Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பட்டுப் போன்ற சருமம் வேண்டுமா? அதை பாலால் செய்யலாமே!!!
உடல் ஆரோக்கியத்திற்கு பால் எவ்வாறு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த பால் சருமத்திற்கு எவ்வளவு நல்லது என்பது தெரியுமா? பாலில் புரோட்டீன், கால்சியம், லாக்டோஸ், கொழுப்பு, வைட்டமின் ஏ, பி12, டி மற்றும் ஜிங்க் இருக்கிறது. இத்தகைய சத்துக்கள் இருப்பதால், அவற்றை சருமத்திற்கு பயன்படுத்தும் போது சருமம் மென்மையாகவும், ஈரப்பதமுள்ளதாகவும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இவை சரும வறட்சி, சிவப்பு நிறம், அரிப்பு போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கிறது. ஆகவே பட்டுப்போன்ற சருமம் வேண்டுமென்பவர்கள், பாலை சருமத்திற்கு பயன்படுத்தி, சருமத்தை அழகாக்குங்கள். இப்போது அநத் பாலை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!

* பாலில் லாக்டிக் அமிலம் இருக்கிறது. இதனால் பாலை சருமத்திற்கு பயன்படுத்தும் போது, சரும துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும். ஆகவே 1/8 கப் ரோஸ்மேரி மற்றும 1 தாட்பூட் பழத்தை எடுத்து அரைத்து, ஒரு கப் பாலுடன் கலந்து, அடுப்பில் தீயை குறைவில் வைத்து 15 நிமிடம் வைத்துக் கிளறி, பின் ஆற வைத்து, காட்டன் வைத்து முகத்திற்கு தடவி ஊற வைத்து, பிறகு கழுவ வேண்டும்.
* பாலின் நன்மைகள் உடனே தெரிய, பாதாமை பாலுடன் சேர்த்து அரைத்து, சிறிது ஆலிவ் ஆயிலை விட்டு, பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் ஆரஞ்சு தோலை அரைத்து, அதனுடன் கலந்து, முகம் மற்றும கழுத்திற்கு தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பிறகு ஐஸ் கட்டிகளால் 2-3 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள தூசிகள் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.
* ஈஸியான முறையில் பாலை வைத்து ஒரு ஃபேசியல் போன்று செய்ய வேண்டுமென்றால், அதற்கு கொதிக்க வைத்துள்ள பாலை ஓரளவு ஆற வைத்து, காட்டனால் முகத்திற்கு 3-5 நிமிடம் தேய்க்க வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மட்டும் போவதோடு, சருமம் நன்கு அழகாகக் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால், சருமம் நன்கு பளிச்சென்று சுத்தமாக காணப்படும்.
* சரும வறட்சியை நீக்குவதற்கு, வாழைப்பழத்தை நன்கு மசித்து, பால் மற்றும் தேனுடன் கலந்து, முகத்திற்கு தடவி காய வைக்க வேண்டும். காய்ந்ததும், சிறிது பாலை தொட்டு, அதன் மேல் தேய்த்து மசாஜ் செய்து, பிறகு கழுவ வேண்டும்.
* சரும சுருக்கத்தை நீக்குவதற்கு பால் மற்றும் தேனை கலந்து, முகத்திற்கு தடவி, 15 நிமிடம் ஊற வைக்கவும். பின் அதனை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், சருமம் நன்கு இறுக்கமடைந்து, அழகாக காட்சியளிக்கும்.
ஆகவே பாலை வைத்து ஒரு சில ஃபேஷியல் மற்றும் மாஸ்குகளை செய்து, முகத்தை அழகோடும், போலிவோடும் வைத்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
