Latest Updates
-
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சரும சுருக்கத்தைப் போக்கும் வைட்டமின் ஈ ஃபேஸ் பேக்குகள்!!!
இன்றைய காலத்தில் பலருக்கு இளமையிலேயே சருமத்தில் சுருக்கங்களானது ஏற்பட்டு, முதுமைத் தோற்றத்தை அடைகின்றனர். அதற்கு சருமத்தில் போதிய வைட்டமின் ஈ சத்துக்கள் இல்லாததே காரணம். ஏனெனில் சருமத்தை பொலிவோடும், அழகோடும் வைத்துக் கொள்வதில் வைட்டமின் ஈ முக்கிய பங்கினை வகிக்கிறது. அதிலும் இந்த வைட்டமின் ஈ சருமத்தில் போதிய அளவில் இருந்தால், சுருக்கங்கள், கோடுகள், முதுமை புள்ளிகள் போன்றவை வராமல் தடுக்கலாம்.
எனவே சருமத்தை அழகாக்குவதற்கு கடைகளில் விற்கும் அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை விட, ஒருசில இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க்குகள் போட்டால், சருமம் பொலிவாவதோடு, ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். குறிப்பாக இத்தகைய இயற்கைப் பொருட்கள் வீட்டிலேயே இருக்கக்கூடியவை தான். அத்தகைய பொருட்கள் என்னவென்றும், அதைக் கொண்டு எப்படி ஃபேஸ் மாஸ்க் போடுவது என்றும் கொடுத்துள்ளோம். அதைப் படித்து ட்ரை செய்து பார்த்து, எப்படியிருந்தது என்று சொல்லுங்கள்.

கிவி மாஸ்க்
கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. எனவே சருமத்தில் சுருக்கங்கள் அதிகம் இருந்தால், 1 முட்டையின் மஞ்சள் கருவுடன், 1 டேபிள் ஸ்பூன் கிவி சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள சுருக்கங்களுடன், அதிகப்படியான எண்ணெயும் நீங்கும்.

வாழைப்பழ ரோஸ் மாஸ்க்
வாழைப்பழத்தில் ஜிங்க், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி மற்றும் ஈ போன்றவை நிறைந்துள்ளன. இத்தகைய வாழைப்பழத்தை மசித்து, அத்துடன், 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், முதுமைத் தோற்றமானது நீங்கி, இளமைத் தோற்றத்தைப் பெறலாம்.

மாம்பழ மாஸ்க்
மாம்பழத்திலும் நல்ல அளவில் வைட்டமின் ஈ சத்து அடங்கியுள்ளது. ஆகவே இதனைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டல் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் கோதுமை எண்ணெய், 1/4 மாம்பழம் மற்றும் 1 டீஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, அலச வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், சருமத்தில் சுருக்கமின்றி இருக்கும். மேலும் சருமமும் நன்கு ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.

தேன் மாஸ்க்
ஃபேஸ் மாஸ்க்குகள் அனைத்திலுமே தேன் சேர்க்கப்படும். ஏனெனில் தேனில் வைட்டமின் ஈ சத்து அதிகம் இருப்பதால் தான். அதிலும் முதுமைத் தோற்றத்தைப் போக்குவதற்கு, 1 டேபிள் ஸ்பூன் தேன், 1/2 டீஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைத்து, மசாஜ் செய்து கொண்டே முகத்தை நீரில் அலச வேண்டும். இதனால் முகம் நன்கு மென்மையாகவும், இளமைத் தோற்றத்துடனும் இருக்கும்.

அவகேடோ ஃபேஸ் மாஸ்க்
சரும சுருக்கத்தைப் போக்குவதில் அவகேடோ மிகவும் சிறந்த ஒரு பொருள். ஏனெனில் இதில் வைட்டமின் ஏ, பி, ஈ மற்றும் கே போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த அவகேடோ மாஸ்க்கிற்கு, மசித்த அவகேடோ பழத்தில், 2 டேபிள் ஸ்பூன் சுடுநீர் ஊற்றி, 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும்.

பப்பாளி மாஸ்க்
பப்பாளி தளர்ந்த சருமத்தை இறுக்கமாக்குவதற்கு சிறந்த பொருள். எனவே இந்த பப்பாளிக் கொண்டு, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சரும சுருக்கங்கள் நீங்கி, பெரிய சருமத்துளைகள் மறையும். அந்த மாஸ்க்கிற்கு மசித்த பப்பாளியுடன், அரிசி மாவு மற்றும் தேன் சேர்த்து கலந்து முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

முட்டை வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, முகம் பொலிவோடு மின்னும்.

ஆலிவ் ஆயில்
ஆயில் ஆயிலில் நிறைய அளவில் வைட்டமின் ஈ உள்ளது. எனவே சருமத்தில் ஆலிவ் ஆயிலில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-30 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், முகம் பளிச்சென்று காணப்படுவதோடு, சுருக்கங்களும் நீங்கும்.

பீச் மாஸ்க்
பீச் பழத்தைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டால், நிச்சயம் முதுமைத் தோற்றத்தை தடுக்க முடியும். அதற்கு மசித்த பீச் பழத்தில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சுருக்கம் நீங்குவதாடு, சருமத்தில் உள்ள வறட்சி நீங்கி, பருக்கள் வராமலும் இருக்கும்.

மாதுளை ஃபேஸ் மாஸ்க்
மாதுளைப் பழத்தின் விதைகளை பிளெண்டரிலோ அல்லது மிக்ஸியிலோ போட்டு அரைத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி குறைந்தது 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சரும வறட்சி நீங்கி, சுருக்கங்களும் மறையும்.



Click it and Unblock the Notifications