இந்த உணவுகள் உங்களுக்கு நரைமுடி வருவதை எளிதாக தடுக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்க...!

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாக நரை முடி பிரச்சனை உள்ளது. இன்றைய பெரும்பாலான மக்கள் தலைமுடி பிரச்சனையால் அவதியடைந்து வருகிறார்கள்.

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாக நரை முடி பிரச்சனை உள்ளது. இன்றைய பெரும்பாலான மக்கள் தலைமுடி பிரச்சனையால் அவதியடைந்து வருகிறார்கள். தலைமுடி விரைவிலையே நரைப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது உங்கள் வாழ்க்கை முறை. தலைமுடி பிரச்சனைக்கு எப்போதும் இயற்கையான தீர்வுகளே சிறந்தது. சில சூப்பர் உணவுகள் முடியின் முன்கூட்டிய நரையை குறைக்கும் திறன் கொண்டவை என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படலாம். அனைத்து முடி இழைகளும் அவை வளரும்போது மீளுருவாக்கம் மற்றும் இறப்பு சுழற்சிக்கு உட்படுகின்றன. மேலும் முடியின் வேர்கள் சுறுசுறுப்பாக இருக்கும் வரை இந்த சுழற்சி தொடர்கிறது. இது உங்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

Foods That May Help Prevent Greying Hair in Tamil

முடியின் வேர்கள் அழுத்தங்களையும் வயதையும் சந்திக்கும் போது, அவை ஒவ்வொரு கட்டத்திலும் குறைவான நிறத்தை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும். இதன்காரணமாக முடி நரைக்கத் தொடங்குகிறது. நரைக்கும் நேரம் நமது மரபணுக்களால் ஓரளவு தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் நரை முடி பிரச்சனையை சரி செய்ய உதவும் உணவுகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவுமுறை

உணவுமுறை

நரை முடி எவ்வளவு சீக்கிரம் மற்றும் எவ்வளவு விரைவாக வளரும் என்பது உங்கள் மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, உங்கள் பெற்றோரில் யாருக்கேனும் 30 வயதிற்குள் முடி நரைத்திருந்தால், அவர்களை இந்த உணவுக்குறிப்புகளை பின்பற்று சொல்லுங்கள். உணவுமுறை நம் ஆரோக்கியத்தைப் பாதிப்பதைப் போலவே, அது நம் தோல் மற்றும் முடியையும் பாதிக்கிறது. முன்கூட்டிய முடி நரைப்பதைத் தடுக்கும் பல உணவுகள் உள்ளன. முடிக்கு ஊட்டமளிப்பதுடன், அதனுடன் தொடர்புடைய பல பிரச்சனைகளையும் நீக்குகின்றன.

புளித்த உணவுகள்

புளித்த உணவுகள்

கொம்புச்சா, ஊறுகாய் மற்றும் பிற புரோபயாடிக் உணவுகள் போன்ற சில புளித்த உணவுகள் உங்கள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். புளித்த உணவுகள் செரிமான அமைப்புக்கு நல்லது மட்டுமல்ல, முடி வளர்ச்சிக்கும் நன்மை பயக்கும். இதன் விளைவாக, குடல் பாக்டீரியா பி-வைட்டமின் பயோட்டின் உற்பத்தி செய்கிறது. இது நம் முடி, தோல் மற்றும் நகங்களின் ஆரோக்கியத்துடன் நேரடியாக தொடர்புடையது. பயோட்டின் குறைபாடு உங்கள் முடியின் நிறம் மற்றும் வலிமை ஆகிய இரண்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

சால்மன் மீன்

சால்மன் மீன்

சால்மன் மீன் வைட்டமின் டி-இன் ஆரோக்கியமான ஆதாரமாக உள்ளது. ஒரு நபர் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டு, முன்கூட்டியே முடி நரை முடி பிரச்சனையை சந்தித்தால், அவர்கள் வைட்டமின் டி-3 சப்ளிமெண்ட்ஸ் மூலம் பயனடையலாம். சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களை உணவில் சேர்த்துக் கொண்டால், வைட்டமின் டி மற்றும் ஒமேகா 3 மற்றும் புரோட்டீன் ஆகியவை கிடைக்கும். இது உங்கள் தலைமுடியை கருமையாக்குவதுடன் வலுவாகவும் பட்டுப் போலவும் மாற்ற உதவும்.

