Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை கஷ்டப்படாம ஈஸியா நீக்கணுமா? அப்ப இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
Skin Care Tips In Tamil: வடஇந்தியாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் வண்ணங்களின் பண்டிகை தான் ஹோலி. இந்த ஹோலி பண்டிகையின் போது மக்கள் பல வண்ண பொடிகளை மற்றவர்கள் மீது தூவி விளையாடுவார்கள். என்ன தான் இந்த பண்டிகை வடஇந்தியாவில் பிரபலமானதாக இருந்தாலும், தென்னிந்தியாவிலும் வடஇந்திய மக்கள் இருப்பதால் இந்த பண்டிகை இங்கும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
நீங்களும் இன்று வண்ண பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தீர்களா? ஆனால் முகத்தைக் கழுவினால், ஹோலி பொடியின் நிறங்கள் சருமத்தில் இருந்து நீங்காமல் உள்ளதா? என்ன செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் உங்களுக்காகவே ஹோலி பொடியால் சருமத்தில் ஏற்பட்ட கறைகளை நீக்கும் சில எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வழிகளைப் பின்பற்றி உங்கள் சரும அழகை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

1. தேங்காய் எண்ணெய்
ஹோலி விளையாடிய பின் சருமத்தில் தேங்காய் எண்ணெயை தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, அரை மணிநேரம் ஊறு வையுங்கள். பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். அதன் பின் கிளின்சரைப் பயன்படுத்தி, சருமத்தை சுத்தம் செய்யுங்கள். இதனால் சருமத்தில் உள்ள வண்ண பொடிகளின் கறை எளிதில் நீங்கும்.
2. நேச்சுரல் கிளின்சர்
சருமத்தில் உள்ள வண்ண பொடியாக ஏற்பட்ட கறைகளைப் போக்க பால் பெரிதும் உதவி புரியும். ஏனெனில் பால் ஒரு நேச்சுரல் கிளின்சர். இந்த காய்ச்சாத பாலை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் சருமத்தை துடைத்து எடுக்க வேண்டும். இன்னும் சிறப்பான பலனைப் பெற, பாலுடன் சிறிது தேனை கலந்து கொள்ளுங்கள். இதனால் வண்ண பொடியால் சருமத்தில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் தேனை பாலுடன் சேர்த்து பயன்படுத்தும் போது, சரும எரிச்சல் தடுக்கப்படுகிறது.
3. கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டர் மாஸ்க்
கற்றாழை ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டது. இந்த கற்றாழையுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து பயன்படுத்தும் போது, இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். அதற்கு கற்றாழை ஜெல்லுடன், சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி இந்த கற்றாழை பேக்கை போடும் போது, சருமத்தில் உள்ள வண்ண பொடிகளின் நிறம் மாயமாய் மறைவதை நன்கு காணலாம். முக்கியமாக இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்துவதனால், வண்ணப் பொடியால் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் தடுக்கப்படும்.
4. எலுமிச்சை மற்றும் தேன்
எலுமிச்சை ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டது. அதே சமயம் தேன் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டது. எனவே இந்த எலுமிச்சையின் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து பயன்படுத்தும் போது, சருமத்தில் வண்ண பொடியால் ஏற்பட்ட கறைகளை எளிதில் போக்கலாம். ஆனால் எலுமிச்சை சாற்றினை தனியாக பயன்படுத்தக்கூடாது. இல்லாவிட்டால், அது சருமத்தில் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தும். எனவே எப்போதும் எலுமிச்சையை ஏதாவது ஒரு பொருளுடன் சேர்த்து தான் பயன்படுத்த வேண்டும்.
5. கடலை மாவு தயிர் ஸ்க்ரப்
சருமத்தில் உள்ள பிடிவாதமான வண்ண பொடியின் கறையைப் போக்க கடலை மாவுடன், சிறிது சர்க்கரை சேர்த்து, அத்துடன் சிறிது தயிரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும். மிகவும் அழுத்தி ஸ்க்ரப் செய்து விடாதீர்கள். இல்லாவிட்டால், சருமத்தில் காயங்கள் ஏற்படும். ஸ்க்ரப் செய்த பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதன் பின் கற்றாழை ஜெல்லை தடவி சருமத்தை குளிர்விக்க வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிகள் அனைத்தும் ஹோலி கலர் பொடியால் ஏற்பட்ட கறைகளை எளிதில் நீக்க உதவும். இருப்பினும் இதில் சில பொருட்கள் சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதால், அவற்றை நேரடியாக சருமத்தில் பயன்படுத்துவதற்கு முன், கையில் பேட்ச் டெஸ்ட் செய்து பார்த்து, பின் பயன்படுத்துங்கள். ஒருவேளை இந்த வழிகளை மேற்கொள்ளும் போது, சருமத்தில் அரிப்போ அல்லது அழற்சியோ ஏற்பட்டுள்ளதை கண்டால், உடனே அதை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications