Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
வசீரக அழகைப் பெற உதவும் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்குகள்!!!
முல்தானி மெட்டி என்பது சருமத்தின் அழகை அதிகரிக்க உதவும் ஒரு ஒப்பனை பொருள். இந்த முல்தானி மெட்டியில் மக்னீசியம் குளோரைடு நிறைந்திருப்பதால், இவை சருமத்தில் உள்ள பருக்களையும், கசடுகளையும் நீக்குகிறது. மேலும் இந்த முல்தானி மெட்டி பல அழகு நிலையங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முல்தானி மெட்டி எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்ற என்பதால், பலரும் முல்தானி மெட்டி அதிக அளவில் அடங்கியுள்ள ஃபேஸ் பேக்குகள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகளை பெருமளவில் பயன்படுத்துகின்றனர். மேலும் இதனால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை.
முல்தானி மெட்டி என்பது இன்றைய காலக் கட்டத்தில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய ஒப்பனைப் பொருள். முல்தானி மெட்டியின் விலை குறைவாக இருப்பினும், அதனால் அடையக்கூடிய நன்மைகள் ஏராளம். ஆகவே அழகு நிலையங்கள் சென்று பணம் செலவழித்து அழகைப் பராமரிப்பதற்கு பதிலாக, இந்த முல்தானி மெட்டியை வாங்கி வீட்டிலேயே ஃபேஸ் பேக்குகளை வாரம் ஒருமுறை போட்டு வாருங்கள். இப்போது முல்தானி மெட்டியைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் போட்டால், என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்...

எண்ணெய் பசையை குறைக்க...
முல்தானி மெட்டியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, சருமத்திற்கு வாரம் ஒரு முறை ஃபேஸ் பேக்குகளைப் போட்டு வந்தால், சருமத்தின் pH அளவானது சீராக பராமரிக்கப்பட்டு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையும் நீங்கும்.

மென்மையான சருமத்தைப் பெற...
முல்தானி மெட்டியுடன் சிறிது பால் மற்றும் 1 டீஸ்பூன் பாதாம் பொடி சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரித்து, சரும வறட்சியும் நீங்கும்.

பொலிவான சருமத்தைப் பெற...
2 ஸ்பூன் முல்தானி மெட்டியுடன், சிறிது தக்காளி சாறு, சந்தனப் பொடி சேர்த்து கலந்து, அத்துடன் சிறிது மஞ்சள் தூளும் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், பொலிவான சருமத்தைப் பெறலாம். அதிலும் இதனை தொடர்ந்து வாரம் ஒருமுறை போட்டு வந்தால் நல்ல பலன் தெரியும்.

பளிச்சென்ற முகத்தைப் பெற...
முல்தானி மெட்டியுடன், தக்காளி சாறு, 1 டீஸ்பூன் தேன், எலுமிச்சை சாறு மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தவறாமல் செய்து வந்தால், சருமம் பளிச்சென்று மின்னும்.

கரும்புள்ளிகளைப் போக்க...
1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டியுடன், சிறிது அரைத்த புதினா மற்றும் தயிர் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ 20 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

பிரச்சனையில்லா சருமத்தைப் பெற...
1/4 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் பிரச்சனையில்லா சருமத்தைப் பெறலாம்.

கருமையைப் போக்க...
வெயிலில் சுற்றி கருமையடைந்த சருமத்தை சரிசெய்ய, முல்தானி மெட்டி பொடியுடன் இளநீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், சரும கருமை நீங்கும்.



Click it and Unblock the Notifications
