Latest Updates
-
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
உங்க முகம் கருப்பா, டல்லா இருக்கா? அப்ப உளுத்தம் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. வெள்ளையாவீங்க..
Skin Care Tips In Tamil: அழகை மேம்படுத்தவும், பராமரிக்கவும் அக்காலத்தில் நம் முன்னோர்கள் இயற்கை பொருட்களைத் தான் பயன்படுத்தி வந்தனர். அதுவும் பாரம்பரியமாக கடலை மாவு, மஞ்சள், கற்றாழை போன்ற பொருட்களை அதிகம் பயன்படுத்தி வந்தனர். இது தவிர நம் வீட்டு சமையலறையில் உள்ள பல்வேறு பொருட்கள் நமது சரும பிரச்சனைகளைப் போக்கி, சருமத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. அதில் ஒன்று தான் உளுத்தம் பருப்பு.
இட்லி, தோசை மாவில் பயன்படுத்தப்படும் உளுத்தம் பருப்பில் புரோட்டீன்கள், வைட்டமின் பி, கொழுப்புக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை அதிகம் உள்ளன. இது தவிர உளுத்தம் பருப்பில் பெண்களுக்கு நன்மை அளிக்கும் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் போன்றவைகளும் நிறைந்துள்ளன. எனவே பெண்கள் உளுத்தம் பருப்பை தங்களின் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

அதுவும் உளுத்தம் பருப்பை உட்கொள்வதைத் தவிர, அவற்றைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் போது, அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும், சரும கருமையைப் போக்கும் மற்றும் முகப்பரு பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். இவ்வளவு நன்மை அளிக்கும் உளுத்தம் பருப்பைக் கொண்டு பலவாறு ஃபேஸ் பேக்குகளைப் போடலாம். இப்போது டாப் 8 உளுத்தம் பருப்பு ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
ஃபேஸ் பேக் #1
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் பருப்பு பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* ஓட்ஸ் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* பால் - தேவையான அளவு
பயன்படுத்தும் முறை:
* ஒரு பௌலில் உளுத்தம் பருப்பு பவுடரை எடுத்து, அத்துடன் ஓட்ஸ் பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பால் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #2
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் பருப்பு பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* எலுமிச்சை சாறு - சிறிது
* தண்ணீர் - சிறிது
பயன்படுத்தும் முறை:
* ஒரு பௌலில் உளுத்தம் பருப்பு பவுடரை எடுத்து, அத்துடன் மஞ்சள் தூள், எலுமிச்சை சாற்றினை சிறிது சேர்க்க வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #3
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் பருப்பு பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
* கற்றாழை ஜெல் - 1 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் உளுத்தம் பருப்பு பவுடர் மற்றும் கற்றாழை ஜெல்லை ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவ வேண்டும்.
* 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #4
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் பருப்பு மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 1 டீஸ்பூன்
* வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் - 2
பயன்படுத்தும் முறை:
* ஒரு பௌலில் உளுத்தம் பருப்பு மாவை எடுத்து, அத்துடன் தயிர் சேர்த்து, 2 வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை ஊற்றி நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #5
தேவையான பொருட்கள்:
* சந்தன பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் - 2
* உளுத்தம் பருப்பு பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* பால் - தேவையான அளவு
பயன்படுத்தும் முறை:
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு பவுடரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை சேர்த்து, சிறிது பாலை ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #6
தேவையான பொருட்கள்:
* வாழைப்பழம் - 1/2
* உளுத்தம் மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* தேன் - சில துளிகள்
பயன்படுத்தும் முறை:
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் பாதி வாழைப்பழத்தை எடுத்து மசித்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் சில துளிகள் தேனை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #7
தேவையான பொருட்கள்:
* ஆரஞ்சு தோல் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* தேன் - 1 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் ஆரஞ்சு தோலை பவுடர் மற்றும் உளுத்தம் பருப்பு மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #8
தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு மாவு - 2 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் அரிசி மாவு மற்றும் தயிரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் உளுத்தம் பருப்பு மாவை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
உளுத்தம் பருப்பு அதன் அதிகப்படியான ஊட்டச்சத்து உள்ளடக்கத்தின் காரணமாக சருமத்தை பிரகாசமாக்குவதற்கும், சருமத்தில் உள்ள கறைகளை நீக்கவும் மற்றும் ஒட்டுமொத்த சரும அமைப்பை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.
உளுத்தம் பருப்பு பொதுவாக சருமத்தில் பயன்படுத்த பாதுகாப்பானது. ஆனால் சிலருக்கு அரிப்பு ஏற்படலாம். எனவே சருமத்தில் பயன்படுத்தியதும் எந்தவொரு பக்க விளைவும் ஏற்பட்டால், அதைப் பயன்படுத்துவதை நிறுத்துவது நல்லது.
ஆம், உளுந்து பொதுவாக எல்லா வகையான சருமத்தினருக்கும் ஏற்றது. ஆனால் எந்த ஒரு பொருளையும் முகத்தில் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு பகுதி சோதனை செய்வது எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications