Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
பிரகாசமாக முகம் வேண்டுமா? 'வெள்ளரி ஃபேஸ் பேக்' போடுங்க!!!

ஏனெனில் வெள்ளரிக்காயில் நிறைய நன்மைகள் இருக்கிறது. இதை பயன்படுத்தி ஃபேஸ் பேக் செய்வதால் சருமமானது இறுகி, வலுவடைகிறது. மேலும் இது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கருவளையம் போன்றவற்றை எளிதாக நீக்குகிறது. இதனால் சருமமானது பொலிவுடன், பிரகாசமாக இளமை தோற்றத்தைத் தருகிறது. அத்தகைய வெள்ளரிக்காயை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போமா!!!
எப்படியெல்லாம் 'வெள்ளரி ஃபேஸ் பேக்' செய்யலாம்?
1. வெள்ளரிக்காயை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், தயிர் மற்றும் தேன் விட்டு நன்கு கலக்கவும். பின் அதனை முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவலாம்.
2. வறண்ட சருமம் உள்ளவர்கள், ஒரு டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்ட் உடன் சிறிது எலுமிச்சைப்பழசாற்றை விட்டு, முட்டையின் வெள்ளை கருவை அதில் விட்டு முகத்தில் தடவி 20-25 நிமிடம் விட்டு காய வைத்து, பின் கழுவவும். இதனால் முகத்தில் பிம்பிள் இருந்தால் அது மறைந்துவிடும்.
3. 4-5 டேபிள்ஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்டை, தேன் மற்றும் எலுமிச்சைப்பழசாற்றுடன் கலந்து, புதினாவை அரைத்து அத்துடன் சேர்த்து முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், முகமானது புத்துணர்ச்சியுடன் இருப்பதுடன், இளமையோடும் காட்சியளிக்கும்.
4. வெள்ளரிக்காய் ஜூஸை 2-3 டேபிள்ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் 10-12 துளி ரோஸ் வாட்டரை க்ளேயுடன் சேர்த்து முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவவும். நிறைய நேரம் ஊற வைத்து விட வேண்டாம், இல்லையென்றால் முகத்தில் சுருக்கங்கள் வந்துவிடும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் இருக்கும் பிம்பிளை அகற்றும்.
5. வெள்ளரிக்காய், பேரிக்காய், தக்காளி ஆகியவற்றை நன்கு அரைத்து, அதோடு சிறிது தேன் விட்டு கலந்து, முகத்தில் தடவி 20 25 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால் முகமானது மென்மையாகவும், முகத்தில் இருக்கும் அழுக்கும் அகன்று பொலிவோடு காணப்படும்.
இவ்வாறெல்லாம் செய்து பாருங்கள், முகமானது அழகாக, பொலிவாக, மென்மையாக இருப்பதோடு, புத்துணர்ச்சியோடும் மின்னும்.



Click it and Unblock the Notifications
