Miss World 2024: 24 வயதில் உலக அழகி பட்டம் வென்ற செக் குடியரசின் அழகி நிஜ வாழ்க்கையில் என்ன செய்றார் தெரியுமா?

2024-ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டிகள் கோலாகலமாக நடந்து முடிந்து விட்டது. செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா 71வது உலக அழகியாக பட்டம் வென்றுள்ளார். மும்பையில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் 24 வயதான கிறிஸ்டினா உலக அழகி பட்டத்தை வென்றார். அவர் 115 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களுடன் போட்டியிட்டு இந்த பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளார்.

Miss World 2024 Krystyna Pyszkova of Czech Republic Won the 71st Miss World Title

கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற, போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா, கிரிஸ்டினாவுக்கு முடிசூட்டினார். கிறிஸ்டினா பட்டத்தை வென்றதுடன், லெபனானை சேர்ந்த Yasmina Zaytoun-க்கு கரோலினாவால் முதல் ரன்னர்-அப் பட்டம் முடிசூட்டப்பட்டது. டிரினிடாட் & டொபாகோவின் ஆச்சே ஆபிரகாம்ஸ் மற்றும் போட்ஸ்வானாவின் லெசெகோ சோம்போ ஆகியோர் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தைப் பெற்றனர்.

யார் இந்த கிறிஸ்டினா பிஸ்கோவா?

கிறிஸ்டினா பிஸ்கோவா ஒரு மாணவி, தன்னார்வலர் மற்றும் சர்வதேச மாடலாக உள்ளார். 24 வயதான இவர் மாடலாக பணிபுரிந்து கொண்டே சட்டம் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய இரண்டிலும் இரண்டு டிகிரி படித்து வருகிறார். அவர் Krystyna Pyszko அறக்கட்டளையை நிறுவியுள்ளார் மற்றும் அதன் மூலம் சமூகப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

மிஸ் வேர்ல்ட அமைப்பின் கூற்றுப்படி, கிறிஸ்டினாவின் வாழ்க்கையில் பெருமைக்குரிய தருணம் தான்சானியாவில் தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்காக ஒரு ஆங்கிலப் பள்ளியைத் திறந்தது. அவர் டிரான்ஸ்வர்ஸ் புல்லாங்குழல் மற்றும் வயலின் வாசிப்பதை ரசிக்கிறார் மற்றும் ஆர்ட் அகாடமியில் ஒன்பது ஆண்டுகள் கழித்ததால் இசை மற்றும் கலையில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

உலக அழகி போட்டியில், கிறிஸ்டினாவின் பியூட்டி வித் எ பர்பஸ் திட்டமானது தான்சானியாவில் குழந்தைகளுக்கான முன்னேற்ற பணிகளில் கவனம் செலுத்தியது, அங்கு அவர் ஒரு பள்ளியைத் திறந்து, குழந்தைகளுக்கான தரமான கல்வியை மேம்படுத்த தன்னார்வலராகப் பங்களித்தார். கல்வியே அவரது ஆர்வமாக இருப்பதால், செக் குடியரசில் தனது அறக்கட்டளையைத் திறக்க முடிவு செய்தார், குழந்தைகளுக்கு மட்டுமல்ல, வயதானவர்கள் மற்றும் மனநலம் குன்றியவர்களுக்கும் பல கல்வித் திட்டங்களை வழங்குவதில் கவனம் செலுத்தினார்.

இந்நிலையில், 28 ஆண்டுகளுக்கு பிறகு 2024-ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி இந்தியாவில் நடந்தது. இந்தியாவின் மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. கிருதி சனோன், மனுஷி சில்லர், பூஜா ஹெக்டே, ஹர்பஜன் சிங், ரஜத் சர்மா, அம்ருதா ஃபட்னாவிஸ், வினீத் ஜெயின், ஜூலியா மோர்லி சிபிஇ மற்றும் ஜமில் சைடி ஆகியோர் அழகுப் போட்டியில் நடுவர்களாக இருந்தனர். இதற்கிடையில், நிகழ்ச்சியில் ஷான், டோனி கக்கர் மற்றும் நேஹா கக்கர் ஆகியோர் சிறப்பான நிகழ்ச்சிகளை வழங்கினர்.

மிஸ் வேர்ல்ட் மனிதாபிமான விருது- நிதா அம்பானி

இந்நிகழ்ச்சியின் போது, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரும் நிறுவனருமான நிதா முகேஷ் அம்பானிக்கு அவரது தொண்டு பணிகளுக்காக மிஸ் வேர்ல்ட் மனிதாபிமான விருது வழங்கப்பட்டது. மிஸ் வேர்ல்ட் அமைப்பின் தலைவரான ஜூலியா மோர்லி சிபிஇ அவருக்கு இந்த விருதை வழங்கினார். விருது வழங்கும் விழாவின் போது பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் வீடியோ மெசேஜை வழங்கினார்.

மிஸ் இந்தியா சினி ஷெட்டி போட்டியில் முதல் எட்டு இடங்களுக்குள் நுழைந்த பிறகு போட்டியிலிருந்து வெளியேறினார்

Story first published: Sunday, March 10, 2024, 18:49 [IST]
Desktop Bottom Promotion