கருமையான நெடுங்கூந்தல் கொண்ட பெண்கள் இந்த உணவை தான் சாப்பிடுகிறார்களாம்!

Posted By: Lakshmi
Subscribe to Boldsky

பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி கருமையான, நல்ல வலுவான அடர்த்தியான கூந்தல் வேண்டும் என விரும்புவார்கள். அதற்காக வீட்டில் பல எண்ணெய்களையும், மருந்துகளையும் வீட்டில் வாங்கி குவித்து வைத்திருப்பார்கள். இறுதியில் பணம் விரையமானது தான் மிச்சம், எதுவும் பலன் கொடுத்திருக்காது.

உங்களது முடி முக்கியமான இரண்டு காரணங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. உங்களது மரபணுக்கள் மற்றும் ஆரோக்கியமான உணவுகள். இந்த பகுதியில் நீண்ட நெடுங்கூந்தல் வளர உதவும் சில உணவுகள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. சால்மன் மீன்

1. சால்மன் மீன்

தலைமுடிக்கு புரோட்டின் மிகவும் அவசியமானது. சால்மன் மீனில் புரோட்டின் அதிகளவில் உள்ளது. இது மிகக்குறைந்த கலோரி உணவாக உள்ளது. மேலும் உடலுக்கு முக்கியமாக தேவைப்படும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. இது தற்காலிகமான முடி உதிர்வை தடுத்து நிறுத்துகிறது. மேலும் முடி நன்றாக வளர உதவுகிறது.

2. பருப்பு வகைகள்

2. பருப்பு வகைகள்

முடியை அதிகமாக வளர செய்ய சைவப்பிரியர்கள் கருப்பு சுண்டல், பச்சை பாட்டாணி போன்ற பருப்பு வகைகளை சாப்பிடலாம். இதில் இரும்பு, ஜிங்க், பயோடின் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றில் உள்ள விட்டமின் பி முடி வளருவதில் முக்கிய பங்குவகிக்கிறது.

3. கோழி

3. கோழி

போன்லெஸ் சிக்கன் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான பெரும்பான்மையான சத்துக்கள் கிடைக்கின்றன. இது முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. இதில் ஜிங்க் அடங்கியுள்ளதால் உங்களுக்கு அடர்த்தியான முடி வளரும்.

4. கீரை வகைகள்

4. கீரை வகைகள்

கீரை வகைகளை சாப்பிடுவதன் மூலம் முடி வளர்ச்சிக்கு மட்டுமில்லாது உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. பச்சை கீரைகளில் அதிகளவு விட்டமின் சி மற்றும் ஏ அதிகளவில் அடங்கியுள்ளது.

5. நட்ஸ்

5. நட்ஸ்

நட்ஸ் உங்களது மூளைக்கு மட்டுமில்லாமல் முடிக்கும் சிறந்தது. பாதம் மற்றும் பிற நட்ஸ்களில் ஒமேகா 3-யின் நன்மைகள் பல அடங்கியுள்ளன. இவை முடியை கருமையாகவும் ஆரோக்கியமாகவும் வளர வைக்கின்றன.

6. எண்ணெய் வகைகள்

6. எண்ணெய் வகைகள்

நீங்கள் கூந்தலுக்கு எண்ணெய் வைப்பது கூந்தலை வலிமையாகவும், நன்றாகவும் வளரச் செய்யும் என்று எண்ணெய் தேய்ப்பீர்கள். ஆனால் முடி வளர எண்ணெய்யை உணவில் சேர்த்துக்கொள்வதும் அவசியம் என தெரியுமா? ஆம், ஆலிவ் ஆயில் போன்ற எண்ணெய்களை உணவில் சேர்த்துக்கொள்வது முடியை ஆரோக்கியமாக வளர வைப்பதோடு, இதில் கொழுப்பும் குறைந்த அளவே உள்ளது.

7. பால் மற்றும் யோகார்ட்

7. பால் மற்றும் யோகார்ட்

முடி வளர்வதற்கு பால் பொருட்கள் ஒரு மிக முக்கிய காரணமாக இருக்கும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பால் அல்லது யோகார்ட் எடுத்துக்கொள்வது முடியை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வளர வைக்கும்.

8. முட்டையின் மஞ்சள் கரு

8. முட்டையின் மஞ்சள் கரு

முட்டையில் அதிகமாக புரோட்டின் உள்ளதால் நீங்கள் முட்டையின் வெள்ளைக்கருவை தலையில் தேய்ப்பீர்கள். அதே சமயம் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவது முடி வளர்ச்சியை தூண்டும் என்பது பற்றி தெரியுமா? சக்கரை நோய் மற்றும் இதய நோய் இல்லாதவர்கள் தாராளமாக தினமும் ஒரு முட்டையை காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

eight super foods for amazing hair growth

here are the some for hair growth
Story first published: Monday, July 10, 2017, 15:23 [IST]