அழகுக்காக அக்ரிலிக் நகங்களைப் பயன்படுத்தலாமா? எப்படி பயன்படுத்துவது?

Acrylic Nails In Tamil: தற்போதைய பேஷன் உலகில் பெண்கள் தங்கள் நகங்களை அழகாக வைக்க நிறைய மெனக்கெடல்களை செய்து வருகிறார்கள். நகங்களை அழகாக வைக்க நிறைய செயற்கை நகங்களும் கடைகளில் கிடைக்கிறது. அந்த வகையில் அக்ரிலிக் நகங்கள் நிறைய பெண்களின் தேர்வாக உள்ளது.

இந்த அக்ரிலிக் நகங்கள் உங்களுக்கு ஒரு டிரான்ஸ்பரண்ட் லுக்கை கொடுக்கும். இதில் உங்களுக்கு பிடித்த நெயில் அலங்காரத்தை கூட நீங்கள் பண்ணலாம். இருப்பினும் இந்த அக்ரிலிக் நகங்களை பயன்படுத்துவது உண்மையில் பாதுகாப்பானதா வாங்க தெரிஞ்சுக்கலாம்.

Pros And Cons Of Acrylic Nails In Tamil

அக்ரிலிக் நகங்கள்:

அக்ரிலிக் நகங்களை உங்கள் வீட்டில் வைத்து சீராக்க முடியாது. இதை சீராக்க தொழில்துறை நிபுணர்கள் தேவை. எனவே நிபுணர்களின் உதவியுடன் இதை நீங்கள் செய்து கொள்ள முடியும்.

பராமரிப்பு : அக்ரிலிக் நகங்களை இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு ஒரு முறை என மாற்ற வேண்டும். இதன் மூலம் அவற்றின் சேதத்தை தடுக்க முடியும். அவற்றின் நேர்த்தியையும் உங்களால் பராமரிக்க முடியும்.

அகற்றுதல் : அதே மாதிரி அக்ரிலிக் நகங்களை நீக்கும் போது அவற்றை தொழில் ரீதியாக நீக்குவது மிகவும் நல்லது. இது உங்களுக்கு பாதுகாப்பானது.

எச்சரிக்கை : அதே நேரத்தில் அக்ரிலிக் நகங்களில் பயன்படுத்தும் இராசயனங்கள் உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு நிறைய பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். எனவே அக்ரிலிக் நகங்களை பயன்படுத்துவதற்கு முன்பு அதில் என்ன பொருட்கள் சேர்க்கப்பட்டு உள்ளன என்பதை கவனியுங்கள்.

அக்ரிலிக் நகங்களின் நன்மை மற்றும் தீமைகள்:

நன்மைகள்:

* நகங்கள் உடையக் கூடிய வகையில் இருப்பவர்களுக்கு, பலவீனமான நகங்களை கொண்டவர்களுக்கு அக்ரிலிக் நகங்கள் பெருத்தமானவை.

* அதே நகங்களை கடிக்கும் கெட்ட பழக்கம் உள்ள பெண்களுக்கு அக்ரிலிக் நகங்கள் நல்லது. அவர்கள் அக்ரிலிக் நகங்களை பயன்படுத்தலாம்.

* அக்ரிலிக் நகங்கள் நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ளது. எனவே இதில் சலூன் வல்லுநர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். எனவே இந்த நகங்களை பயன்படுத்தும் போது பக்க விளைவுகள் ஏற்படும் என்ற கவலை தேவையில்லை.

* அக்ரிலிக் நகங்களின் விலை மலிவானது. எனவே இதை எளிதாக வாங்கி பயன்படுத்த முடியும்.

* அக்ரிலிக் நகங்களில் இருக்கும் மற்றொரு முக்கிய நன்மை அவற்றில் ஒன்று உடைந்தால் சரியான கருவியைப் பயன்படுத்தி அதை வீட்டிலேயே சரி செய்ய முடியும்.

* மற்ற ஜெல் நகங்களை விட இது நீண்ட காலம் நீடிக்கும்.

தீமைகள்:

* அக்ரிலிக் நகங்கள் சில சமயங்களில் அதன் அடியில் இருக்கும் உங்கள் இயற்கையான நகங்களை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் சேதமடைந்த நகங்களில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

* அக்ரிலிக் நகங்கள் வலுவான இராசயனங்களைக் கொண்டுள்ளது. இதனால் சில பெண்களுக்கு ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்படலாம்.

