Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்..
தலைமுடிக்கு வாழைப்பழம் ஏன் சிறந்தது? பளபளப்பான முடியை பெற வாழைப்பழத்தை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
நமது வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுத் தேர்வுகள் மற்றும் நம் தலைமுடியைப் பராமரிக்காமல் இருக்கும் மனப்பான்மை ஆகியவை வறண்ட, உதிர்ந்த மற்றும் சேதமடைந்த முடியை ஏற்படுத்துகின்றன. இந்த பட்டியலில் மன அழுத்தம் மற்றும் தீங்கு விளைவிக்கும் சுற்றுச்சூழலை நாம் சேர்க்க மறந்துவிடுகிறோம். இவையும் உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.

முடியில் ஏற்படும் சேதத்தைத் தடுக்க, இயற்கையான முடி பராமரிப்பு தயாரிப்புகளை பயன்படுத்த நிபுணர்கள் எப்போதும் அறிவுறுத்துகிறார்கள். ஆனால், நமக்கு மலிவான விலையில் எளிதில் கிடைக்கக்கூடிய வாழைப்பழத்தை பயன்படுத்த நாம் மறந்துவிடுகிறோம்.
வைட்டமின்கள், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சிலிக்கான் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக உள்ள வாழைப்பழம், பல்வேறு ஊட்டச்சத்து கூறுகளைக் கொண்டுள்ளன. அவை சேதமடைந்த முடியை மீட்டெடுக்க உதவுவது மட்டுமல்லாமல், முடியின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
தலைமுடிக்கு வாழைப்பழ ஹேர் பேக் இயற்கையான சூப்பர் கண்டிஷனராகக் கருதப்படுகிறது. இது தலைமுடிக்கு பொலிவை வழங்குகிறது. வாழைப்பழ ஹேர் மாஸ்க் அதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் காரணமாக பொடுகு பிரச்சனைக்கு சிகிச்சையளிப்பதற்கும் தடுப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் தலைமுடியை பளபளக்கச் செய்யும் சில சூப்பர் பயனுள்ள வாழைப்பழ ஹேர் மாஸ்க்குகளைப் பற்றி இங்கே காணலாம்.
இரசாயன தயாரிப்புகள் மற்றும் ஹேர் ஸ்டைலிங் பொருட்களில் காணப்படும் நச்சு இரசாயனங்கள் காரணமாக முடி சேதமடைந்து உதிர்கிறது. நீங்கள் பயன்படுத்தும் முடி ஸ்டைலிங் தயாரிப்புகளை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும். கோடை வெயில் உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தை முற்றிலும் பாதிக்கும் என்பதால், உங்கள் தலைமுடிக்கு கூடுதல் கவனம் செலுத்துங்கள். உங்கள் தலைமுடியை ஈர்ப்பதமாக்கவும் மற்றும் உடைவதைத் தடுக்கவும் ஒரு வாழைப்பழத்தை பால் அல்லது கிரீமில் கலந்து வீட்டில் ஹேர் மாஸ்க்காக பயன்படுத்தவும்.
1 வாழைப்பழம், 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை உங்கள் தலைமுடியில் சமமாக தடவி 20 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும். இந்த ஹேர் பேக்கை நீங்கள் வீட்டிலேயே எளிதில் தயாரித்து பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் ஒரு ஹேர் பேக்கைப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில், உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிப்பது மற்றும் அவற்றிற்குத் தேவையான சிகிச்சையை வழங்குவது முக்கியம். வறண்ட மற்றும் உதிர்ந்த கூந்தலைக் கட்டுப்படுத்த நீங்கள் வீட்டில் முயற்சி செய்யக்கூடிய மற்றொரு வாழைப்பழ ஹேர் மாஸ்க் உள்ளது.
வாழைப்பழ ஹேர் மாஸ்க்
- ஒரு டேபிள் ஸ்பூன் கண்டிஷனர்
- பாதி மசித்த வாழைப்பழம்
- ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
- ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
- 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும்
- 2-3 சொட்டு லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய்
இந்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து ஹேர் பேக் தயாரிக்கவும். அந்த பேஸ்ட்டை 20 நிமிடங்கள் தலைமுடியில் வைத்திருந்து முடியை அலச வேண்டும். இது உங்களுக்கு மிருதுவான மற்றும் பளபளப்பான முடியை கொடுக்கும் மற்றும் முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.
.



Click it and Unblock the Notifications


