Latest Updates
-
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா?
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. ஒரே மாதத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை பாப்பீங்க..
Weight Loss Vegetable Barley Kanji Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதற்காக டயட்டில் இருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் டயட்டில் அவசியம் ஒருசில கஞ்சியை சேர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பார்லியைக் கொண்டு கஞ்சி தயாரித்து குடிக்கும் போது, உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும்.

குறிப்பாக அந்த கஞ்சியுடன் காய்கறிகளை சேர்த்து உட்கொள்ளும் போது உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் பிற சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக இந்த கஞ்சியை தொடர்ந்து தினமும் காலையில் எடுத்து வரும் போது, உடல் எடையில் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.
இந்த வெஜிடேபிள் பார்லி கஞ்சி குறித்து விஎன்எஸ்கிச்சன் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த வெஜிடேபிள் பார்லி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜிடேபிள் பார்லி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பார்லி அரிசி - 100 கிராம்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சிறிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* சிறிய கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
* பட்டாணி - 1/4 கப்
* ஸ்வீட் கார்ன் - 1 கையளவு
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* பச்சை மிளகாய் - 1
* சுடுநீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பார்லி அரிசியை நீரில் 2-3 முறை நன்கு கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி 8 மணிநேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்க
வேண்டும்.
* 8 மணிநேரம் கழித்து, பார்லி அரிசியில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு,
மிக்சர் ஜாரில் அதை சேர்த்து சிறிது நீரை ஊற்றி கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் நறுக்கிய
கேரட், பீன்ஸ், பட்டாணி, ஸ்வீட் கார்ன் சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பார்லி அரிசியை சேர்த்து கிளறி,
தேவையான அளவு நீரை ஊற்றி, பச்சை மிளகாயை கீறி சேர்த்து, குக்கரை மூடி,
3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் தேவையான அளவு சுடுநீரை
ஊற்றி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் மிளகுத் தூளை தூவி
கிளறினால், சுவையான வெஜிடேபிள் பார்லி கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications
