Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
முகப்பருவைப் போக்கும் ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள்!!!
பெரும்பாலான இளம் வயது பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் பிம்பிள். இத்தகைய பிரச்சனையால், முக அழகானது பாதிக்கப்படுகிறது. சில சமயங்களில் இந்த பிரச்சனையால், சில பெண்கள் தன்னம்பிக்கையை இழந்து, வெளியே தைரியமாக நடக்க முடியாமல் இருக்கின்றனர். ஏனெனில் முகப்பருக்கள் முகத்தில் அதிகமாக இருந்தால், பார்ப்பவர்கள் ஒரு மாதிரியான பார்வையில் பார்ப்பதாலேயே ஆகும்.
எனவே பெண்கள் முகப்பருவைப் போக்குவதற்கு கடைகளில் விற்கும் கண்ட கண்ட பொருட்களை வாங்கி, முகப்பருக்களை போக்கும் என்ற நம்பிக்கையுடன் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், அதன் விளைவு முகப்பரு அதிகமாகி வேறு சில சருமப் பிரச்சனைகள் வருவதே ஆகும். எனவே அத்தகையவர்களுக்காகத் தான், தமிழ் போல்ட் ஸ்கை எந்த ஒரு பக்கவிளைவையும் விளைவிக்காத சில ஆயுர்வேத ஃபேஸ் பேக்குளை சேகரித்து பட்டியலிட்டுள்ளது.
இந்த ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள் முகப்பருவைப் போக்குவதோடு, சருமத்தின் அழகை இன்னும் அதிகரிக்கும். மேலும் இநத் ஃபேஸ் பேக்குகளால் சருமம் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இப்போது அந்த ஃபேஸ் பேக்குகளைப் பார்ப்போமா!!!

மஞ்சள் மற்றும் கடலை மாவு பேக்
பெரும்பாலான இந்து மத திருமணங்களில் மஞ்சள் விழாவானது கொண்டாடப்படுவதைப் பார்த்திருப்போம். இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? இவ்வாறு மஞ்சள் விழாவில் திருமணப் பெண்களுக்குப் பூசப்படும் மஞ்சள் தூளுடன், கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து தடவினால், முகத்தில் பொலிவானது வருவதோடு, சருமத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் நீங்கிவிடும் என்பதாலேயே தான். எனவே முகப்பருவால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த முறையை வீட்டிலேயே செய்து பாருங்கள்.

சாமந்தி பூ
சாமந்திப் பூ என்றதும் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் உண்மையில் சாமந்திப் பூவில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் பொருள் அதிகம் இருப்பதால், அது முகப்பருவை எளிதில் போக்கும். எனவே முகப்பருவினால் பாதிக்கப்பட்டவர்கள், சாமந்திப் பூவினை அரைத்து, தேன் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் அலசினால் நல்ல பலன் கிடைக்கும்.

சந்தன மாஸ்க்
இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கில், சந்தனப் பவுடர் அல்லது சந்தனக் கட்டையை ரோஸ் வாட்டர் நனைத்து தேய்த்து, அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, கழுவினால், பருக்கள் நீங்கி சருமம் பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும்.

வேப்பிலை
வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையால், இதனை பருக்கள் உள்ள சருமத்தில் தடவினால், எளிதில் போக்கிவிடலாம். அதற்கு வேப்பிலையை அரைத்து, அதில் சிறிது மஞ்சள் மற்றும் 3-4 துளிகள் வேப்பிலை எண்ணெயை ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி காய வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

மூல்தானி மெட்டி
ஆயுர்வேத ஃபேஸ் பேக்கில் பருக்களைப் போக்கப் பயன்படுவது தான் மூல்தானி மெட்டி பேக். இதற்கு மூல்தானி மெட்டி பொடியை, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் அலச வேண்டும்.

புதினா ஃபேஸ் மாஸ்க்
புதினா இலைகளை எடுத்து, அதனை அரைத்து, அதன் சாற்றினை முகத்தில் தினமும் இரண்டு முறை தடவி ஊற வைத்து கழுவினால், பருக்கள் சீக்கிரம் குறைந்துவிடும்.

கற்றாழை
தினமும் கற்றாழையின் ஜெல்லை முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், சருமம் பட்டுப் போன்று மென்மையாக இருப்பதோடு, பருக்களும் போய்விடும்.



Click it and Unblock the Notifications
