Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
அழகா இருக்க ஆசைபடுறீங்களா? ஈஸியான டிப்ஸ் இருக்கு...

* இரவில் தூங்கும் போது, சருமத்தில் ஒரு சில செயல்களான புதுசருமசெல்கள் உருவாதல், செல்கள் புதுபித்தல் போன்றவை நடைபெறும். ஆகவே அப்போது சருமத்திற்கு மேலும் அழகை கூட்ட, வீட்டிலேயே தயாரிக்கும் ஒரு சில கிரீம்களை இரவில் தடவி படுக்க வேண்டும். இதனால் அந்த அழகுப் பொருளில் இருக்கும் ஆன்டி-ஏஜிங் பொருள், இரவில் அந்த செயல்களின் போது, சருமத்திற்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் புதிய செல்கள் உருவாதற்கு உதவியாக இருக்கும். இதனால் முகத்தில் சுருக்கங்கள் வருவதை தவிர்ப்பதோடு, முகமும் பொலிவோடு அழகாக இருக்கும்.
* சிட்ரிக் ஆசிட் மற்றும் கிளைகோலிக் ஆசிட் சருமத்திற்கு ஏற்ற மிகவும் சிறந்த சருமத்தை அழகுப்படுத்த உதவும் பொருட்கள். எப்படினெனில் இவை சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதோடு, புது செல்களின் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருக்கின்றது. அதிலும் வீட்டில் வைட்டமின் சி நிறைந்திருக்கும் அழகுப் பொருட்களை பயன்படுத்தினால், சருமம் மென்மை மற்றும் புத்துணர்ச்சி அடைவதோடு, கொலாஜென் உற்பத்தியையும் அதிகரிக்கும். ஆகவே இத்தகைய சத்துக்கள் நிறைந்த பொருட்களை பயன்படுத்தினாலேயே சருமம் அழகாக மின்னும்.
* ரெட்னாலும் ஒரு சிறந்த ஆன்டி-ஏஜிங் பொருள் தான். அதனால் ரேடிக்கல்களின் பாதிப்பு குறைகிறது. அதுமட்டுமல்லாமல், கொலாஜெனை ஊக்குவித்து, ஒரு இளமையான தோற்றத்தை தருகிறது. மேலும் கெராட்டீன் கூட சருமடத்திற்கு மிகவும் சிறந்தது. இது சருமத்தில் சுருக்கத்தை வராமல் தடுப்பதோடு, சருமத்தில் புண்கள் மற்றும் அலர்ஜி ஏற்படாமல் தடுக்கிறது.
* இரவு நேரத்தில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். இதனால் விரைவில் முதுமை தோற்றம் வருவதை தடுக்கலாம். அதிலும் பெர்ரிஸ், மாதுளை, கிரீன் டீ, நட்ஸ், பீன்ஸ், தானிய வகைகள் மற்றும் மற்ற பயறு வகைகள் போன்றவற்றை சாப்பிட்டால், உடல் மிகவும் அழகாக சிக்கென்று இருப்பதோடு, நீண்ட நாட்கள் இளமையோடு இருக்கலாம்.
* வீட்டில் செய்யப்படும் ஃபேஷியலுக்கு, வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவதோடு, வெதுவெதுப்பான பாலைப் பயன்படுத்தினால், மிகவும் நன்றாக இருக்கும். ஏனெனில் பாலில் இருக்கும் லாக்டிக் ஆசிட், சருமத் துளைகளில் இருக்கும் அழுக்குகளை எளிதில் நீக்குவதோடு, சருமத்தை சுத்தமாகவும், ஈரப்பதமிக்கதாகவும் வைக்கிறது.
ஆகவே இத்தகையவற்றையெல்லாம் நினைவில் கொண்டு செயல்பட்டால், நீங்களும் உலக அழகிப் போல் வீட்டு அழகி ஆகலாம். என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications
