Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
பைசா செலவு பண்ணாம வெள்ளையாகணுமா? அப்ப உருளைக்கிழங்கு தோலை இப்படி யூஸ் பண்ணுங்க...
Skin Care Tips In Tamil: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான காய்கறி தான் உருளைக்கிழங்கு. இந்த உருளைக்கிழங்கு சமையலில் பயன்படுவதோடு மட்டுமின்றி, சரும அழகை மேம்படுத்தவும் பயன்படுகிறது.
குறிப்பாக உருளைக்கிழங்கானது சரும பிரச்சனைகளைத் தடுப்பதோடு, சரும நிறத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா? நீங்கள் இதுவரை உருளைக்கிழங்கை சமைக்கும் போது அதன் தோலை நீக்கி தூக்கி எறிந்துவிடுவீர்களா?

அப்படியானால் இனிமேல் அந்த தவறை செய்யாதீர்கள். ஏனெனில் உருளைக்கிழங்கின் தோல் நமது சருமத்தில் பல மாயங்களை புரியும் திறன் கொண்டவை. நீங்கள் உங்கள் சரும நிறத்தை அதிகரிக்க நினைக்கிறீர்களா?
அதுவும் பார்லர் சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்ய விரும்பவில்லையா? அப்படியானால் உருளைக்கிழங்கின் தோலை பின்வருமாறு பயன்படுத்துங்கள். இதனால் சரும நிறத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
உருளைக்கிழங்கு தோலைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
சரும நிறம் மேம்படும்
உருளைக்கிழங்கின் தோலில் உள்ள அசிலாயிக் அமிலம் சருமத்தில் உள்ள கருமையான தழும்புகளை மறைய உதவுவதோடு, சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. கூடுதலாக, உருளைக்கிழங்கின் தோலில் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன. இவை சருமத்தில் உள்ள தழும்புகளை நீக்குவதோடு, வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கும்.
சருமம் மென்மையாகும்
உருளைக்கிழங்கு மற்றும் அதன் தோலில் புரோட்டீன்கள் அதிகமாக உள்ளன. இது சருமத்திற்கு மிகவும் நல்லது. சரும செல்களுக்கு போதுமான அளவு புரோட்டீன் கிடைத்தால், சருமம் மென்மையாகவும், சுத்தமாகவும் இருக்கும்.
பொலிவான சருமம்
உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் கனிமச்சத்துக்கள் சருமத்தின் ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்த உதவுகின்றன. அதுவும் தொடர்ச்சியாக உருளைக்கிழங்கு மற்றும் அதன் தோலை சருமத்திற்கு பயன்படுத்தும் போது, சருமம் நன்கு பொலிவாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
இளமையான சருமம்
உருளைக்கிழங்கில் வைட்டமின் சி அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின் சி சருமத்தில் பலவிதமாக செயல்பட்டு, சருமத்தில் உள்ள சுருக்கங்கள், முதுமைக் கோடுகள், கருவளையங்கள் போன்றவற்றை நீக்கி, சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவி புரிகின்றன.
இப்போது உருளைக்கிழங்கின் தோலை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் காண்போம். அதைப் படித்து அவற்றில் உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி, பளிச்சென்று வெள்ளையாகுங்கள்.
வழி #1
* உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதன் தோலை முகத்தில் வைக்க வேண்டும்.
* இப்படி முகத்தில் வைத்து ஒரு 5 முதல் 10 நிமிடம் வரை ஊற வைத்த பின், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இவ்வாறு உருளைக்கிழங்கை சமைக்கும் போதெல்லாம் செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.
வழி #2
* உருளைக்கிழங்கில் இருந்து தோலை சீவிய பின், அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சிறிது தக்காளியையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், கருப்பாக காட்சியளிக்கும் முகம் விரைவில் வெள்ளையாகும்.
வழி #3
* சிறிது உருளைக்கிழங்கின் தோலை எடுத்து அரைத்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி செய்வதன் மூலமும், சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம்.
வழி #4
* கருவளையம் முக அழகை கெடுக்கிறதா? அப்படியானால் உருளைக்கிழங்கின் தோலை சிறிது எடுத்து ஃப்ரிட்ஜ்ஜில் சிறிது நேரம் வைக்க வேண்டும்.
* பின் அதை கண்களைச் சுற்றி மற்றும் கண்களின் மேல் வைத்து, 10 நிமிடம் உட்கார வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் மாயமாய் மறையும்.



Click it and Unblock the Notifications
