Latest Updates
-
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா?
பார்லர் போகாமலே பளிச்சுன்னு ஜொலிக்கணுமா? தக்காளியுடன் இத கலந்து நைட்டு ஃபேஸ் பேக் போடுங்க...
Skin Care Tips In Tamil: யாருக்கு தான் வெள்ளை சருமத்தின் மீது ஆசை இருக்காது. குறிப்பாக பெண்கள் ஒவ்வொருவருமே தங்கள் நிறம் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். அதற்காக ஒவ்வொருவரும் தங்களின் சரும நிறத்தை மேம்படுத்த பல்வேறு சரும பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள்.
இன்னும் சிலர் பார்லருக்கு தவறாமல் சென்று சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுப்பார்கள். ஆனால் பார்லர் சென்று கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு பராமரிப்புக்களைக் கொடுப்பதை விட, இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரிப்புக்களைக் கொடுத்தால் தான் சருமம் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்கும்.

சரும கருமையைப் போக்கி, சரும நிறத்தை அதிகரிக்க உதவும் பல்வேறு இயற்கை பொருட்கள் உள்ளன. அதில் தக்காளி மற்றும் கடலை மாவு ஆகிய இரண்டும் சருமத்தில் மாயங்களை ஏற்படுத்தும். இவ்விரு பொருட்களைக் கொண்டும் சருமத்திற்கு ஃபேஸ் பேக்கை போட்டு வந்தால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமம் பொலிவோடும், பளிச்சென்றும் இருக்கும்.
முக்கியமாக இந்த தக்காளி, கடலை மாவு ஃபேஸ் பேக் எண்ணெய் பசை சருமத்தினர் முதல் சாதாரண சருமம் வரை அனைவருக்குமே ஏற்றதாக இருக்கும். இப்போது தக்காளி கடலை மாவு ஃபேஸ் பேக்கை எப்படி போட வேண்டும், எப்போது போட வேண்டும் என்பது குறித்து காண்போம்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 1
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
தக்காளி
தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் போன்றவை அதிகம் உள்ளன. முக்கியமாக இதில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். மேலும் இது முகத்தில் பருக்கள் வருவதைத் தடுக்கும்.
மஞ்சள்
மஞ்சள் ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்ட ஒரு கிருமிநாசினி பொருள் மட்டுமின்றி, அழகுப் பொருளும் கூட. இந்த மஞ்சள் பழங்காலம் முதலாக பெண்களின் அழகு பராமரிப்பு பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மஞ்சளானது சருமத்தில் உள்ள அழுக்குகள், கிருமிகள், பாக்டீரியாக்கள் போன்றவற்றை அகற்றுகிறது. மேலும் இது சருமத்தின் மெலனின் அளவைக் குறைத்து, சரும நிறத்தை அதிகரிக்க உதவுகிறது.
கடலை மாவு
கடலை மாவும் சரும அழகை மேம்படுத்த பழங்காலம் முதலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடலை மாவானது சருமத்தில் உள்ள அழுக்கை வெளியேற்றுகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம். இது பிம்பிளைத் தடுப்பதோடு, சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குகிறது. வறண்ட சருமத்தினருக்கு இது சருமம் வறட்சியடைவதைத் தடுக்கிறது.
எலுமிச்சை
எலுமிச்சையில் வைட்டமின்கள் மற்றும் சிட்ரிக் அமிலம் அதிகமாக உள்ளன. இவை முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்குகிறது. மேலும் இது சருமத்தை குளிர்ச்சியாகவும், அழுக்குகளின்றி சுத்தமாகவும் வைத்துக் கொள்ள உதவி புரிகிறது.
பயன்படுத்தும் முறை:
* முதலில் தக்காளியை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதை பொடியாக நறுக்கி, மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் கடலை மாவு, மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். வெதுவெதுப்பான நீரில் கழுவும் போது சருமம் இன்னும் நன்றாக இருக்கும்.
குறிப்பு: வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள், எலுமிச்சை சாற்றிற்கு பதிலாக 2 டீஸ்பூன் தயிரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எப்போது போடுவது நல்லது?
தக்காளி மற்றும் கடலை மாவு பேஸ் பேஸ்க்கை இரவு தூங்கும் முன் போடுவது நல்லது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று இரவு நேரத்தில் தான் நிறைய பேருக்கு நேரம் கிடைக்கிறது. மற்றொன்று இரவு நேரத்தில் வெயில் இருக்காது. இதனால் ஃபேஸ் பேக்கின் முழு பலனைப் பெறலாம். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்துவது நல்லது.
தக்காளி கடலை மாவு ஃபேஸ் பேக்கின் நன்மைகள்
தக்காளி கடலை மாவு ஃபேஸ் பேக்கை ஒருவர் அடிக்கடி தவறாமல் போட்டு வந்தால், பின்வரும் நன்மைகள் கிடைக்கும். அவை:
* முகப்பருக்கள் தடுக்கப்படும்
* உடல் சூடு குறையும்
* சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்
* சரும கருமை நீங்கும்
* சருமத்தின் நிறம் அதிகரிக்கும்
எனவே நீங்கள் உங்கள் சரும நிறத்தை அதிகரிக்க விரும்பினால், பார்லர் சென்று வீணாக பணத்தை செலவழிக்காமல், வீட்டிலேயே தக்காளி கடலை மாவு ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்கள்.



Click it and Unblock the Notifications











