Latest Updates
-
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!
குளிர்காலத்திலும் சருமம் பளபளக்க வேண்டுமா? இதைப் படிங்க சார்!
குளிர்காலத்திலும் உங்கள் தோலை எப்படி பளபளக்கச் செய்ய முடியும்? குளிர்காலத்தில் உங்கள் தோல் பளபளப்பாக இருப்பதை பார்க்கும் போது நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாகவும், நம்பிக்கையுடனும் இருப்பீர்கள் என்பதை அளவிட முடியாது. கடுங்குளிர் நிறைந்த பருவகாலத்தில் உங்கள் தோல் வறண்டு போய், செதில்காளக வெடித்து நிற்கும் போது அதனை பளபளப்பாக வைப்பதென்பது ஒரு இமாலய பணி என்பதை யாரும் மறுக்க முடியாது. குறைவான வெப்பத்தின் காரணமாக தோல் பகுதி வறண்டு போவதால், அதற்கு போதுமான அளவிற்கு ஈரப்பதம் கிடைப்பதில்லை. சாதாரணமான தோல் பகுதிகளை உடையவர்களையும் கூட இந்த கடுங்குளிர் பருவநிலை விட்டு விடாமல், பிரச்னைகளை அள்ளித் தெளிக்கிறது.
குளிர்காலங்களில் தோல் பகுதி ஏன் வறண்டும், சொரசொரப்பாகவும் இருக்கிறது என்று தெரியுமா? குளிரிலிருந்து தப்பிக்க நாம் செய்யும் சூடான தண்ணீர் குளியலாலும், வீட்டினுள்ளே நிலவும் வெப்பத்தினாலும் தான் நமது தோல் பகுதிகள் வறண்டும், செதில்களாகவும் மாறி விடுகின்றன. உங்களுடைய தோல் உங்கள் வயதை விட இளமையாக தோற்றமளிக்கச் செய்யக் கூடிய சிறந்த பராமரிப்பு குறிப்புகளும் உள்ளன. குளிர்காலத்தில் உங்கள் தோல் ஆரோக்கியமாக பளபளக்க வேண்டும் என்று விரும்பினால் இங்கே தரப்பட்டிருக்கும் குறிப்புகளை படித்துப் பயன் பெறுங்கள்.

மாய்ஸ்சுரைசர்களை மாற்றுங்கள்
நீங்கள் கோடை காலம் மற்றும் வசந்த காலம் என அனைத்து பருவங்களுக்கும் ஒரே மாய்ஸ்சுரைசர்களை பயன்படுத்தினாலும், குளிர்காலம் என்று வரும் போது அந்த பருவத்திற்கு ஏற்ற வகையான மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த துவங்குங்கள். குளிர்காலத்தில் தண்ணீர் இல்லாமல் எண்ணெயை ஆதாரமாக கொண்ட மாய்ஸ்சுரைசர்களை பயன்படுத்தினால் உங்கள் தோல் பளபளக்கும் என்று சொல்லவும் வேண்டுமா! எண்ணெய் கொண்டு தயாராகும் மாய்ஸ்சுரைசர்கள் தோலின் அடுக்குகளை பாதுகாக்கும். இது மட்டுமல்லாமல் கிளைஸரின் மற்றும் புரோப்பிலீன் கிளைக்கோல் ஆகியவற்றை நிரம்பவும் கொண்டிருக்கும் ஹியூமெக்டன்ட்ஸ்களை (Humectants) பார்த்து வாங்கி பயன்படுத்துங்கள். மேலும், ஆல்ஃபா-ஹைட்ராக்ஸி அமிலங்களை (Alpha-Hydraxi Acids) கொண்டிருக்கும் மாய்ஸ்சுரைசர்கள் தோல் வறட்சியையும், சுருக்கங்களையும் பெருமளவு குறைக்கும் திறன் கொண்டவையாகும்.

சன் ஸ்க்ரீன் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம்
மெலிதான மேகமூட்டம் அல்லது பனி மூட்டங்களையும் கூட சூரியக் கதிர்கள் ஊடுருவும் என்பது நிதர்சன உண்மை. வளிமண்டலத்தில் உள்ள புறஊதாக் கதிர்களால் அதிகமாக தாக்கப்பட்டால், உடலில் கரும்புள்ளிகள் அல்லது தோல் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இத்தகைய சூழலிலும் உங்கள் தோல் பளபளக்க வேண்டுமென்று விரும்பினால் SPF-ன் அளவு 15 ஆகவும், புறஊதாக் கதிர்கள் தாக்குதலை சமாளிக்கவும் கூடிய மூலப்பொருட்களை கொண்ட சன்ஸ்க்ரீன்களை தடவுங்கள். நீங்கள் வெளியே செல்லும் முன்னர் சன்ஸ்க்ரீன்களை முகம் மற்றும் கைகளில் தடவிக் கொள்வது தான் இந்த இடத்தில் சிறந்த தோல் பராமரிப்பு குறிப்பாகும்.

