Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
மேக் அப் போட்டா சுத்தமா இருக்கணும்!

மேக் அதிகமாக போட்டுவிட்டோமே என்று நினைப்பவர்கள் சிறிதளவு பஞ்சு எடுத்து அதிகமுள்ள இடங்களில் துடைக்கவும். அந்த இடத்தை காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்யலாம்.
அதிகப்படியான மேக் அப்பினை சரி செய்ய பேஷியல் கிளன்சர் சிறந்த பொருளாகும். அதிகமாக இருக்கும் இடங்களில் கிளன்சர் போட்டு கழுவலாம். கன்னத்தில் அதிகமாக ரூஜ் அப்பிவிட்டால் பஞ்சு எடுத்து கன்னங்களில் உருட்டலாம். சிறிதளவு காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்யலாம்.
கண் இமைகளின் மேல் ஐஷேடோ அதிகமாவிட்டால் சிறிதளவு கிரீம் போட்டு கழுவி விடலாம். லிப்ஸ்டிக் அதிகமாகிவிட்டால் பிளைன் டிஸ்யூ பேப்பர் வைத்து லேசாக ஒற்றி எடுக்கலாம். இதனால் லிப்ஸ்டிக் அதிகமாக போட்டது போல தெரியாது.
மேக்அப் கலைக்க
பண்டிகை, விழா மற்றும் பார்ட்டிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய பின்னர், தூங்கச் செல்வதற்கு முன்பாக மேக்கப்பை நன்றாக கழுவி விடவும். இதனால் சருமத்தின் இயல்புத்தன்மை பாகாக்கப்படும். மேக் அப் போட்டவாறு தூங்குவது சருமத்தை பாதிக்கும். எனவே சருமத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள் மேக் அப் கலைத்து விட்டு தூங்குவதுதான் பாதுகாப்பானது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
மேக்கப்பை கழுவி சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்பட்டு விடும். குறிப்பாக கண்களைச் சுற்றியிருக்கும் மேக்கப்பை கலைப்பதற்கு பேபி ஷாம்புவை பயன்படுத்துவது சிறந்த வழி.
இரண்டு சொட்டு பேபி ஷாம்புவை எடுத்து கைவிரல்களில் தடவிக் கொண்டு, கண் இமை மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவவும். பின்னர் நன்றாக கண்களை மூடிக் கொண்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இதன் பின்னர் தூங்கினால் நன்றாக தூக்கமும் வரும்.



Click it and Unblock the Notifications