Latest Updates
-
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும்
டீயை வெச்சும் ஃபேஸ் மாஸ்க் பண்ணலாம் தெரியுமா!!!

டீ மற்றும் வாழைப்பழம் மாஸ்க்: இரண்டு டேபிள் ஸ்பூன் டீ மற்றும் ஒரு வாழைப்பழத்துடன் நன்கு பே1ட் போல் செய்து கொண்டு, முகத்திற்கு தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி, ஈரப்பசையுடன் அழகாக இருக்கும். இது ஒரு சிறந்த மற்றும் ஈஸியான ஃபேஸ் மாஸ்க்.
டீ, ஓட்ஸ் மற்றும் தேன் மாஸ்க்: அரை கப் ஓட்ஸ் எடுத்து கொண்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். பின் அதனை ஒரு பௌலில் போட்டு, 3 டேபிள் ஸ்பூன் டீ மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அதனை முகத்திற்கு தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் மென்மையாக தேய்த்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகமானது மென்மையாகவும், அழகாகவும் காணப்படும்.
டீ, அரிசி மாவு மற்றும் எலுமிச்சை மாஸ்க்: இந்த மாஸ்க் ஒரு சிறந்த முகத்தில் இருக்கும் முகப்பருக்களை நீக்கும். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 2 டேபிள் ஸ்பூன் டீ மற்றும் 2-3 துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு பௌலில் போட்டு, பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். பிறகு அதனை முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதனால் முகத்தில் பருக்கள் போவதோடு, கண்ணிற்கு அடியில் இருக்கும் கருவளையமும் போய்விடும். வறண்ட சருமம் உள்ளவர்கள், இந்த ஃபேஸ் மாஸ்க்கில் எலுமிச்சையை சேர்ப்பது நல்லது.
டீ மற்றும் சாக்லேட் மாஸ்க்: இந்த மாஸ்க்கில் இருக்கும் டீ மற்றும் சாக்லேட் ஆகிய இரண்டிலுமே ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இந்த மாஸ்க் செய்ய 3-4 டேபிள் ஸ்பூன் கோக்கோ பவுடர் மற்றும் 2-3 டேபிள் ஸ்பூன் டீயை விட்டு நன்கு கலந்து கொள்ளவும். பின் இதனை முகத்திற்கு தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனால் முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கும்.
டீ மற்றும் கார்ன் ஃப்ளார் மாஸ்க்: 3 டேபிள் ஸ்பூன் கார்ன் ஃப்ளார், 2 டேபிள் ஸ்பூன் டீ சேர்த்து கிளறி, முகத்திற்கு தடவி 10-25 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் சற்று பொலிவு பெற்றது போல் தெரிவதோடு, கரும்புள்ளிகளையும், இந்த ஃபேஸ் மாஸ்க் நீக்கிவிடும்.
ஆகவே இந்த ஃபேஸ் மாஸ்க் எல்லாம் வீட்டில் செய்து பார்த்து, அழகாக மாறுங்கள்.



Click it and Unblock the Notifications
