Latest Updates
-
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்! -
பாலக் புலாவ் ரெசிபி - இந்த சத்தான புலாவை ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
பழைய விமானங்கள் ஓய்வு பெற்ற அவற்றின் நிலை என்னவாகும் தெரியுமா? இப்படிலாம் கூட பண்ணுவாங்களா? -
ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: நாளை முதல் அடுத்த 90 நாட்கள் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, 1 மாசத்துல உடல் எடை குறைவதை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு பெரிய நஷ்டம் தேடிவரப்போகுதாம் -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் பெரிய இழப்புகளை சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
லான்ச்பாக்ஸிற்கு ஒருடைம் இந்த பீட்ருட் தேங்காய் சாதம் செய்யுங்க - குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
உங்கள் கூந்தல் அடர்த்தியாகனுமா? வாரம் ஒருமுறை இந்த சித்த மருத்துவ குறிப்புகளை யூஸ் பண்ணுங்க!!
கூந்தல் அடர்த்தியாக வளர எத்தனையோ சிகிச்சைகள் இருந்தாலும் சித்த மருத்துவம் நல்ல பலன்கலை தரக் கூடியது. அவற்றால் பக்க விளைவுகளும் இல்லை. அவ்வாறு கூந்தலை வளரச் செய்யும் வழிகளை இங்கு காண்போம்.
கூந்தல் மிருதுவாக போஷாக்கோட இருந்தா தனி அழகை தரும். கூந்தல் அடர்த்தியாக வளர வாரம் ஒரு நாள் தலைக்கு மாஸ்க் போன்ற பேக்கை பயன்படுத்துங்கள். தினமும் நன்றாக படிய தலை சீவினால் ரத்த ஓட்டம் பாயும். அடர்த்தியாகவும் வளரும்.
அதை தவிர உங்கள் கூந்தல் அடர்த்தியாக வளர இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள்.

அடர்த்தியாக வளர:
வெந்தயம் மற்றும் குன்றி மணியை பொடி செய்து வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் போட்டு மூடி விடுங்கள்.
ஒரு வாரம் கழித்து அந்த எண்ணெயை உபயோகப்படுத்தத் தொடங்குங்கள். இந்த எண்ணெய் வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் முடி அடர்த்தியாக வளரும்.

முடி உதிர்தல் :
முடி உதிர்தலை தடுத்தாலே பாதி பிரச்சனை போகும். வேப்பிலையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே விட்டு மறு நாள் அந்த நீரினால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்தால் முடி உதிர்தல் நிற்கும்.

அதிமதுரம் :
அதிமதுரப் பொடியை நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். இதனுடன் கால் பாகம் பால் கலந்து தலைமுடியில் தடவி 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசினால் கூந்தல் நன்றாக வளரும்.

கருவேப்பிலை சீரகம் :
கருவேப்பிலை கைப்பிடி மற்றும் 2 ஸ்பூன் சீரகம் எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். அதனை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறியபின் வடிகட்டி அந்த எண்ணெயையை உபயோகித்து வந்தால் கூந்தல் கருகருவென அடர்த்தியாக வளரும்.

போஷாக்கு பெற:
பப்பாளியின் சதை பகுதியை மசித்து அதனுடன் யோகர்ட்டை கலந்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவினால் வறட்சி நீங்கி கூந்தல் மிருதுவாகும்.



Click it and Unblock the Notifications