Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
பளீச் முகத்திற்கு இத மட்டும் யூஸ் பண்ணா போதும்!
தக்காளியை பயன்படுத்தி முகத்தை பளீச் ஆக்கிட சில டிப்ஸ்
முகத்தை பராமரிக்க ஏகப்பட்ட டிப்ஸ்கள் இருந்தாலும் நம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே நம் அழகை மெருகேற்ற எக்கச்சக்கமான டிப்ஸ்கள் இருக்கிறது. தக்காளி, தக்காளி இல்லாமல் ஒரு நாளும் சமையல் ஓடாது. எப்போதுமே வீட்டில் இருக்கும் தக்காளியைக் கொண்டு அழகை பராமரிக்க சில சூப்பர் டிப்ஸ்

எண்ணைப்பசை :
பழுத்த தக்காளியை பசைப்போல அரைத்து, முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.

தழும்புகள் :
தக்காளிச்சாறு மற்றும் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.

பொலிவு :
ஒரு டீஸ்பூன் தக்காளிச் சாறுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து, பஞ்சில் தோய்த்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் பிறகு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் இருமுறை செய்து வந்தால், முகம் பொலிவு பெறும்.

சன் டேன் :
வெளியில் அதிகம் அலைபவர்களுக்கு சன் டேன் வரும். அதனை நீக்க தக்காளிப்பழத்தை அரைத்துக் கொள்ளுங்கள். அந்த கலவையுடன் சிறிதளவு தயிர் சேர்த்து கருமை அடைந்த இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்தால் சன் டேன் மறைந்திடும்.

பளீச் முகத்திற்கு :
தக்காளிச்சாறு இரண்டு டீஸ்ப்பூன் எலுமிச்சை சாறு ஒரு டீஸ்ப்பூன் கலந்து முகத்தில் அப்ளை செய்து அது காய்ந்ததும் கழுவி விடலாம். இப்படிச் செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கி பளிச் சென்று தெரியும்.

ஆரோக்கியம் :
வறண்டிடாமல், ஆரோக்கியமான சருமமாக தெரிய தக்காளிச் சாறுடன் இரண்டு டீ ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி வர நல்ல பலன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
