Latest Updates
-
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்..
தலைமுடி உதிர்வதை நிறுத்த நெல்லிக்காயை எப்படி பயன்படுத்தணும் தெரியுமா?
இங்கு தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில நெல்லிக்காய் ஹேர் மாஸ்க்குகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தலைமுடி அதிகம் உதிர்கிறதா, எதுவுமே அதற்கு தீர்வை வழங்கவில்லையா? கவலையை விடுங்கள். தலைமுடி உதிர்வதைத் தடுக்க ஏராளமான இயற்கை வழிகள் இருந்தாலும், வைட்டமின் சி அதிகம் நிறைந்த நெல்லிக்காயைப் போன்று எந்த ஒரு பொருளாலும் விரைவில் தீர்வளிக்க முடியாது.
இதற்கு நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மட்டுமின்றி, அத்தியாவசிய இதர வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களும் முக்கிய காரணமாகும். இதனால் தலைமுடி உதிர்வது குறைவதோடு, தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும் மற்றும் நரைமுடியும் கட்டுப்படுத்தப்படும்.
சரி, இப்போது தலைமுடி உதிர்வதைத் தடுக்க நெல்லிக்காயைக் கொண்டு எப்படியெல்லாம் ஹேர் மாஸ்க் போடுவது என்று காண்போம்.

மாஸ்க் #1
தேவையான பொருட்கள்:
நற்பதமான நெல்லிக்காய் - 3-4
சீகைக்காய் - 3-4

செய்முறை:
இரவில் படுக்கும் முன் 1/2 கப் நீரில் நெல்லிக்காய் மற்றும் சீகைக்காயில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் படும்படி நன்கு தடவி, குறைந்தது 1 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் நன்கு தேய்த்து அலச வேண்டும்.
குறிப்பாக இந்த மாஸ்க்கை போட்ட பின் ஷாம்பு பயன்படுத்தக் கூடாது. இந்த மாஸ்க்கை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்துவதன் மூலம் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மாஸ்க் #2
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் - 3-4
ஜொஜோபா பூக்கள் மற்றும் இலைகள் - 3-4

செய்முறை:
நெல்லிக்காய் விதைகளை நீக்கிவிட்டு, அத்துடன் ஜொஜோபா இலை மற்றும் பூக்களைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்து தலையில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

மாஸ்க் #3
தேவையான பொருட்கள்:
முட்டை - 1
நெல்லிக்காய் - 4
நீரில் ஊற வைத்த வெந்தயம் - 2 ஸ்பூன்

செய்முறை:
முதலில் முட்டையை ஒரு பௌலில் போட்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். நெல்லிக்காய் மற்றும் வெந்தயத்தை நன்கு அரைத்து முட்டையுடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி ஷவர் கேப் அணிந்து 1 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு கிளின்சர் பயன்படுத்தி தலைமுடியை நன்கு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை பின்பற்றினால், தலைமுடி உதிர்வது நிற்பதோடு, தலைமுடியும் நன்கு வளரும்.



Click it and Unblock the Notifications
