சியளிக்கவும் உதவும் ஓர் நேச்சுரல் ஆன்டி-ஏஜிங் மாஸ்க் குறித்து கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து தயாரித்து பயன்படுத்தி, இளமையை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
நற்பதமான கேரட் ஜூஸ் - 5 டேபிள் ஸ்பூன்
புளித்த தயிர் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை #1
முதலில் ஒரு பாத்திரத்தில் 100 மிலி நீரை ஊற்றி, அதில் சோள மாவு சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கிளறி இறக்க வேண்டும்.

செய்முறை #2
பின்பு அது நன்கு குளிர்ந்த பின் அத்துடன் கேரட் ஜூஸ் மற்றும் புளித்த தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை #3
பின் இந்த மாஸ்க்கை முகத்திற்கு போடும் முன், முகத்தை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

செய்முறை #4
அடுத்து தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

குறிப்பு
இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 3-5 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த மாஸ்க்கால் நிச்சயம் இளமையை நீண்ட நாட்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும்.



Click it and Unblock the Notifications