Latest Updates
-
அக்டோபர் 05 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பல ஆசைகள் நிறைவேறப்போகுதாம் -
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்! -
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்.. -
புரட்டாசி ஸ்பெஷல் சோயா காளான் சுக்கா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
பூரிக்கு இப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க... -
அக்டோபர் 04 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் -
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
பைசா செலவு பண்ணாம வெள்ளையாகணுமா? இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் போடுங்க.. வெள்ளையாவீங்க..
Skin Care Tips In Tamil: உங்கள் முகம் மிகவும் கருப்பாக, எண்ணெய் வழிந்து அசிங்கமாக காட்சியளிக்கிறதா? ஒவ்வொரு முறை முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போதும், உங்கள் முகம் பொலிவிழந்து இருப்பதை நினைத்து வருத்தப்படுகிறீர்களா? உங்கள் முகச் சருமத்தை அழகாக்க அழகு நிலையங்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளீர்களா? அப்படியானால் கவலையைவிடுங்கள்.
ஏனெனில் நம் வீட்டு சமையலறையிலேயே சரும நிறத்தை அதிகரிக்கும் மற்றும் சரும பொலிவையும், அழகையும் மேம்படுத்தும பல பொருட்கள் உள்ளன. அந்த பொருட்களைக் கொண்டு தினமும் இரவு ஃபேஸ் பேக்கை போட்டு வந்தால், பைசா செலவு செய்யாமல் சரும நிறத்தை அதிகரிக்கலாம்.

சருமத்தின் அழகை மேம்படுத்தும் பல இயற்கை பொருட்கள் உள்ளன. இவற்றைக கொண்டு ஃபேஸ் பேக்கை தயாரித்து தினமும் இரவு தூங்கும் முன் பயன்படுத்தி வந்தால், ஒரே மாதத்தில் சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம். இப்போது அப்படிப்பட்ட சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளைக் குறித்து காண்போம்.
1. கடலை மாவு மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
சரும நிறத்தை அதிகரிக்க மற்றும் சரும அழகை பராமரிக்க பழங்காலம் முதலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் கடலை மாவு. அதற்கு அடுத்தபடியான ஒரு பொருள் என்றால் அது மஞ்சள் தூள். மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் சருமத்தில் உள்ள கருமையான தழும்புகளைப் போக்கி, சரும நிறத்தை மேம்படுத்தும்.
அதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, ரோஸ் வாட்டர் அல்லது பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. உருளைக்கிழங்கு, கற்றாழை ஜெல் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்
உருளைக்கிழங்கில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். கற்றாழை ஜெல் சருமத்தை குளிர்ச்சியாகவும், இதமாகவும் வைத்துக் கொள்ளும். இவ்விரு பொருட்களுடன் கடலை மாவை சேர்க்கும் போது, அது சருமத் துளைகளில் உள்ள அழுக்கை வெளியேற்றி, சரும நிறத்தை மேம்படுத்திக் காட்டும்.
இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு ஒரு பௌலில் உருளைக்கிழங்கு சாறு மற்றும் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் கடலை மாவை சேர்த்து பேஸ்ட் செய்து, அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
3. எலுமிச்சை மற்றும் தக்காளி ஃபேஸ் பேக்
எலுமிச்சை மற்றும் தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளன. இவை சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை சீராக்கி, சருமத்திற்கு நல்ல பொலிவைத் தரும். மேலும் இவ்விரு பொருட்களிலும் உள்ள அமிலங்கள், சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும்.
அதற்கு ஒரு பௌலில் தக்காளி கூழுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
4. காபித் தூள் மற்றும் பால் ஃபேஸ் பேக்
காபித் தூள் ஒரு மிகச்சிறந்த ஸ்க்ரப் மற்றும் பால் சருமத்திற்கு நல்ல ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. அதற்கு காபித் தூள் மற்றும் பாலை 2:1 என்ற விகிதத்தில் எடுத்து கலந்து, அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக சருமத்தை தேய்த்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால், சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.



Click it and Unblock the Notifications
