Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
நீளமான முடி வளர்ச்சிக்கு பால் செய்யும் அற்புதங்கள் !!
பாலில் இருக்கும் அத்தியாவசிய தாதுப் பொருட்களால் உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.
எந்தப் பொருளையும் ஆரோக்கியமாக அழகாக பராமரிக்க வேண்டும் என்றால் நீங்கள் சிரத்தை எடுத்துக்கொள்வது அவசியம். அழகை பராமரிக்க என்றால் எல்லாரும் சருமத்தை மட்டுமே நினைக்கிறார்கள். ஆனால் கவனிக்க மறந்துவிடுகிற ஓன்று தலைமுடி.
தலைமுடியில் ஏதேனும் பிரச்சனை ஏற்ப்பட்டால், மாற்றங்கள் ஏற்ப்பட்டால் மட்டுமே தலைமுடியை கவனிக்கிறோம். நிறைய வேலைகள் இழுக்கும் என்றே பலரும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறோம். அதோடு அதிக செலவாகுமே என்ற பயமும் இருக்கும்.
இனி அந்தக் கவலை எதுவும் தேவையில்லை. வீட்டிலிருக்கும் ஒரு பொருளைக்கொண்டு தலைமுடியை எளிதாக பராமரிக்கலாம். பால், எல்லார் வீடுகளிலும் இருக்கும். இந்தப் பாலைக்கொண்டு உங்களின் தலைமுடியை எளிதாக பராமரிக்க சில குறிப்புகள்.

பால் :
பாலில் இரண்டு விதமான ப்ரோட்டீன் இருக்கிறது. வே( whey) மற்றும் கேசின் (caesin) இவை உங்கள் தலைமுடிக்க மிகுந்த ஆரோக்கியத்தை கொடுத்திடும். ப்ரோட்டீன் குறைவான உணவுகளை எடுத்துக் கொண்டால் உங்கள் தலைமுடி வலுவிலக்கும்.
உங்களது ஆரோக்கியத்தை பொறுத்தே தலைமுடியின் ஆரோக்கியமும் இருக்கும் என்பதால் நேரடியாக தலைமுடிக்கு ஊட்டச்சத்து ஏற்ற வேண்டும் என்று நினைக்காமல், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள ஆரம்பியுங்கள்.

வலு :
தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணம், போதிய ஊட்டச்சத்து இன்றி தலைமுடியின் வேர்க்கால்கள் வலுவிழப்பது தான். இதனை தவிர்க்க முட்டை, தேன் மற்றும் சிறிதளவு பால் சேர்த்து தலையில் ஹேர் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். இது தலையின் வேர்கால்களை வலுப்படுத்தும்.

முடி வளர்ச்சி :
முடியை உதிராமல் தடுத்தால் மட்டும் போதாது, புதிய முடியையின் வளர்ச்சியும் நமக்கு அவசியம். பாலில் அதிகப்படியான க்ளுடமைன் எனப்படுகின்ற ஒரு வகையான அமினோ அமிலம் இருக்கிறது. இது முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

ஸ்ட்ரைட்னிங் :
பாலைக் கொண்டு முடியை ஸ்ட்ரையிட்னிங் செய்ய முடியும். முக்கால் கப் பாலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். சாதாரண பால் பயன்படுத்தலாம், அல்லது தேங்காய் பால் பயன்படுத்தினால் இன்னும் சீக்கிரமாக பலன் கிடைக்கும். தலை முழுவதும் அந்தப் பாலை ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.

மசாஜ் :
முடியின் எல்லா பகுதிகளிலும் பால் சேருமாறு ஸ்ப்ரே செய்து தலைக்கு மசாஜ் செய்திடுங்கள். பாலுக்கு பதிலாக பால் பவுடரையும் ஹேர்பேக்காக போட பயன்படுத்தலாம்.
ஒரு மணி நேரம் காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் நன்றாக அலசிடுங்கள். ஷாம்பு போட்டு தலைக்குளித்தால் பால் வாசனை வராது.



Click it and Unblock the Notifications
