Latest Updates
-
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா?
முகம் பொலிவிழந்து கருப்பா இருக்கா? அப்ப தினமும் நைட் இந்த ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: உங்கள் முகம் பொலிவிழந்து மிகவும் டல்லாக காணப்படுகிறதா? என்ன தான் முகத்தை சோப்பு பயன்படுத்தி கழுவினாலும், முகம் பளிச்சென்று மாறவில்லையா? அப்படியானால் உங்கள் முகச் சருமத்தில் இறந்த செல்கள் அதிகம் தேங்கியுள்ளது என்று அர்த்தம்.
சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டுமானால், ஸ்க்ரப் செய்ய வேண்டும். சருமத்தில் தேங்கியுள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு கடைகளில் பல்வேறு ஸ்க்ரப்கள் விற்கப்படுகின்றன. ஆனால் கெமிக்கல் கலந்த ஸ்க்ரப்கள் சருமத்திற்கு அவ்வளவு நல்லதல்ல.

முக்கியமாக கெமிக்கல் கலந்த ஸ்க்ரப்புகளை தினமும் பயன்படுத்தும் போது, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள எண்ணெய் பசையும் முழுமையாக நீக்கப்பட்டு, சருமம் அதிகம் வறண்டு போகும்.
எனவே சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க சிறந்த வழி இயற்கை பொருட்களைக் கொண்டு ஸ்க்ரப்புகளை தயாரித்து பயன்படுத்துவது தான். நமது சமையலறையில் உள்ள பல பொருட்கள் ஒரு நல்ல ஸ்க்ரப்பாக செயல்படும்.
இப்போது ஒருசில நேச்சுரல் ஸ்க்ரப்புகளைக் காண்போம். அவற்றில் உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து தினமும் பயன்படுத்தி, எப்போதும் பளிச்சென்று ஜொலியுங்கள்.
நேச்சுரல் ஸ்க்ரப் #1
* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடர், 1/4 டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் 1/2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் பால் அல்லது நீர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு முகத்தை நீரில் கழுவி, துடைத்துவிட்டு, தயாரித்து வைத்துள்ள ஸ்க்ரப்பை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்தால், முகம் எப்போதும் பளிச்சென்று இருக்கும்.
நேச்சுரல் ஸ்க்ரப் #2
* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் காபி தூள், 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் 1/4 டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை நீர் அல்லது பால் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு தயாரித்த கலவையை இரவு தூங்கும் முன், முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் இரவு தூங்கும் முன் பயன்படுத்தி வந்தால், முகம் பளிச்சென்று பிரகாசமாக மின்னும்.
நேச்சுரல் ஸ்க்ரப் #3
* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1/4 டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பால் அல்லது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு முகத்தை நீரால் கழுவி, துடைத்த பின், தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* இப்படி தினமும் இரவு செய்வதனால் இறந்த செல்கள் நீங்குவதோடு, முகப்பரு, பிம்பிள், எண்ணெய் பசை போன்றவை கட்டுப்படுவதோடு, சருமமும் மென்மையாகவும், பளிச்சென்றும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