முட்டை

முட்டை

முடிக்கு மிகவும் பயனுள்ள உணவுகளில் ஒன்றாக முட்டை கருதப்படுகிறது. அவற்றில் உள்ள புரதத்துடன் கூடுதலாக, அவை வைட்டமின் பி 12 ஐக் கொண்டிருக்கின்றன. இது தாவர அடிப்படையிலான உணவுகளில் உடனடியாக கிடைக்காது. வைட்டமின் பி 12 இன் குறைபாட்டை முட்டை சாப்பிடுவதன் மூலமும் பூர்த்தி செய்யலாம். ஆனால் நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், உங்கள் உணவில் கூடுதலாக வைட்டமின் பி 12 சப்ளிமெண்ட் தேவைப்படும். முன்கூட்டிய நரை முடி பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சோயாபீன்ஸ்

சோயாபீன்ஸ்

சோயாபீன்ஸ் ஆரோக்கியமான புரத மூலத்தை வழங்குகிறது. சோயாபீன்ஸில் உள்ள புரதம் முடியை பலப்படுத்துகிறது. இது தவிர, பல ஊட்டச்சத்துக்களும் அவற்றில் ஏராளமாக உள்ளன. சோயாபீன்களில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கிறது. இதன் விளைவாக, உங்கள் முடி நீண்ட காலத்திற்கு வெள்ளையாக மாறாது.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் தாமிரம் உள்ளது. இது நரை முடி மற்றும் வயதானதைத் தடுக்கும் மற்றொரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். இரும்பு மற்றும் தாமிரம் இரண்டு ஊட்டச்சத்துக்கள் நரைத்த முடி மற்றும் வயதானதைத் தடுப்பதற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு முடி பிரச்சனைகளுக்கு மிகவும் பொதுவான காரணமாகும். அதே சமயம் தாமிர குறைபாடு மெலனின் குறைபாட்டிற்கு முக்கிய காரணமாகும். டார்க் சாக்லேட்டை மிதமாக உட்கொள்வதன் மூலம், உங்கள் தலைமுடியின் நிறத்தை பராமரிக்கவும், உங்கள் சருமத்தின் இளமை தோற்றத்தை பராமரிக்கவும் முடியும்.

 இறுதிக் குறிப்பு

இறுதிக் குறிப்பு

ஒரு இயற்கையான, வயது தொடர்பான செயல்முறை முடி நரைப்பது. நரைத்தல் என்பது நிறமியை உருவாக்கும் செல்கள் இறக்கத் தொடங்கும் செயல்முறையாகும். மேலும் முடியின் இழைக்கு வண்ணம் சேர்க்கும் செயல் குறைவாகவும் இருக்கும், இறுதியில் முடிக்கு நிறமே இல்லாமல் சாம்பல் நிறமாகத் தோன்றும். அதன் விளைவாக. வெள்ளை முடி ஏற்படுகிறது. காரணம் மரபணுவாக இருந்தால், நிற மாற்றத்தைத் தடுக்கவோ அல்லது நிரந்தரமாக மாற்றவோ முடியாது. நீங்கள் அடிப்படை உடல்நலப் பிரச்சனைக்கு சிகிச்சையளித்தால் அந்த நிறமி மீண்டும் திரும்பலாம். ஆனால் எந்த உத்தரவாதமும் இல்லை. உங்களுக்கு உடல்நலப் பிரச்சனை இருந்தால், வெள்ளை முடிக்கு சுகாதார நிலை காரணமா என்பதைத் தீர்மானிக்க மருத்துவ உதவியை நாடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, February 17, 2023, 21:45 [IST]
Desktop Bottom Promotion