Latest Updates
-
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும்
கரும்புள்ளிகள் அழகை கெடுக்குதா? ஈஸியா நீக்கலாம்!!!

மேலும் ஃபேஸ் மாஸ்க்கை போட, கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை விட, வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்தே, அதனை ஈஸியாக நீக்கலாம். இத்தகைய இயற்கை பொருட்களை பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள், முகத்துளைகளில் இருக்கும் அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் போன்றவை எளிதில் போய்விடும். அத்தகைய ஃபேஸ் மாஸ்க் எப்படி, எதனை வைத்து செய்வதென்று பார்ப்போமா!!!
* முட்டை சருமத்திற்கு மிகவும் சிறந்த பொருள். அதனை சருமத்திற்கு பயன்படுத்தினால் சருமம் பொலிவு பெறுவதுடன், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளும் போய்விடும். அதற்கு முட்டையின் மஞ்சள் கருவுடன், ஜெலட்டின் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பாலை சேர்த்து, 1 நிமிடம் சூடேற்றவும். பின் அதனை நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி, 5-10 நிமிடம் காய வைக்க வேண்டும். பிறகு அதனை முகத்தில் இருந்து விரல்களால், உரித்து எடுக்கவும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் தடவவும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, சருமமும் இறுக்கமடையும்.
* எலுமிச்சை சாற்றில் இருக்கும் ஆல்பா ஹைட்ராக்ஸி ஆசிட் சருமத்தில் இருக்கும் பாக்டீரியா, கிருமிகள் போன்றவற்றை அழிப்பதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள், கரும்புள்ளிகளை எளிதில் நீக்கிவிடும். மேலும் எலுமிச்சை சாற்றை முட்டையின் வெள்ளை கருவோடு கலந்து பேஸ்ட் செய்து முகத்திற்கு தடவி, 10 நிமிடம் கழித்து, அதனை முகத்தில் இருந்து உரித்துவிட வேண்டும். பின் அதனை மைல்டு ஃபேஸ் வாஷால் கழுவி விட வேண்டும். இதனால் அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய்கள் நீங்கிவிடும்.
* ஆரஞ்சு பழத்தின் தோலை காய வைத்து, பொடி செய்து, பாலுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து முகத்திற்கு தடவ வேண்டும். வேண்டுமென்றால் அதில் சிறிது எலுமிச்சை சாற்றையும் சேர்த்து கலந்து தடவலாம். அவ்வாறு அதனை தடவி 10-15 நிமிடம் காய வைத்து, பின் அதனை நீக்கிவிட்டு, வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க பெரும்பாலோனோர் இந்த முறையையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மேற்கூறியவற்றையெல்லாம் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, மற்ற பிரச்சனைகளும் வராமல் இருக்கும். முக்கியமாக முகத்தை கழுவியப் பின், முகத்தில் அரிப்புகள் எதுவும் ஏற்படாமல் இருக்க கிளின்சரை வைத்து ஒருமுறை கழுவி விட வேண்டும். இதனால் முகமானது நன்கு பொலிவோடு, மிருதுவான சருமத்தோடு அழகாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
