Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
கண்ணாடி அணிந்திருக்கும் பெண்களுக்கான சில மேக்-அப் டிப்ஸ்...
கண்ணாடி என்பது உப்புக்கு சப்பாக இருப்பவர்கள் அணியும் ஒரு பொருள் கிடையாது. அது அவசியமான ஒரு பொருளாக மாறி விட்டது. கண்ணாடியின் ஃப்ரேம் சின்னதாக, சிக்கென, கவர்ச்சியாக வந்துவிட்டது. அதனால் கண்ணாடி அணியும் பெண்கள், அவர்களின் கண்களுக்கு மேக்-அப் போடுவது முக்கியமானதாக மாறிவிட்டது.
நீங்கள் காண்டாக்ட் லென்ஸை நிரந்தரமாக தூக்கி எரிந்து விட்டீர்களா அல்லது அதனை சீரான முறையில் அணிய சோம்பேறித்தனமாக உள்ளதா? எப்படி இருந்தாலும் அழகான கண்கள் வேண்டாம் என எந்த பெண்ணும் கூற மாட்டார்கள். அதற்கு காரணம் முகத்தின் அழகை மிகைப்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது கண்கள்.

கண்ணாடி அணியும் பெண்கள் தங்கள் கண்களுக்கு எவ்வாறு மேக்-அப் போட வேண்டும் என்ற டிப்ஸ்கள் கூறப்பட்டுள்ளது. அவைகளைப் பின்பற்றி பயனைப் பெறுங்கள்.
1. நீங்கள் முதலில் ஆரம்பிக்க வேண்டியது உங்கள் புருவத்தில் இருந்து தான். உங்கள் புருவங்கள் சீர்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை கவனியுங்கள். உங்கள் கண்ணாடி உங்கள் புருவத்துடன் போட்டி போட வேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் புருவங்களை சரியான அளவில் வைத்திட தொழில் ரீதியான வல்லுனரை சீரான முறையில் சந்தியுங்கள். இந்த வகையில், உங்கள் கண்களுக்கான மேக்-அப் அங்கீகரிக்கப்படும்.
2. நல்ல ப்ரைமரை பயன்படுத்த வேண்டும். இதனால் கண்ணாடி அணிந்திருக்கும் உங்களின் கண்கள், கறை மற்றும் இழுவுதல் இல்லாமல், சரியாக இருக்கும்.
3. கண் இமை ரோமங்களை சுருட்டி விடுங்கள். மஸ்காராவில் முதலீடு செய்ய வேண்டும் என்றில்லை. அடிப்படை கர்லர் ஒன்றே போதும் உங்கள் பணியை திறம்பட செய்து முடித்திட. இதனால் கண்ணாடி அணிந்திருக்கும் பெண்களின் கண்களுக்கான மேக்-அப் சிறப்பாக அமையும்.
4. முடிந்தால் ஐ-ஷேடோ போடுவதை தவிர்க்கவும். நாங்கள் அதை கண்டிப்பாக வேண்டாம் என்று தான் கூறுவோம். அதற்கு காரணம் அது உங்கள் கண்ணாடியின் பின்புறத்தை நசநசவென ஆக்கி விடும். கண்ணாடி அணிந்திருப்பவர்கள் தங்கள் கண்களுக்கு மேக்-அப் போடும் போது இதனை தவிர்க்க வேண்டும் இல்லையா?
5. நல்ல ஐ-லைனரை பயன்படுத்துங்கள். பூனை கண் வடிவம் அல்லது இறக்கை வடிவம் போன்ற பல விதமான வடிவங்களை முயற்சித்து பாருங்கள். கண்ணாடி அணிந்திருக்கும் உங்களுக்கு, அதில் ஏதாவது ஒன்று ஒத்துப்போய், உங்கள் கண்களுக்கு அழகு சேர்த்திடும்.
6. கண்ணாடி அணிந்திருக்கும் நீங்கள் கண்களுக்கு மேக்-அப் செய்யும் போது, நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடி வகை (மெல்லியது அல்லது தடியானது) உங்கள் கண்களை சிறியதாக காட்டுமா அல்லது பெரிதாக காட்டுமா என்பதை தெளிவாக கூற வேண்டும்.
7. கண்ணாடி அணிந்திருக்கும் நீங்கள் கண்களுக்கு மேக்-அப் செய்யும் போது, உங்கள் கண்கள் சிறியதாக தெரிந்தால், கண்களை சுற்றி ஐ-லைனர் போட்டுக் கொள்ளுங்கள்.
8. ஒருவேளை உங்கள் கண்கள் பெரியதாக தெரிந்தால், அளவுக்கு அதிகமாக ஐ-லைனரை பயன்படுத்தாதீர்கள். அதனை லேசாக போட்டு, கண்களை சின்னதாகவும் மென்மையானதாகவும் காட்டுங்கள்.
9. உடனடி அழகு மற்றும் அடர்த்தியான தோற்றத்தை பெற, சிவப்பு, பிங்க் போன்ற அடர்த்தியான நிறங்களை கொண்ட லிப்ஸ்டிக்கை பயன்படுத்துங்கள். கண்ணாடி அணிந்தவர்கள் கண்களுக்கு மேக்-அப் போடும் போது, அதிக முயற்சி இல்லாமல், இது உங்கள் முக தோற்றத்தை உயர்த்தி காட்டும்.
10. ப்லஷரை மறந்து விடாதீர்கள். கண்ணாடி அணிந்திருக்கும் நீங்கள் கண்களுக்கு மேக்-அப் செய்யும் போது கன்னங்களில் பிங்க் நிற ப்லஷரை பயன்படுத்தினால் உங்கள் மேக்-அப் சோடை போகாது. உங்கள் தோற்றமும் பனித்துளியை போல நற்பதமாக விளங்கும்.
மேற்கூறிய அனைத்தையும் பின்பற்றினாலும் கூட, உங்களின் சருமம் ஆரோக்கியமாக இல்லையென்றால், அனைத்து உழைப்பும் வீணாகிவிடும். அதனால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்து நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்.



Click it and Unblock the Notifications