* மேலும் ஒவ்வொரு மாதமும் இந்த நகங்களை மாற்ற வேண்டியிருக்கும். இது உங்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

அக்ரிலிக் நகங்களை பயன்படுத்தும் போது எந்த மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்?

* நகங்களை தயார் செய்ய வேண்டும் - முதலில் உங்கள் கைகளை கழுவி நன்றாக சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு மென்மையான அடித்தளத்தை வழங்குவது அக்ரிலிக் பொருள் சிறப்பாக செயல் பட உதவுகிறது.

* நகங்களை சரியான அளவில் வெட்ட வேண்டும் - நகங்களை சரியான அளவில் வெட்டி சரி செய்ய வேண்டும்.

* நகங்களை பஃப் செய்யுங்கள் - பிறகு நகங்களின் மேற்பரப்பு கரடுமுரடாக இருக்கும் படி செய்யுங்கள். கடினமான மேற்பரப்பு அக்ரிலிக் நகங்கள் ஒட்டிக் கொள்வதை எளிதாக்குகிறது.

* நெயில் ப்ரைமரை பயன்படுத்துங்கள் - நகங்களின் மீதுள்ள ஈரப்பதம் மற்றும் எண்ணெயை அகற்ற ஒரு நெயில் ப்ரைமரை பயன்படுத்துங்கள். நகங்களை சுத்தம் செய்ய அசிட்டோன் என்ற பொருளைக் கொண்டு பருத்தி துணியால் துடைத்து எடுங்கள். சில ப்ரைமர்களில் மெத்தாக்ரிலிக் அமிலம் என்ற அமிலம் உள்ளது. இது உங்களுக்கு எரிச்சலை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக பயன்படுத்துங்கள்.

* பசையை பயன்படுத்துதல் - உங்கள் அக்ரிலிக் நகங்களை ஒட்டுவதற்கு உங்கள் இயற்கையான நகங்களின் மீது பசை தடவப்படும். எனவே பசை உங்கள் தோலை தொடாத வகையில் அப்ளை செய்ய வேண்டும். எனவே உங்கள் நகங்களை அதற்கேற்ப வெட்டி சரி செய்து கொள்ளுங்கள்.

அக்ரிலிக் நகங்களை தயாரிப்பது எப்படி?

* அக்ரிலிக் திரவத்தை ஒரு பாத்திரத்திலும், அக்ரிலிக் பவுடர்களை மற்றொரு பாத்திரத்திலும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அக்ரிலிக் கலவை தயாரிக்கும் போது புகைகள் வெளிவர வாய்ப்பு உள்ளது. எனவே இதை நல்ல காற்றோட்டமான இடத்தில் செய்வது மிகவும் அவசியம்.

* அக்ரிலிக் கலவையில் ப்ரஷ்யை நனைத்து எடுங்கள். பிறகு அதை நகங்களில் அப்ளை செய்யுங்கள்.

* அக்ரிலிக் கலவையை நகங்களின் மேல் தடவி நகங்களின் நுனிக்கும், இயற்கையான நகங்களுக்கு இடையே சீராக்குங்கள். தேவைப்பட்டால் மற்றொரு கோட்டிங் கொடுக்க வேண்டும்.

* பிறகு 10 நிமிடங்கள் நகங்களை உலர வைக்க வேண்டும். நகங்கள் நன்றாக உலர்ந்த பிறகு பஃப் செய்ய வேண்டும்.

* பிறகு உங்கள் அக்ரிலிக் நகங்களை பிடித்த வண்ணங்களில் நிறம் தீட்டிக் கொள்ளுங்கள். பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்.

அக்ரிலிக் நகங்களை வாங்கும் போது கவனத்தில் வைக்க வேண்டியவை:

* உங்கள் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்.
* ஒரு நல்ல நகங்களை அழகுபடுத்தும் நிபுணரை நாடி ஆலோசனை பெறுவது அவசியம்.
* உங்கள் நகங்களை உலர்த்துவது மிகவும் அவசியம்.
* உலர்ந்த நகங்கள் சீக்கிரம் உடைந்து போக வாய்ப்புள்ளது. எனவே நகங்களை ஈரப்பதமாக்க அதன் மீது ரேப்சீட் எண்ணெயை பயன்படுத்துங்கள்.

Story first published: Saturday, October 7, 2023, 17:40 [IST]
Desktop Bottom Promotion