சூடான குளியல் வேண்டாம்
நீண்ட நேரம் குளிருக்கு இதமாக சூடான தண்ணீரில் குளியல் செய்வது உங்கள் தோலை சுரண்டி விடும் என்பது உண்மை. நரம்புகளை நடுங்கச் செய்யும் குளிரிலிருந்து உங்களை சூடான தண்ணீர் குளியல் காப்பாற்றினாலும், சூடான தண்ணீரில் நெடுநேரம் உங்கள் தோலை மூழ்கடித்து இருந்தால் தோலின் நீட்சித்தன்மையும், கொலாஜன் என்ற வெண்புரதங்களும் உடைந்து விடும். இவ்வகையான சூழல்களில் குளிக்கும் நேரத்தை 10 நிமிடங்களுக்குள்ளாக முடித்துக் கொள்வது சிறந்த தோல் பராமரிப்பு செயல்பாடாக இருக்கும். மேலும், நீங்கள் குளிக்கும் தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்கச் செய்வதும் நன்மை தரும்.

மென்மையான சோப்பு
கடுமையான டியோடரண்ட்களை கொண்ட சோப்புகளை பயன்படுத்த வேண்டாம். குளிர்காலத்திலும் உங்கள் தோல் பளபளக்க விரும்பினால் எண்ணெயை அடிப்படையாக கொண்ட ஃபோம் கிளீன்ஸர்களை தவிர்க்கவும். டோவர் அல்லது நியூட்ரோஜெனா ஆகிய கிரீம் கொண்ட சோப்புகளை பயன்படுத்துங்கள். தோலில் தண்ணீரின் அளவு நன்றாக போதுமான அளவும், நன்றாகவும் இருக்கச் செய்யும் பொருட்டாக மென்மையான கிளீன்ஸர்களை பயன்படுத்தவும்.

ஆரோக்கியத்திற்கு தேவை தண்ணீர்
அனைவரும் சுத்தமான மற்றும் பளபளக்கும் தோலை பெற்றிருக்க விரும்பினால் அவர்கள் போதிய அளவு தண்ணீரை குடிக்க வேண்டும். தண்ணீர் உடலிலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றி விடுவதால் சுத்தமாகும் உடல் பளபளப்பான தோற்றத்தைப் பெறும் என்பதில் ஐயமில்லை. மேலும், அதிகளவு தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு வேறு பல நன்மைகளும் ஏற்படுகின்றன.

டோனர்களை பயன்படுத்துதல்
உங்கள் தோலை அழுக்குகளிலிருந்து சுத்தம் செய்வதற்கு டோனர் பயன்படுகிறது. குளிர்காலத்திலும் உங்கள் தோலை பளபளக்கச் செய்ய விரும்பினால் ஆல்கஹால் கலந்துள்ள பானங்களை பருக வேண்டாம். மாறாக, ஹையலுரோனிக் அல்லது பாந்தியன் அமிலங்கள் உள்ள பொருட்களை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்கும். இவற்றை உங்கள் முகத்தில் தெளித்து விட்டு, மெல்லிய பருத்தி துணியைக் கொண்டு முகத்தை துடைத்து அழுக்குகளை நீக்கலாம்.

செதில் செதிலான தோலை தேய்த்து சுத்தம் செய்தல்
சருமத்தில் குளிரால் விறைத்துப் போய் இறந்து கிடக்கும் பகுதிகளை நீக்குவதற்கு மெல்லிய ஸ்கரப்புகள் மற்றும் இறந்த செல்களை சுத்தப்படுத்தும் மாஸ்க்குகளை பயன்படுத்தவும். 10% அளவிற்கு கிளைகோலிக் அமிலங்கள் கொண்ட மென்மையான மாஸ்க்குகளை பயன்படுத்துங்கள். வீடுகளில் செய்யப்பட்ட ஃபேஸியல் மாஸ்க்குகளை மாற்று வழிமுறையாகவும் பயன்படுத்தலாம். இயற்கையான மூலிகைகளைக் கொண்டு உங்கள் தோலை மசாஜ் செய்தால் எளிதில் சுத்தம் செய்ய முடியும்.
இந்த டிப்ஸ்களை முறையாக பின்பற்றி உங்கள் முகத்தை சுத்தமாகவும், பளபளப்பாகவும் தோற்றமளிக்கச் செய்யுங்கள. மேலும், எக்கச்சக்கமான நன்மை பயக்கும் பானங்கள் அடங்கிய சரிவிகித உணவை சாப்பிடவும் மறக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications