Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
உருளைக் கிழங்கை எப்படியெல்லாம் யூஸ் பண்ணினா உங்க சருமத்தில் மேஜிக் உண்டாகும் தெரியுமா?
ஸ்டார்ச் அதிகம் காணப்படும் ஒன்றாக இந்த உருளைக்கிழங்கு இருக்க...நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அத்தியாவசிய சமையல் பொருளாகவும் இருக்கிறது.

இந்த உருளைக்கிழங்கின் பயன்பாடு... உடலை சார்ந்ததாக மட்டும் இல்லாமல், நம்முடைய சருமத்திற்கும் முடிக்கும் மருந்தாக இருக்கிறது. உருளைக்கிழங்கு உங்கள் அழகினை பாதுகாக்க எவ்வாறெல்லாம் பயன்படுகிறது என்பதனை தெரியாத ஒருவரென்றால்...கீழே உங்களுக்காக ஸ்பெஷல் குறிப்புகளை இந்த ஆர்டிக்கலின் மூலமாக தர நாங்கள் முன்வந்துள்ளோம். பார்த்து தான் தெரிந்துகொள்ளுங்களேன்.

கருவளையம் :
ஒரு உருளைக்கிழங்கினை எடுத்துகொண்டு, அதனை தடிமனாக நறுக்கி கொள்ள வேண்டும். இப்பொழுது அந்த நறுக்கிய பீஸ்களை ஒரு மணி நேரத்திற்கு குளிர்ந்த நீரில் ஊற வைக்க வேண்டும்.
அந்த உருளைக்கிழங்கு துண்டினை உங்கள் கண்களில் வைத்து சிறிது நேரத்திற்கு ஓய்வில் இருக்க வேண்டும். சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு, உங்கள் கண்களை குளிர்ந்த நீரினை கொண்டு கழுவ வேண்டும்.

சூரிய எரிச்சலில் இருந்து விடுதலை:
ஜில்லென்னும் நிலையில் இருக்கும் உருளைக்கிழங்கு பீஸினை எடுத்துகொள்ள வேண்டும். அதனை உங்கள் சருமத்தில்...
சூரியனால் பாதிக்கப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினை கொண்டு கழுவ வேண்டும். மற்றுமொரு வழியாக உருளைக்கிழங்கினை ஜூஸாக்கி கொண்டு, அதனை சூரியனால் பாதிக்கப்பட்ட பகுதியில் காட்டன் பஞ்சின் உதவியுடன் தேய்க்க வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரினை கொண்டு கழுவ வேண்டும்.

வறண்ட சருமத்திலிருந்து விடுதலை:
உங்கள் சருமம் மந்தமாகவும்,வறண்டும், அரிப்புடனும் காணப்படுகிறதா? கவலை வேண்டாம்...தினமும் உருளைக்கிழங்கினை நீங்கள் உபயோகித்துவர...இத்தகைய பிரச்சனைகள் உங்களை விட்டு நீங்கும்.
ஒரு உருளைக்கிழங்கினை எடுத்துகொண்டு நன்றாக அரைத்து கொள்ளுங்கள். அத்துடன், ப்ரெஷ்ஷான கற்றாழை ஜெல்லை சேர்த்து கொள்ளுங்கள். அந்த முகமூடி போன்ற கலவையினை முகத்தில் தேய்த்து கொள்ளுங்கள். சுமார் 40 நிமிடத்திற்கு பிறகு...குளிர்ந்த நீரினை கொண்டு உங்கள் முகத்தை கழுவி விடுங்கள்.

சருமத்தின் பளபளப்புக்கு :
ஒரு உருளைக்கிழங்கினை எடுத்துகொண்டு அதனை அரைத்துகொள்ளவும். அத்துடன் ஒரு ஸ்பூன் தயிரை சேர்த்துகொள்ள வேண்டும். அனைத்தையும் நன்றாக கலக்கிவிட்டு...அதனை முகம் முழுவதும் முகமூடி போல்., கதிரவனால் காயம்பட்ட சருமத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.
அதன் பிறகு 20 நிமிடங்கள் கழித்து, மந்தமான நிலையில் இருக்கும் நீரை கொண்டு கழுவ வேண்டும்.

கண்களில் ஏற்படும் வீக்கத்தில் இருந்து விடுதலை:
ஐந்து ஸ்பூன் உருளைகிழங்கு பேஸ்டினை எடுத்துகொள்ள வேண்டும். அதனை மூன்று ஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்டினை கொண்டு கலக்க வேண்டும்.
அத்துடன் இப்பொழுது...இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயிலை சேர்க்க வேண்டும். அனைத்தையும் நன்றாக கலந்து கண்களுக்கு கீழ்பகுதியில் முகமூடி போல் பூசிகொண்டு...அதன் பின்னர் 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினை கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.

கரும்புள்ளிகளை போக்க:
ஒரு உருளைகிழங்கினை எடுத்துகொண்டு ஜீஸாக்கிவிடவும். அத்துடன் 1 அல்லது 2 ஸ்பூன் எழுமிச்சையை சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
அந்த கலவையினை முகத்தில் தேய்க்க வேண்டும். அது உங்கள் சருமத்தில் காய்ந்து போனாலும் அதற்கு அனுமதியை தாருங்கள். அதன் பின்னர் குளிர்ந்த நீரினை கொண்டு உங்கள் முகத்தை கழுவ வேண்டும். உங்கள் சருமத்தில் தென்படும் கரும்புள்ளிகளுக்கு இந்த உருளைகிழங்கு அருமையான வைத்தியமாக அமைகிறது.

சருமத்தின் எரிச்சலை போக்க:
உருளைகிழங்கினை ஜூஸாக்கிகொண்டு...அத்துடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாக பிசைந்துகொண்டு, அந்த பேஸ்டினை பாதிக்கப்பட்ட சருமத்தில் தேய்க்க வேண்டும்.
அது காய்ந்து போகும் வரை காத்திருந்து 30 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரினை கொண்டு கழுவ வேண்டும். இந்த வைத்தியம் உங்களுக்கு பயனளிக்க...சருமத்தில் ஏற்படும் அரிப்பிற்கும், எரிச்சலிற்கும், சருமத்தில் காணப்படும் சிவப்பு நிறப்புள்ளிகளுக்கும் இது சிறந்த வைத்தியமாக அமைகிறது.

எண்ணெய் சருமத்தை கட்டுப்படுத்த:
ஒரு உருளைகிழங்கினை எடுத்துகொண்டு அரைத்துகொள்ள வேண்டும். அந்த ஜூஸை தனியாக பிரித்து...அதனை ஒரு பௌலில் கொட்டிகொள்ள வேண்டும். அத்துடன் 5 அல்லது 6 ஸ்பூன் எழுமிச்சை ஜூஸினை சேர்த்து கொள்ள வேண்டும்.
அதனை உங்கள் சருமம், பாதிக்கப்பட்ட இடத்தில் காட்டன் பஞ்சினை கொண்டு தேய்க்க வேண்டும். அதன் பின்னர், சுமார் 10 நிமிடங்களுக்கு காத்திருந்து, குளிர்ந்த நீரினை கொண்டு கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications