சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்குகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

அனைவருக்கும் ஓட்ஸ் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மட்டும் தான் சிறந்தது என்று தெரியும். ஆனால் ஓட்ஸானது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும் மிகவும் சிறந்தது என்று தெரியுமா? ஏனெனில் ஓட்ஸில் சருமத்திற்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

குறிப்பாக அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு அழற்சி தன்மைகள் போன்றவை நிறைந்துள்ளதால், இவற்றைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள், கிருமிகள் நீங்கி சருமம் ஆரோக்கியமாக இருக்கும். சரி, ஓட்ஸை எப்படி பயன்படுத்துவது என்று தெரியுமா? இப்போது ஓட்ஸைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போட்டால் என்ன பிரச்சனை நீங்கும் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வறட்சியான சருமத்திற்கு...

வறட்சியான சருமத்திற்கு...

சிலருக்கு சருமம் மிகவும் வறட்சியுடன் காணப்படும். அத்தகையவர்கள் மிக்ஸியில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், சிறிது பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அடித்து, முகம் மற்றும் அதிகம் வறட்சி அடையும் இடங்களில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால் சரும வறட்சி நீங்கும்.

மென்மையான சருமத்தைப் பெற....

மென்மையான சருமத்தைப் பெற....

சிலருக்கு சருமமானது மென்மையின்றி காணப்படும். அத்தகையவர்கள் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் வறட்சியினால் மென்மையிழந்த சருமமானது மீண்டும் மென்மையாகும்.

வெள்ளையான சருமத்தைப் பெற...

வெள்ளையான சருமத்தைப் பெற...

2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸை சிறிது நீரில் வேக வைத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைத்து, முகத்தில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால், வெள்ளையாக மாறுவதைக் காணலாம்.

பருக்களைப் போக்க...

பருக்களைப் போக்க...

வெறும் ஓட்ஸை நீர் ஊற்றி வேக வைத்து இறக்கி குளிர வைத்து மசித்து, பின் அதனை சருமத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் பருக்களைப் போக்கலாம்.

பளிச் முகத்தைப் பெற...

பளிச் முகத்தைப் பெற...

சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்கி, பளிச்சென்ற முகத்தைப் பெற, 3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

முகத் தழும்புகளைப் மறைக்க...

முகத் தழும்புகளைப் மறைக்க...

1/2 கப் ஓட்ஸை, 1 கப் பால் சேர்த்து நன்கு 10-15 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைத்து, பின் அதனை லேசாக மசித்து, முகத்தில் தடவி 30 நிமிடம் உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள பருக்களால் வந்த தழும்புகளானது மறைந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Homemade Oats Face Packs For Your Skin

Oats help moisturise and exfoliate the face naturally. It is a great ingredient to for facial scrubs and packs to reduce a host of skin problems. Here are some homemade oats face packs for your skin.
Story first published: Tuesday, November 11, 2014, 11:47 [IST]
Subscribe Newsletter