Latest Updates
-
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்க முகம் பொலிவிழந்து கருப்பா இருக்குதா? இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் டைம்-ல போடுங்க..
Skin Care Tips In Tamil: தற்போது வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு 5 நிமிடம் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தாலே, அடையாளம் தெரியாத அளவில் சருமம் கருத்துபோய்விடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சருமத்திற்கு போதுமான பராமரிப்புக்களை கொடுக்க வேண்டியது அவசியம்.
அதற்கு சருமத்திற்கு ஃபேஸ் பேக்குகள், ஃபேஸ் மாஸ்க்குகள், ஸ்கரப் போன்ற சரும பராமரிப்பு வழக்கத்தை பின்பற்ற வேண்டும். அதுவும் இவற்றை அழகு நிலையங்களுக்கு சென்று தான் போட வேண்டும் என்பதில்லை, வீட்டில் உள்ள ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு மேற்கொண்டாலே சிறப்பான பலன் கிடைக்கும்.

சொல்லப்போனால் கெமிக்கல் கலந்த ஃபேஸ் பேக்குகளை விட, இயற்கை பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது, சரும செல்கள் ஆரோக்கியமாகவும், விரைவாக புத்துயிர் பெறும். மேலும் நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் முகப்பொலிவை மீட்டெடுக்கவும், வயதான அறிகுறிகளை குறைக்கவும் பெரிதும் உதவி புரியும்.
கீழே சரும கருமையை நீக்கி, முகப்பொலிவை மேம்படுத்த உதவும் சில இரவு நேர ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், கோடையிலும் முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்கும்.
1. ப்ளூபெர்ரி, தயிர், தேன் ஃபேஸ் பேக்
உங்களுக்கு எண்ணெய் பசை சருமமா? உங்கள் முகத்தில் எப்போதும் எண்ணெய் வழிந்தவாறு இருக்குமா? அப்படியானால் உங்கள் முகம் எப்போதும் பொலிவோடு இருக்க வேண்டுமானால், ப்ளூபெர்ரி, தயிர் மற்றும் தேன் கொண்டு ஃபேஸ் பேக்கை போடுங்கள். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்களை திறம்பட அகற்றுவதோடு, சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தி, முகப்பரு அதிகம் வருவதைத் தடுக்கும்.
இந்த ஃபேஸ் பேக்கை போடுவதற்கு முதலில் ஒரு பௌலில் 2 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1/2 கப் ப்ளூபெர்ரிகளை எடுத்து ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அவற்றை முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
2. மஞ்சள் மற்றும் பால் ஃபேஸ் பேக்
முகத்தில் பருக்கள், கருவளையம் போன்றவற்றுடன், சுருக்கங்களும் தென்படத் தொடங்கினால், இந்த ஃபேஸ் பேக்கை போடலாம். இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 4 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன் 6 டீஸ்பூன் காய்ச்சாத பாலை சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை ஈரப்பதமூட்டுவதோடு, வெயிலால் கருமையான சருமத்தை பொலிவுறச் செய்யும்.
3. தக்காளி மற்றும் பால் ஃபேஸ் பேக்
முகப்பரு அதிகம் கொண்டவர்களுக்கு இந்த ஃபேஸ் பேக் தான் சிறந்தது. மேலும் இந்த ஃபேஸ் பேக் வெயிலால் கருமையான சருமத்தை சரிசெய்யும் மற்றும் சருமச் செல்களுக்கு குளிர்ச்சியூட்டும். இந்த ஃபேஸ் பேக்கிற்கு 1 தக்காளியை எடுத்து, துண்டுகளாக்கி, ஜாரில் போட்டு அரைத்து, ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பாலை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
4. கற்றாழை ஜெல் மற்றும் தேன்
வெயிலால் சருமத்தின் நிறம் மிகவும் கருமையாகி இருப்பதோடு, சருமத்தில் கடுமையான எரிச்சலையும் சந்தித்தால், இந்த ஃபேஸ் பேக்கை போடலாம். அதற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
5. ஓட்ஸ் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
வீட்டில் ஓட்ஸ் இருந்தால், அத்துடன் தேனை சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்களை முழுமையாக நீக்குவதோடு, சரும வறட்சியை போக்கும். அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications