Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சருமத்தை காக்கும் கற்றாழை ஜெல் பேக்!

கோடை கொப்புளங்கள்
கோடைகாலத்தில் சருமத்தில் ஆங்காங்கே கொப்புளங்கள் ஏற்படுவது இயல்பு. இதனால் வலியும் எரிச்சலும் ஏற்படும். இதற்கு கற்றாலை சிறந்த மருந்தாக செயல்படுகிறது. கற்றாழையை பறித்து அதனை பிழிந்து சாறு எடுத்து அதில் சில துளிகள் எலுமிச்சை சேர்த்து கலக்கவும். இதனை ஒரு பருத்தி துணியில் தொட்டு முகத்தில் நன்றாக அப்ளை செய்யவும். பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். இதனால் சருமம் பொலிவாகும். சருமம் வறட்சி நீங்கி ஈரப்பதத்தை தக்கவைக்கலாம்.
மூலிகை பேக்
கற்றாழைச் செடி அனைத்து சருமத்திற்கும் ஏற்ற சிறந்த மூலிகையாகும். இதனை ஜெல் போல செய்து முகத்தில் பூசி வர சருமம் ஜொலிக்கும். கற்றாழை செடியை பறித்து நன்றாக அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்க்கவும் கண்களைத் தவிர பிற பகுதிகளில் திக்காக பேக் போல போடவும். பின்னர் நன்றாக மூன்று நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். இதனால் முகத்தில் உயிரிழந்த செல்கள் உதிர்ந்து விடும். பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கிளன்சர் கொண்டோ அல்லது குளிர்ந்த நீரிலோ கழுவி விடலாம். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வர முகம் பொலிவாகவும் மென்மையாக இருக்கும்.
முகப்பரு வராது
கற்றாழையை பறித்து அதை நன்றாக கொதிக்கும் நீரில் போட்டு வேக வைக்கவும். இதனை எடுத்து நன்றாக அரைக்கவும் அதனுடன் தேன் சேர்க்கவும். இந்த கலவையை நன்றாக முகம் முழுவதும் அப்ளை செய்யவும். நன்றாக காயவிட்டு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். இதனை வாரம் ஒருமுறை செய்து வர முகப்பரு இருந்தால் மறைந்து விடும். முகப்பருவே வடுக்களோ ஏற்படாது. சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் கற்றாழையுடன் வெள்ளரிக்காய், தயிர் சேர்த்து அரைத்து பேஸ்ட் போல செய்யவும். பதினைந்து நிமிடம் ஊறவைத்து நன்றாக குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியோடு இருக்கும்.



Click it and Unblock the Notifications