Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
ஆண்களே, உங்களின் தலை முடி துர்நாற்றம் அடிக்கிறதா..? இதனை போக்க இவற்றை செய்தாலே போதும்...
அழகான முடி வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லாமல் இருக்கும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஏனோ முடியின் மீது ஒரு மோகம் இருக்கத்தான் செய்கிறது. முடி அடர்த்தியாகவும், கருமையாகவும், நீளமாகவும் இருக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பம். ஆனால், நமது முடியின் அழகையே முடியில் இருந்து வரும் துர்நாற்றம் கெடுத்து விடுகிறது.

உண்மைதாங்க, நமது முடி கருமையாக அடர்த்தியாக இருந்தால் போதாது. முடியில் நாற்றம் வீசினால் நம் அருகில் யார்தான் வருவார்கள். குறிப்பாக ஆண்கள் வெளியில் அதிகம் சுற்றுவதால் முடியை பராமரிப்பதில்லை. இதனால் அதிக துர்நாற்றம் ஏற்படுகிறது. முடியில் வீசும் நாற்றத்தை எளிமையாக போக்க உங்களின் வீட்டில் உள்ள இந்த பொருட்களே போதும். வாங்க, எப்படினு தெரிந்து கொள்வோம்.

துர்நாற்றம் ஏன் வீசுகிறது..?
முடியில் அளவுக்கு அதிகமாக அழுக்கு சேர்ந்தாலோ, பொடுகு அதிகமானாலோ, பேன்கள் இருந்தாலோ தலையில் துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் அதிகமானால் பல வித பிரச்சினைகள் தலைக்கு வர தொடங்கும். குறிப்பாக முடியின் ஆரோக்கியம் கெட்டு விடும். எனவே, துர்நாற்றம் வீசினால் உடனடியாக இந்த பதிவில் கூறும் குறிப்புகளை செய்யுங்கள்.

பூண்டு இருந்தாலே போதும்...!
தலையில் ஏற்பட கூடிய துர்நாற்றத்தை எளிமையாக குணப்படுத்த ஒரு அற்புத வழி உள்ளது. இதற்கு வெறும் பூண்டு இருந்தாலே போதும்.
தேவையானவை :-
பூண்டு 3
தேங்காய் எண்ணெய் 1/2 கப்

செய்முறை :-
முதலில் தேங்காய் எண்ணெய்யை எடுத்து கொண்டு அதில் பூண்டை ஊற வைத்து கொள்ள வேண்டும். பிறகு, இந்த எண்ணெய்யை சிறிது சூடு காட்டி ஆற வைக்கவும். இந்த எண்ணையை தலைக்கு தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், தலையில் அடிக்க கூடிய துர்நாற்றம் விரைவில் போய் விடும்.

ஆலிவ் எண்ணெய்
தலையில் அடிக்க கூடிய துர்நாற்றத்தை எளிமையாக போக்க ஆலிவ் எண்ணெய் உதவும். இதற்கு முதலில் ஆலிவ் எண்ணெய்யை தலைக்கு தேய்த்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு, சிறிது சிகைக்காய் அல்லது ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளித்தால் நாற்றம் போகும்.

கலவை எண்ணெய்
ஒரு சில எண்ணெய்யை தலைக்கு கலந்து குளித்தால் தலையில் அடிக்க கூடிய துர்நாற்றம் சீக்கிரமாக போய்விடும். இதற்கு இந்த குறிப்பு உதவும்.
தேவையானவை :-
வேப்பெண்ணெய் 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்

செய்முறை :-
வேப்பெண்ணயை அப்படியே தலைக்கு தேய்க்க கூடாது. மாறாக வேறு சில எண்ணெய்களுடன் கலந்து தடவலாம். குறிப்பாக தேங்காய் எண்ணெய், அல்லது ஆலிவ் எண்ணெய்யுடன் சேர்த்து தலைக்கு தடவி குளித்தால் நாற்றத்தை எளிதாக போக்கி விடலாம்.

வெங்காயம்
நாம் சமையலுக்கு பெரிதும் பயன்படுத்தும் இந்த வெங்காயம் நமது முடியின் ஆரோக்கியத்திற்கும் நலனுக்கும் பெரிதும் உதவுகிறது. மேலும், தலையில் உள்ள கிருமிகளை கொன்று நாற்றத்தை போக்குகிறது. குறிப்பாக இதில் உள்ள சல்பர் முடியின் துர்நற்றத்தை போக்க உதவுகிறது.

செய்முறை :-
முதலில் 3 வெங்காயத்தை எடுத்து கொண்டு, சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும். பிறகு அதனை நன்றாக அரைத்து கொண்டு வடிகட்டி கொள்ளவும். இந்த சாற்றை தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு சிறிது ஷாம்பூ சேர்த்து தலைக்கு குளித்தால் நாற்றம் இல்லாமல் இருக்கும்.

எலுமிச்சை :-
தலைக்கு எலுமிச்சை தேய்த்து குளிப்பதால் பல்வேறு நலன்கள் உள்ளது. குறிப்பாக பொடுகு, துர்நாற்றம் போன்றவை குணமாகும். மேலும், முடியின் ஆரோக்கியத்தையும் எலுமிச்சை அதிகரிக்கும். எனவே, எலுமிச்சை சாற்றை தலைக்கு தேய்த்து வந்தால் துர்நாற்றம் விலகி விடும்.
இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications