Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
பட்டுப்போன்ற மென்மையான சருமத்தைப் பெற உதவும் க்ரீன் டீ ஃபேஸ் பேக்குகள்!
அனைவருக்குமே க்ரீன் டீயை தினமும் குடித்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும் என்று தெரியும். அதேப்போல் அதனைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், பல்வேறு சரும பிரச்சனைகளைப் போக்கலாம் என்பது தெரியுமா?
அதிலும் சருமம் அதிக வறட்சியாகவோ, எண்ணெய் பசையுடனோ, சுருக்கங்களுடன் முதுமைத் தோற்றத்தை தரும் வகையில் இருந்தால், க்ரீன் டீ கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வாருங்கள். ஏனெனில் க்ரீன் டீயில் சரும செல்களைப் பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது.
சரி, இப்போது க்ரீன் டீயைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போமா!!!

எண்ணெய் பசை சருமத்திற்கு...
சருமத்தில் அதிக அளவில் எண்ணெய் பசை இருந்தால், அதனை நீக்க, 1 டீஸ்பூன் அரிசி மாவுடன், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்.

வறட்சியான சருமத்திற்கு...
உங்கள் முகத்தில் வறட்சி அதிகம் இருந்தால், 1 டீஸ்பூன் மில்க் க்ரீம், 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, அதில் 1-2 டீஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் வறட்சியினால் ஆங்காங்கு வெள்ளைத்திட்டுகள் காணப்படுவது தடுக்கப்படும்.

சென்சிடிவ் சருமத்திற்கு...
சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், 1 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 1-2 டீஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், முகத்தில் உள்ள பருக்கள், கருமை, கரும்புள்ளிகள் போன்றவை நீங்கி, முகம் பொலிவோடு மின்னும்.

பளபளப்பான சருமத்திற்கு...
உங்களுக்கு சுருக்கங்கள், கரும்புள்ளிகள் அதிகம் உள்ளதா? உங்கள் முகத்தின் பொலிவு பாதிக்கப்படுகிறதா? அப்படியெனில் 2 டீஸ்பூன் தேனுடன், 1-2 டீஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து கலந்து, அதனை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, முகம் பளபளப்புடன் காணப்படும்.

புத்துணர்ச்சியான சருமத்திற்கு...
நாள் முழுவதும் அயராமல் வேலை செய்து, முகம் வாடி உள்ளதா? அப்படியென்றால் 1 டீஸ்பூன் மசித்த வாழைப்பழ கூழுடன், 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1-2 டீஸ்பூன் க்ரீன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவில் செய்து வந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும்.



Click it and Unblock the Notifications
