Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
முகத்தில் உள்ள கருவளையம், தழும்புகள் மற்றும் பருக்களை மறைக்க கண்சீலரை எப்படி பயன்படுத்தலாம்?
கண்சீலரை முகத்திற்கு எவ்வாறு உபயோகிப்பது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது
என்னதான் அழகாக இருந்தாலும் முகத்தில் ஒரு சில இடங்களில் உள்ள கருமை மற்றும் பருக்கள் முகத்தின் வசிகரம் மற்றும் அழகை கெடுப்பதாக இருக்கும். தீடிரென வெளியே முக்கியமான இடங்களுக்கு செல்லும் போது வீட்டில் செய்யக்கூடிய அழகு குறிப்புகள் பயன்படாமல் போகும். உடனடியாக முகத்தில் இருக்கும் கருவளையம், சமமற்ற தோலின் நிறம், முகப்பருக்கள் ஆகியவற்றை எப்படி தான் மறைப்பது?
அதற்காக தான் இருக்கிறது கண்சீலர். இதனை பயன்படுத்தி முகத்தை அழகாக மாற்றலாம். இந்த கண்சீலரை எப்படி எல்லாம் உபயோகிக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

1. முதலில் பவுண்டேஷன்
நீங்கள் எடுத்தவுடன் கண்சீலரை முகத்தில் தடவக்கூடாது. முதலில் பவுண்டேசனை தான் முகத்தில் தடவ வேண்டும். பின்னர் கண்சீலரை தடவுங்கள். இது முகத்தில் மேக்கப் கலைவதை தடுக்கும்.

2. கண்களுக்கு..
கண்சீலர் கண்களுக்கு அடியில் இருக்கும் கருவளையத்தை நீக்கும். இதனை முக்கோண வடிவத்தில் தடவ வேண்டும். பிறை நிலவு வடிவத்தில் தடவக் கூடாது. இவ்வாறு தடவுவதன் மூலம் கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களை மறைக்கலாம்.

3. ஐ சேடோ நீண்ட நேரம் நிலைக்க
ஐ சேடோ நீண்ட நேரம் நிலைத்திருக்க முதலில் கண்சீலரை தடவி விட்டு பின்னர் ஐ சேடோவை தடவலாம். ஐ சேடோ பிரைமர் வாங்கி பணத்தை செலவழிக்க விரும்பாதவர்களுக்கு இது உதவும்.

4. உதடுகளுக்கு
உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போடும் முன்னர் கண்சீலர் போடுவதால் லிப்ஸ்டிக்கின் உண்மையான நிறத்தை பெற முடியும். இது உதடுகளின் நிறத்தை எடுத்துக்காட்டும்.

5. முகப்பருக்கள்
முகப்பருக்கள் முகத்தின் அழகை கெடுக்கும். இவற்றை கண்சீலரை கொண்டு மறைக்கலாம். இதற்கு பச்சை நிற கண்சீலரை தடவி பின்னர் உங்கள் முகத்தின் நிறத்திற்கு ஏற்றவாறு உள்ள கண்சீலரை தடவ வேண்டும்.



Click it and Unblock the Notifications
