Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
கோடையில் உங்க முகம் எப்பவும் பிரகாசமா ஜொலிக்கணுமா? அரிசி மாவை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
Skin Care Tips In Tamil: பொதுவாக சாதாரண கோடை நாட்களிலேயே வெயில் கடுமையாக இருக்கும். அதுவும் இந்த ஆண்டின் அக்னி நட்சத்திரம் மே 04 ஆம் தேதி தொடங்கிவிட்டது. இந்த அக்னி நட்சத்திர நாட்களில் வெயிலின் தாக்கம் அக்னி போன்று கொளுத்தும் வகையில் இருக்கும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளியே சென்றாலே சருமம் பொசுங்கி போகும். எனவே இந்த அக்னி நட்சத்திர நாட்களில் முடிந்தவரை பகலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதோடு சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளவும் போதுமான சரும பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும்.

அதுவும் நம் வீட்டின் சமையலறையில் உள்ள பல பொருட்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள பெரிதும் உதவி புரியும். அதில் ஒன்று தான் அரிசி மாவு. இந்த அரிசி மாவைக் கொண்டு கோடைக்காலத்தில் ஃபேஸ் பேக்கை போட்டு வந்தால், முகம் எப்போதும் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். இப்போது கோடையில் முகம் எப்போதும் பிரகாசமாக இருக்க உதவும் சில அரிசி மாவு ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
ஃபேஸ் பேக் #1
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #2
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் வெயிலால் சருமத்தில் ஏற்பட்ட கருமையைப் போக்க உதவும்.
ஃபேஸ் பேக் #3
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை எடுத்து, அத்துடன் நற்பதமான கற்றாழை ஜெல்லை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #4
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் முகத்தில் வரும் பருக்களைக் கட்டுப்படுத்தும்.
ஃபேஸ் பேக் #5
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌல் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றினை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தை குளிர்ச்சியாகவும், இறுக்கமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
ஃபேஸ் பேக் #6
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன்அரிசி மாவை எடுத்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது நீரை ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் மற்றும் சருமத்தை பளிச்சென்று பிரகாசமாக வைத்துக் கொள்ள உதவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
