Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
மற்றவர் பொறாமைப்படும்படி கூந்தல் வளர்ச்சி வேண்டுமா? உங்களுக்கான குறிப்புகள்!!
கூந்தலை சரிவர கவனிக்காவிட்டால் முடி வளர்ச்சி ஒரு கட்டத்தில் முழுவதும் நின்று போய்விடும். என்ன செய்தாலும் அடர்த்தி மற்றும் நீளமாக வளராது. இதன் அறிகுறிதான் முடி உதிர்தல்.
முடி உதிர்வது இயற்கை என்றாலும் கொத்து கொத்தாய் உதிர்ந்தால், நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள். சிறு வயதில் வளர்வது போல், வளர்ந்தவுடன் இருக்காது. உணவு, டென்ஷனான வாழ்க்கை , ரசாயன்ங்கள் ஆகியவ்ற்றால் முடி வளர்ச்சி நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகும்.

அத்ற்கு வாரம் ஒருமுறை நீங்கள் பராமரித்தால் கூட போதும். பழையபடி கூந்தல் வளர்ச்சியை பெறலாம். உங்களுக்காக சில குறிப்புகள்.
அடர்த்தியாக வளர :
சீயக்காயை சாதம் வடித்த கஞ்சியில் கலந்து உபயோகித்தால் கூந்தலுக்கு தேவையான ஊட்ட சத்து கிடைக்கும்.
செம்பருத்தி நன்றாக காயவைத்து பொடி செய்து கொள்ளுங்கள். இதை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி போங்கும்போது அடுப்பை அணைத்துவிடவும்.
இதனை கண்ணாடி பாட்டிலில் போட்டு சில நாட்களுக்கு இளம் வெயிலில் வைத்து பின்னர் வடிகட்டவும். இந்த எண்ணெயையை தினமும் ஸ்கால்ப்பில் தேய்த்து வாருங்கள். தலைமுடி உதிர்தல் நின்று விடுவதோடு, மற்றவர்கள் பொறாமைபடும்படி மிளிரும் கூந்தல் கிடைக்கும்.
முடி உதிர்வதை தடுக்க :
15 நாட்களுக்கு ஒரு முறை சீயக்காயுடன், வெந்தயம், பச்சரிசி, செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ, ஆரஞ்சு பழத்தோல், கறிவேப்பிலை இவற்றை அரைத்து பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வது தடுக்கலாம்.
கூந்தல் பொலிவேயில்லாம ஏனோதானொவென்று இருக்கிறதா? இது சூப்பர் சாய்ஸாக இருக்கும். வாரம் ஒருமுறை முட்டை, நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் , சிறிது தேன் ஆகியவற்றை நன்றாக அடித்து கலக்கி, இதனை தலையில் தேயுங்கள்.
அரை மணி நேரம் கழித்து குளித்துப் பாருங்கள். பட்டு போன்று உங்கள் கூந்தல் மிருதுவாக இருக்கும். முடிக்கு புரோட்டீன் சத்து கிடைக்கும்.
பொடுகு தொல்லைக்கு :
நல்லெண்ணெயில் அரை மூடி எலுமிச்சைச்சாறு பிழிந்து அதைத் தேய்த்து 2 மணி நேரம் ஊற வைத்து பிறகு தலைக்கு குளித்தால் பொடுகுத் தொல்லை குறைந்து விடும்.
நரை முடி கருமையாக வளர :
கரிசிலாங்கண்ணி இலையை அரைத்து அதை தலையில் தேய்த்து 1 மணி நேரம் ஊறவைத்து குளித்தால் முடி கருமையாகவும் நீண்டும் வளரும்..
வழுக்கை தலையில் முடிவளர டிப்ஸ்:
சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் அல்லது நல்லேண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தடவி வந்தால் முடிவளரும்.நல்லேண்ணெய் உடலுக்கு குளிர்சியைத்தரும்.
குறிப்பு-காய்ச்சிய பின்னர் கீழாநெல்லி வேரை அதேஎண்ணெயில் போட்டு வைக்க வேண்டும்.அப்போது தான் எண்ணெயின் தன்மை மாறாமல் இருக்கும்.



Click it and Unblock the Notifications




