Latest Updates
-
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்..
வேகமாக முடி வளரச் செய்யும் 5 பொருட்கள் எவை தெரியுமா?
கூந்தல் வேகமாக வளர இங்கே சில முக்கிய பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முயற்சித்துப் பாருங்கள்.
ஷாம்பு, நீர், பொடுகு, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவைகள்தான் கூந்தல் வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள். உங்கள் கூந்தல் வளர்ச்சியை போதிய முறையில் தூண்டவில்லையென்றால் கூந்தல் வளர்ச்சி முழுவதுமே நின்று போக வாய்ப்பிருக்கிறது.

உங்கள் கூந்தல் செல்களை தூண்டப்படும்போது ரத்த ஓட்டம் அங்கே அதிகரித்து புதிய முடிகள் முளைக்கத் துவங்கும். அவ்வகையில் இயற்கையான பொருட்கள் எவை துரிதமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகின்றன என பார்க்கலாம்.

வெங்காயச் சாறு :
வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து அதனுடல் சிறிது தேன் கலந்து தலையில் த்டவுங்கள். 15 நிமிடம் கழித்து தலைமுடியை அலசவும். ஒரே வாரத்தில் முடி உதிர்தல் குறைவதை காண்பீர்கள்.

தேங்காய் பால் :
தேங்காய் பால் ஒரு கப் எடுத்து அதில் எலுமிச்சை சாறு அரை மூடி கலந்து தலையில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசுங்கள்.

முட்டை மாஸ்க் :
முட்டையை நன்றாக முழுவதும் நுரைக்கும்படி அடித்து அதில் ஆலில் எண்ணெய் மற்றும் தேன் கலந்து க்ரீம் போல் வரும்படி கலக்குங்கள். இந்த கலவையை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலையை அலசவும். கூந்தல் அடர்த்தியாக வருவது உறுதி

வெந்தயம் மற்றும் சீரகம் :
வெந்தயத்தையும் சீரகத்தையும் ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தயிர் கலந்து தலையில் தேய்க்கவும். வாரம் இருமுறை செய்தால் கூந்தல் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை :
நெல்லிக்காய் சாறு அரை கப் எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து மிதமான தீயில் காய்ச்சுங்கள். பிறகு அதில் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் கலந்து தலையில் தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
