Latest Updates
-
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க..
அழகான புருவம் வேண்டுமா? இந்த சீரம் பயன்படுத்துங்கள்.. வீட்டிலேயே செய்யலாம்..!
பெண்களின் அழகை முடிவு செய்வது அவர்களின் முகம் தான். அதிலும் புருவம் அழகாக இருக்கும் பெண்ணை பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்க தோன்றும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. கண்களின் அழகு புருவங்களைப் பொறுத்தது. உங்கள் கண்களின் அழகு உங்கள் முகத்தின் அழகை மேம்படுத்துகிறது. ஆனால் உங்கள் கண்களின் அழகை மேம்படுத்துவது உங்கள் அழகான புருவங்களும் கண் இமைகளும்தான்.
மெல்லிய அல்லது வெளிறிய புருவங்கள் மற்றும் கண் இமைகள் உங்கள் தோற்றத்தை கெடுத்துவிடும். அப்படிப்பட்டவர்கள் முழுக்க முழுக்க ஐப்ரோ பென்சிலையே நம்பியிருக்க வேண்டும். ஆனால் வீட்டில் தயாரிக்கப்படும் சீரம் புருவங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் எப்போதும் சில வீட்டு குறிப்புகளையும் செய்து வந்தால் புருவங்கள் அழகாகவும் மென்மையாகவும் இருக்கும்.

அழகான புருவங்கள் முகத்தின் அழகை அதிகரிக்கும். ஆனால் சில சமயங்களில் முகத்தின் தூய்மை மற்றும் அழகை கவனித்துக் கொள்ளும்போது புருவங்களை அலட்சியப்படுத்துகிறோம். புருவங்களை தூய்மை செய்வது முக்கியமானது. முடியை சுத்தம் செய்ய தலைக்கு குளிப்பது போல புருவங்களையும் தொடர்ந்து சுத்தம் செய்வது முக்கியம்.
தினமும் ஒரு பஞ்சினால் உங்கள் புருவங்களை பச்சை பால் கொண்டு சுத்தம் செய்யவும். முழு முகத்தையும் அல்லது கண்களைச் சுற்றியுள்ள பகுதியையும் சுத்தம் செய்யவும். பச்சை பால் ஒரு நல்ல கிளன்ஸ்சர். அதனால் இது சருமத்தை நன்கு சுத்தப்படுத்துகிறது.
பச்சைப் பால் கொண்டு சுத்தப்படுத்திய பிறகு, சுத்தமான துண்டை எடுத்து வெதுவெதுப்பான நீரில் நனைத்து உங்கள் புருவப் பகுதியை சுத்தம் செய்யலாம். வெந்நீர் கிடைக்கவில்லை என்றால்.. சாதாரண நீரையும் பயன்படுத்தலாம். உங்கள் கண் இமைகள் மற்றும் புருவங்கள் முற்றிலும் உலர்ந்ததும். இப்போது உங்கள் புருவங்களில் வீட்டில் தயாரிக்கப்பட்ட சீரம் தடவுங்கள்.
இந்த சீரம் தயார் செய்ய தேவையான பொருட்கள்
முதலில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல், 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றை ஒரு கண்ணாடி கிண்ணத்தில் கலக்கவும். அதில் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் சேர்க்கவும். தேங்காய் எண்ணெயில் வைட்டமின் ஈ இருந்தாலும், இந்த கேப்ஸ்யூலை தனியாக எடுத்துக்கொள்வதன் மூலம் அதிக பலன் கிடைக்கும்.
இப்போது இந்த பேஸ்ட்டை நன்றாக கலக்கவும். கற்றாழை ஜெல் தண்ணீரை அடிப்படையாகக் கொண்டது, எனவே நீங்கள் இந்த சீரம் நன்றாக கலக்க வேண்டும். அப்படி நன்றாக கலக்கிய பின் ஒரு ஜெல் போல திரண்டு வரும். இப்போது உங்கள் சீரம் ரெடி.
இந்த சீரத்தை உங்கள் புருவத்தில் பிரஷ் உதவியுடன் தடவவும். விரும்பினால், நீங்கள் ஒரு வெற்று மஸ்காரா பாட்டிலை நன்கு சுத்தம் செய்து, அதன் தூரிகையைப் பயன்படுத்தி உங்கள் கண் இமைகளில் இந்த சீரம் தடவலாம். இதில் எண்ணெய் மட்டுமே இருப்பதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது.
தினமும் இரவில் இந்த சீரத்தை இப்படி கண்களிலும் இமைகளிலும் அப்ளை செய்து வந்தால் நல்ல தூக்கம் வரும்.இந்த சீரம் தடவிய பிறகும் தூக்கம் வரவில்லை என்றால் குறைந்தது 1 மணிநேரம் வைத்திருந்து பிறகு தண்ணீரில் முகத்தை கழுவிவிட்டு தூங்குங்கள்.
உங்கள் புருவங்கள் அடர்த்தியாக வளர எந்த உத்தரவாதமும் இல்லை என்றாலும் , புருவ வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் இந்த மாதிரியான இயற்கை வீட்டு வைத்தியங்களை செய்துவாருங்கள். அதனால் உங்களின் புருவம் நன்றாக வளர தொடங்குவதுடன், உங்களின் முகமும் பார்ப்பதற்கு அழகாக தோன்றும்.



Click it and Unblock the Notifications
