Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
வயசானாலும் அழகாக மின்ன சில ஆயில் ட்ரீட்மெண்ட் இருக்கு...
இன்றைய காலத்தில் முப்பது வயதானாலே அவர்கள் வயதானவர்கள் போன்று இருக்கிறார்கள். ஏனெனில் அதற்கு நாம் உண்ணும் உணவு முறை தான் காரணம். அதுமட்டுமல்லாமல் சருமத்திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் இல்லை. அதிலும் குழந்தை பிறந்துவிட்டால், சருமம் சற்று தளர்ந்தது போல் இருக்கும். ஆகவே அப்போது முதுமைத் தோற்றத்தை தடுக்க ஏதேனும் ஒரு சில மசாஜ்களை செய்ய வேண்டும். மேலும் ஆயில் மசாஜ் செய்வதால், உடலும் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு எண்ணெயிலும் ஒவ்வொரு பயன்கள் இருக்கின்றன. இப்போது எந்தெந்த எண்ணெயில் என்ன நன்மைகள் இருக்கின்றன என்பதைப் பார்ப்போமா!!!

கடுகு எண்ணெய் - இந்த எண்ணெயை வைத்து மசாஜ் செய்தால், தளர்வாக மார்பகங்கள் மற்றும் பெல்லியை சற்று பிட்டாக மாற்றும். மேலும் இந்த எண்ணெயில் மசாஜ் செய்யும் போது, லேசாக சூடேற்றி, பின் அதனை கைகளில் ஊற்றி, இரண்டு மார்பகங்கள் மீதும் சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், தளர்வாக இருக்கும் மார்பகங்கள் சற்று பிட்டாக இருக்கும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பவர்கள் என்றால் தினமும் இவ்வாறு செய்வது நல்லது.
திராட்சை எண்ணெய் - இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. ஆகவே சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். அதுமட்டுமல்லாமல், இந்த எண்ணெயில் மசாஜ் செய்தால், சரும தளர்ச்சி நீங்குவதோட, ஏதேனும் தளும்புகள் இருந்தால், நாளடைவில் மறைந்துவிடும். முகம் நன்கு பொலிவோடு, எப்போதும் இளமையாக காட்சியளிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், முகத்திற்கு இந்த எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்தால், முகச்சுருக்கங்கள் நீங்கும்.
அவோகேடோ எண்ணெய் - நமது உடலில் சருமம் தளர்ந்து காணப்படுவதற்கு காரணம், உடலில் இருக்கும் கொலாஜெனின் உற்பத்தி குறைவாக இருப்பது தான். ஆனால் இந்த அவோகேடோ எண்ணெயில் இருக்கும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், அந்த கொலாஜெனின் உற்பத்தியை அதிகரித்து தளர்ச்சியை குறைத்துவிடும். ஆகவே இந்த எண்ணெயை வைத்து மசாஜ் செய்தால், சருமம் இறுக்கமடைந்து, முகத்தில் சருமத்துளைகள் அதிகம் காணப்பட்டாலும், அவற்றை விரைவில் போக்கிவிடும்.
நல்லெண்ணெய் - உடலுக்கு செய்யும் மசாஜிற்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் சிறந்தது நல்லெண்ணெய் தான். சில நேரங்களில் எண்ணெய் மசாஜ் பருக்களை ஏற்படுத்தும். ஆனால் நல்லெண்ணெயை பயன்படுத்தினால், எந்த ஒரு பிரச்சனையும் வராது. மேலும் இந்த எண்ணெய் சருமத்தினை உறுதியாக்கி, பருக்கள் மற்றும் பிம்பிள்களை நீக்கிவிடும்.
ஆலிவ் எண்ணெய் - எண்ணெய்களிலேயே மிகவும் சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய் என்று சொல்லலாம். இது ஒரு அதிசய எண்ணெய் என்றும் கூறலாம். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக இருக்கிறது. இதனை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுவதோடு, சருமத்திற்கும் மிகவும் சிறந்தது. முக்கியமாக இந்த எண்ணெயை வைத்து மசாஜ் செய்யும் போது, எந்த காரணத்தைட்க கொண்டும் சூடேற்ற வேண்டாம். அவ்வாறு சூடேற்றினால், அதில் உளள சத்துக்கள் அனைத்தும் அழிந்துவிடும்.
எனவே சருமம் சற்று தளர்ந்து போல் இருந்தால், மேற்கூறிய எண்ணெய்களில் எவற்றைப் பயன்படுத்துவது என்று நீங்களே தேர்ந்தெடுத்து பயன்படுத்தி, பட்டுப் போன்று மின்னுங்கள்.



Click it and Unblock the Notifications
