Latest Updates
-
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்!
நரை முடி இனிமேலும் வரவேக் கூடாதுன்னா இந்த மூலிகை எண்ணெயை யூஸ் பண்ணுங்க!!
கூந்தல் அடர்த்தியாக வளர மற்றும் முகப்பருக்களை போக்க நீங்கள் வீட்டில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
முகப்பரு, சரும அலர்ஜி முடி உதிர்தல், நரை முடி இந்த கால பிள்ளைகளிடம் விரைவில் பாதிப்புக்கும் பிரச்சனைகள் இவை. இந்த பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணம் பழக்க முறைகள்தான்
ஷாம்புக்களை தவிர்த்துவிட்டு இங்கே சொல்லப்பட்டிருக்கும்படி உங்கள் கூந்தலுக்கு உபயோகித்துப் பாருங்கள். கூந்தல் அடர்த்தியாவது மட்டுமில்லாமல் நரை முடி என்பது வரவே வராது. நரை முடி ஆரம்பத்தில் இருப்பவர்களும் இந்த எண்ணெயை உபயோகித்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் அழகான முடி பெறலாம்.

நரை முடியை தடுப்பதற்கும் முகப்பருக்கள் வராமல் காப்பதற்கும், அதற்கான எளிய குறிப்புகளை இங்கே தரப்பட்டுள்ளது. படியுங்கள்.

மூலிகை எண்ணெய் :
மருதாணி இலை, கறிவேப்பிலை, வெந்தயக் கீரை, வெள்ளை கரிசலாங்கண்ணி இவை எல்லாமும் தலா 4 கைப்பிடி, பெரிய நெல்லிக்காய் அரை கிலோ.. இவற்றை நன்றாக அரைத்துச் சாறெடுங்கள்.

மூலிகை எண்ணெய் :
இதனுடன் தண்ணீர் கலக்காத திக்கான தேங்காய்ப் பால் 4 லிட்டர் அல்லது தேங்காய் எண்ணெய் 1 கிலோ கலந்து நன்கு காய்ச்சினால் கரும்பச்சை நிறத்தில் எண்ணெய் கிடைக்கும்.
இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால் சில வாரங்களிலேயே நரை கூந்தல் அத்தனையும் கருங்கூந்தலாக மாறிவிடும். சிறு வயது முதலே குழந்தைகளுக்குத் தடவி வந்தால் கூந்தல் அத்தனை சீக்கிரத்தில் நரைக்காது..

முகப்பருக்களை போக்க :
துளசி, புதினா, வேப்பிலை மூன்றும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஜூஸ் ஆக்குங்கள். பச்சை பயறு மாவுடன் கொஞ்சம் வேப்பிலையை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். முகத்தை கழுவிய பின் இந்த சாறை எடுத்து முகத்தில் இதமாக தேய்க்கவும்.

வாரம் ஒருமுறை :
காய்ந்த பின் பிறகு, பச்சைப் பயறுடன் கலந்த வேப்பிலையை முகத்தில் போட்டு, காய்ந்ததும் முகம் கழுவுங்கள். இதை வாரம் ஒருமுறை செய்தால் முகப்பருவுக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம்.

வேப்பிலை ஆவி :
தண்ணீரை நன்றாகக் கொதிக்க வையுங்கள். அதில் வேப்பிலை இலைகளைப் போட்டு ஆறியவுடன் அந்தத் தண்ணீரில் தினமும் முகம் கழுவுங்கள்.
அதோடு, மாதம் இருமுறை துளசி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு, அந்த ஆவியில் முகத்தைக் காட்டுங்கள். இந்த இரண்டையும் தொடர்ந்து செய்தாலே நல்ல வித்தியாசம் தெரியும்.



Click it and Unblock the Notifications
