Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மேக்-அப் பிரைமரை எப்படி போடுவதென்று தெரியுமா?
மேக்-அப் பிரைமர் என்பது மேக்-அப் செய்வதற்கு முன் போடக்கூடியது. பொதுவாக இதனை மேக்-அப் வெகுநேரம் முகத்தில் தங்குவதற்காக போடுவார்கள். இது தற்பொழுது மிகவும் பரவலாக காணப்படுகின்றது. மேக்-அப் போடும் முன் இதை தடவுவதால், முகத்தின் தன்மை மேக்-அப்பிற்கு ஏற்றார் போல் மாறி, மேக்-அப் போட வசதியாக இருக்கும். இதன் மூலம் மேப்-அப் போட்டிருந்தாலும் இயற்கையான சருமத்தை போன்ற அமைப்பை பெற முடியும். இதனால் முகத்திற்கு போடும் மேக்-அப் வெகு நேரத்திற்கு கலையாமல் இருப்பதுடன், மிகவும் அழகாகவும் காட்டும்.
மேலும் இந்த மேக்-அப் பிரைமர் போட்டால், முகத்தில் அதிக மேக்-அப் வழிவதை கட்டுப்படுத்தும். குறிப்பாக இதனை மேக்-அப் வெகுநேரம் தங்காத இடத்தில் தடவ வேண்டும். எடுத்துக்காட்டாக, தாடை, கண் இமைகள், உதடு மற்றும் முகத்தை சுற்றி இதை போட வேண்டும். எந்த வகையான மேக்-அப்பாக இருந்தாலும், போடும் முன்னர் முகம் சுத்தமாக இருப்பது அவசியம்.

* முதலில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். அதிலும் சோப் அல்லாத ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி, குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும்.
* பின் மென்மையான மற்றும் சுத்தமான துணியை வைத்து முகத்தை துடைக்க வேண்டும்.
* அடுத்து ஈரப்பதம் தரும் க்ரீமை தடவி, சருமத்தில் அது காயும் வரை விட வேண்டும்.
* காய்ந்தவுடன் பிரைமரை தடவ வேண்டும். அதிலும் முகத்தில் மேக்-அப் அதிக நேரம் தங்காத இடத்தில் கவனமாக பூச வேண்டும். கண் இமை, உதடு மற்றும் தாடை போன்ற இடங்களில் அதிக கவனம் கொண்டு பூசவும்.
* பிறகு முகம் முழுவதும் பூச வேண்டும். பிரைமரானது நன்கு முகத்தில் காய்ந்தவுடன், ஃபௌண்டேஷன் க்ரீம் (foundation cream) பூச வேண்டும். பிறகு பாருங்கள் நீங்கள் தேவதை தான்.



Click it and Unblock the Notifications